12 September 2014

சுறுசுறுப்புக்கு யோகா...

யோகா உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும். யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால், சுவாசம் ஒழுங்காக இயங்க ஆரம்பித்து, உங்களது இளமையின் காலம் நீடிக்கும்.

யோகா பயிற்சி நமக்கு தன்னம்பிக்கையுடன் முன்னோக்கி செல்லும் ஆற்றலை கொடுக்கிறது. தினமும் தவறாமல் பயிற்சி செய்தால் கோபம், எதிர்மறை எண்ணங்கள் கட்டுப்படும். யோகாசனப் பயிற்சியால் உடல் எடை குறைகிறது. மேலும் செயற்கையை தவிர்த்து, எவ்வித பிரச்சினையும் இல்லாமல், இயற்கையாக உடல் எடை குறைய யோகா மட்டுமே சிறந்த வழி.

யோகா செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது. உடல் எடை குறைந்து, தொடை, கால், தண்டுவடம் மற்றும் இடுப்பு தசைகள் வலுவடைகிறது. இடுப்பு மெலிந்து உடல் அழகிய வடிவம் பெறுகிறது. வயிற்று உறுப்புகள் நன்றாக வேலை செய்கிறது. கழிவுகள் இலகுவாக வெளியேறுகிறது. ஜீரண சக்தி அதிகரிக்கிறது. வாயுக்கோளாறு, உடல் மந்த நிலைகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது.

முழங்கால், மூட்டுவலிகள் பிரச்னைகள் தீரும். சித்தாசனம், பத்மாசனம் என்ற தியான ஆசனங்களால் மனம் ஒருநிலைப்படுகிறது. தைராய்டு சுரப்பிகள் நன்றாக வேலை செய்கிறது. வயிற்று பகுதி உறுப்புகள், சிறுநீரகங்கள், அட்ரீனல் சுரப்பிகள், கருப்பை பிதுக்கம், புராஸ்டேட் சுரபி பிரச்னைகள் தீரும். சுவாசம் சீரடைந்து புத்துணர்ச்சி அடைகிறது.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home