16 September 2014

கண் மருத்துவம்

கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகம் உள்ள வேலையில் இருக்கிறேன். இரவில் கண்கள் துடித்துக் கொண்டே இருக்கின்றன. சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறேன். இதைச் சரி செய்ய முடியுமா?

ஆலோசனை சொல்கிறார் கண் மருத்துவர் ஸ்ரீகாந்த்...

தொடர்ந்து கம்ப்யூட்டரை பயன்படுத்தினால் வறண்ட தன்மை ஏற்பட்டு கண்களில் பாதிப்பு உண்டாகும். கால்சியம் குறைபாடு இருந்தாலும் இந்தப்  பிரச்னை வரும். கம்ப்யூட்டர், டி.வி. போன்றவற்றை உறங்குவதற்கு 2 மணி நேரம் முன்பாக அணைத்து விடுங்கள். இரவில் அதிக நேரம் செல்போனை  பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் நல்லது. கால்சியம் குறைபாடு எனில் உடனடியாக கண் மருத்துவரை சந்திக்கவும். இந்த விஷயத்தில் அலட்சியமாக  இருந்தால் தொடர்ந்து பாதிப்புகள் ஏற்படும்.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home