27 June 2014

ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி!

ருவேதா சலாம்
ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி!
நாட்டின் மக்கள் தொகையில், பெண்கள், 50 சதவீதம் உள்ளனர். பெண்கள் தான், சமூக மாற்றத்தின் முதல் பாதுகாவலர்கள். பெண்கள் படித்தால், சிறந்த கல்வியும், ஆரோக்கியமும் நிறைந்த அடுத்த தலைமுறை உருவாகும். நாட்டின் வளர்ச்சியில், பெண் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.இதனிடையே பல வட மாநில மக்களின் நீண்ட நாள் கனவான இஸ்லாமிய பெண் ஐபிஎஸ் அதிகாரி என்பது ஐம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ருவேதா சலாம் என்பவர் மூலம் நனவானது.
மேலும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி ஜம்முவைச் சேர்ந்த ஷாஹ் பெய்சல் என்பவர் தேர்ச்சி பெற்றதை அடுத்து, அந்த மாநிலத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் இந்த தேர்வுகளை எழுதத் துவங்கினர். இந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தில் எல்லைப் பகுதி கிராமமான பர்கினைச் சேர்ந்த தூர்தர்ஷனின் முன்னாள் உதவி இயக்குநர் ருவேதாவின் மகள், ருவேதா சலாம் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி காவல்துறைக்கு தகுதி பெற்றார்.
இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் பயிற்சி முடித்த ருவேதாவுக்கு தமிழகத்தில் அதிலும் கன்யாகுமரியில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழகம் வந்து பணியாற்ற உள்ளார்.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home