11 September 2014

ஹலாசனம்

யோகாசனம் உடலை வலிமை அடையச் செய்கிறது. யோகாசனம் உடலை சீராக்குகிறது. நம் ஒவ்வொருவருக்கும் சித்தர்கள் கண்டறிந்த இந்நெறி கிடைத்தற்கரிய வரப்பிரசாதம் ஆகும். நாம் விடாமல் யோகாப்பயிற்சி செய்வோமானால் முதிய வயதிலும் இளமையிடன் இருக்கலாம். யோகாப் பயிற்சியானது மன இறுக்கத்தை நீக்கி நரம்பு தளர்ச்சியை போக்கி ஆரோக்கியத்தையும் அழகையும் கொடுக்கிறது. யோகாசனம் என்பது ஒரு விஞ்ஞான முறை பயிற்சியாகும். உடலை நீட்டுதல், வளைத்தல், இறக்கத்தை தளர்த்துதல், ஆழ்ந்த மூச்சு, அரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துதல், நரம்புகளை ஊக்குவித்தல் என்ற அடிப்படையில் யோகாசனம் உள்ளது. ஆயினும் யோகாசனம். முழுக்க முழுக்க உடற்பயிற்சியாகாது. மனம், மூச்சு, மூளை ஆகியவற்றுடன் இணைந்து ஏற்படுத்தப்படும் செயலாகும். இன்று நாம் பார்க்கும் ஆசனம் ஹலாசனம்

ஹலாசனம் பெயர் காரணம்: ஹலா என்றால் ஏர் கலப்பை என்பது பொருள். நிலத்தில் பயன்படும் ஏர் போன்று வடிவத்தில் இருப்பதால் இதற்கு ஹலாசனம் எனப் பெயர் பெற்றது.

எப்படி செய்ய வேண்டும் ஹலாசனம்


முதலில் சர்வாங்காசனத்தை செய்ய வேண்டும். பின் படிப்படியாக மூச்சை வெளியிட்டுக் கொண்டே கால்களை வளைக்காமல் தலைக்கு மேல் கொண்டு சென்று கால் விரல்களைத் தரையில் பதிக்கவும். தலைக்கும், தரையில் பதித்த பாதத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கூடுமான வரை அதிகரிக்கவும்.

பிறகு இரு கைகளின் விரல்களை கோர்த்து முதுகுக்கு அடியில் வைத்துக் கொள்ளவும். இந்த நிலையில் வயிற்றுப் பகுதியில் நல்ல அழுத்தம் கொடுக்கும் வகையில் புட்டத்தை நன்றாக மேலே -தூக்கி கால்களை நீட்டவும். முடிந்தால் தரையை தொட்டுக் கொண்டிருக்கும் கால்களை தரைக்கு இணையாக கிடைமட்டத்தில் இருக்கும்படி வைத்துக் கொள்ளவும். இயன்றவரை சாதாரண சுவாசத்தில் இருந்து விட்டு பின்பு சர்வாங்காசன நிலைக்குத் திரும்ப வேண்டும்.

பலன்கள் என்ன?

முதுகு நன்றாக வளைக்கப்படுவதால் முதுகுப் பகுதிக்கு இரத்த ஒட்டம் அதிகரித்து முதுகு வலுவடைகிறது. நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்க்கியை அளித்து நரம்புத் தளர்ச்சியை நீக்குகிறது. கல்லீரல் மற்றும் மண்ணீரலின் செயல் தன்மையை சீர் செய்து செரிமான மற்றும் உட்கிரகித்தல் பணியை செவ்வனே செயல்படுத்துகிறது. கணையத்தின் சுரப்புத் தன்மையினை சீர் செய்து உடலைக் காக்கிறது.

சிறுநீரகம் வலிமையும், புத்துணர்வும் பெறகிறது.கல்லீரலை வன்மைபடுத்துவதால் இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.  நுரையீரலை வன்மைபடுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. பெண்களின் மாதவிடாய் கோளாறுகளையும், கருப்பை கோளாறுகளையும் சரி செய்கிறது.நாளமில்லா சரப்பிகளின் இயக்கத்தை சீர் செய்து, மலட்டுத்தன்மையை போக்குகிறது. முள்ளந்தண்டு எலும்புகள் மற்றும் மூட்டுகளின் நோய்களையும் சீராக்க உதவுகிறது.         


-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home