"அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக் கூடாது!

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2013
காவல்துறை ஆணையர் கவனத்துக்கு...
இது உண்மையாய் இருக்கக் கூடாது!
10.10.2013 (சென்னைப் பதிப்பு) நாளிட்ட தினத்தந்தி பக்கம் 7இல் கீழ்க்கண்ட செய்தி வெளி வந்துள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் புதிய இடத்திற்குச் செல்லுகிறது என்று செய்தியை வெளியிட்ட தினத்தந்தி ஏற்கெனவே போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலை புதிய கமிஷனர் அலுவலகத்திற்குக் கொண்டு வர முயற்சி நடக்கிறது. ஆனால் அதற்கு எதிர்ப்புக் கிளம்பியதால் புதிய கமிஷனர் அலுவலகத்தில் புதிய விநாயகர் கோயில் கட்ட முடிவு செய்துள்ளனர் என்பதுதான் அந்தச் செய்தி.
இது உண்மையாக இருக்கக் கூடாது என்பதுதான் நமது எதிர்பார்ப்பு! அப்படி அரசு அலுவலக வளாகத்திற்குள் புதிதாகக் கோயில் கட்டினால் அரசின் மதச் சார்பின்மைக் கொள்கைக்கு எதிரானது மட்டுமல்ல, சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கும் எதிரானதாகும்.
திருநெல்வேலி மாவட்ட தாழையூத்து சங்கர் நகரைச் சேர்ந்த எஸ்.பி. முத்துராமன் தாக்கல் செய்த பொது நல வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஃப்.எம். இப்ராகிம் கலிபுல்லா, கே.பி.கே. வாசுகி ஆகியோர் தெளிவாகவே தீர்ப்புக் கூறியுள்ளனர்.
அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக் கூடாது என்று ஏற்கெனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை. அரசு அலுவலக வளாகங்களில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்புக் கூறினர். (‘The Hindu’ - 18.3.2010)
காவல்துறையே சட்டத்தை மீறாது என்று எதிர்பார்க்கிறோம்.
---------------------------"விடுதலை” 11-10-2013
நன்றி : தமிழ் ஓவியா

இந்நேரம் இணையத்தளம் : http://inneram.com/
இந்நேரம் பேஸ்புக் : https://www.facebook.com/inneram?fref=ts
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home