31 October 2013

உலகின் சக்திவாய்ந்த பெண்களில் சோனியாவுக்கு 3–வது இடம்



அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை, உலகின் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்கள், நாட்டின் தலைவர்கள், வர்த்தக ஜாம்பவான்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. 72 பேர் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு 21–வது இடம் கிடைத்துள்ளது.
அதே நேரத்தில், இந்த பட்டியலின்படி சக்தி வாய்ந்த பெண் தலைவர்களில், சோனியா 3–வது இடத்தில் இருக்கிறார். சோனியாவுக்கு முன்பாக ஜெர்மனி அதிபர் அங்கேலா மெர்கல் முதல் இடத்திலும், பிரேசில் ஜனாதிபதி டில்மா ரவுசப் 2–வது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில், பிரதமர் மன்மோகன்சிங், சோனியாவை விட 7 இடங்கள் பின் தங்கி உள்ளார். போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள மற்றொரு பட்டியலில் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில், சோனியாவுக்கு 9–வது இடம் கிடைத்துள்ளது.
போர்ப்ஸ் பத்திரிகையின் இணையதளத்தில் உள்ள சோனியாவின் வாழ்க்கைக்குறிப்பில், பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் அவருக்கும் இடையே இருந்து வருவதாக கூறப்படும் கருத்து வேறுபாடு பற்றி குறிப்பிடப்பட்டு இருப்பதுடன், அடுத்த வாரிசான ராகுல் காந்தி, அவசர சட்ட விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கை பகிரங்கமாக மட்டம் தட்டி பேசிய தகவலும் இடம் பெற்று உள்ளது

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home