சலபாசனா
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமான ஓன்றாக அமைவது யோகா. மனஅமுத்தத்தை
போக்கும் சக்தி யோகாவுக்கு இருக்கிறது என்பதை அறிந்தும் நம்மில் பலரும்
யோகாவை கடைப்பிடிப்பதில்லை. தினமும் சில மணித்துளிகள் அமர்ந்து யோகா செய்து
வந்தால் மனஅழுத்தம் நீங்கி மனம் அமைதி பெரும். இன்று நாம் பார்க்கும்
ஆசனம் சலபாசனா.
முதலில் வயிற்றுப்பகுதி தரையில்படும்படி படுக்க வேண்டும். கைகள் பக்கவாட்டில் வைக்க வேண்டும். நெற்றி தரையில் பட வேண்டும். மார்புப் பகுதி தளர்வாக இருக்க வேண்டும். கால்களை ஒன்றாகச் சேர்த்து வைத்து, மூச்சை உள்ளிழுத்த வாறு உடலின் மேல்பகுதி, கால்களை மேலே தூக்க வேண்டும். அதே நேரத்தில், கைகளை உடலின் பக்கவாட்டி லிருந்து, அரை வட்டமடித்து முன்பக்கம் தலைக்கு நேர் வந்து, உள்ளங்கைகளைச் சேர்க்க வேண்டும்.
தலையை மேல்புறமாக உயர்த்த வேண்டும். இப்போது வயிற்றுப்பகுதி மட்டும்தான் தரையில் படும். ஓரிரு வினாடிக்குப் பிறகு, மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்கு வரவேண்டும். ஆறு முதல் எட்டு முறை இதுபோல் செய்ய வேண்டும். (இந்த ஆசனத்தை செய்ததும் திரும்பி படுத்து தேவையெனில் சிறிது ஓய்வெடுத்தபிறகு அபானாசனா செய்யலாம்.)
பலன்கள்:
முதுகெலும்பு வளைந்து நிமிர்வதால் நன்கு அசைவைப் பெறுகின்றன. கீழ் முதுகு, தோள்பட்டை, கைகள் பலம் பெறும். கழுத்துப் பகுதி வேலை செய்யும். வயிற்றுப்பகுதி மசாஜ் செய்யப்படுவதால் அதுசார்ந்த உறுப்புகள் நன்றாக வேலை செய்யும்.
-அஷ்ரப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home