நம்பினால் நம்புங்கள்
* குழந்தைகள் ஓராண்டில் ஏறக்குறைய 50 லட்சம் முறை கண் இமைக்கிறார்கள்.
* சிங்கங்களை விட நீர்யானைகள் அபாயமானவை.
* இமயமலைத் தொடர் ஆண்டுக்கு அரை இன்ச் உயரம் என்கிற அளவில் வளர்கிறது.
* துருக்கியில் 8,891 அடி நீளமுள்ள கேக் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது 114 டென்னிஸ் கோர்ட்டுகளின் நீளத்துக்குச் சமம்!
* மிக வேகமான வல்லூறுவால் ஒரு ரேஸ் கார் வேகத்துக்குப் பறக்க முடியும்.
* கடந்த 5 நிமிடங்களில் நம் பூமி 5 ஆயிரம் மைல் தொலைவு பயணம் செய்திருக்கிறது.
* பண்டைய எகிப்தில் மம்மிகளின் மூக்கு வழியாக மூளை வெளியே எடுக்கப்பட்டு விடும்.
* மனிதர்களால் 10 ஆயிரம் வெவ்வேறு வாசனைகளைப் பிரித்து உணர முடியும்!
* சீனாவில் நடைபெற்ற ஒரு அகழ்வாராய்ச்சியில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நூடுல்ஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
* 3 கோடியே 30 லட்சம் மக்கள் கைகோர்த்து நின்றால் நிலநடுக்கோட்டை ஒரு சுற்று சுற்றி விடலாம்!
* சராசரியாக ஒரு 500 ரூபாய் நோட்டு 9 ஆண்டு காலம் புழங்குகிறது.
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home