ஜி..ஜி...5G.ஜி...!
தலைப்பே சற்று வித்தியாசமானதுதான்... ஆனால் தொடர்புடையது...எங்குப் பார்த்தாலும் தகவல் தொடர்பு சாதனங்களுடன், இணைய இணைப்பைப் பயன்படுத்துபவர்களே அதிகம் தென்படுகிறார்கள்...
கணினியும், இணையமும் சேர்ந்த பிறகு இந்த உலகம் உள்ளங்கையில் உருண்டோடத் தொடங்கியது... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பரிமாணங்கள்.... மிகப்பெரியபரிணாம வளர்ச்சிகள்...
நிமிடத்திற்கு நிமிடம்.. நொடிக்கு நொடி.. புதிய வசதிகள், நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே உள்ளன.
உலகையே இணைக்கும் இணைய இணைப்புத் தொழில்நுடப்பத்திலும் அதே வேகம்.. அதே வளர்ச்சி....தகவல்களைப் பரிமாறக்கூடிய வேகத்தை அதிகமாக்கி... அதிகமாக்கி மிகப்பெரிய புரட்சியையே ஏற்படுத்திவிட்டார்கள்..
ஆரம்பத்தில் இணையத்தின் வேகம் ஆமைபோல இருந்தது.. பிறகு ஜெட்வேகத்தில் பயனித்தது.
இப்பொழுது அதைவிட...அதைவிட... அதைவிட.... என்று மைக்ரோ செகண்ட் வேகத்தில் பயணிக்கிறது.
ஒவ்வொரு புதிய அடுத்தக்கட்ட நகர்விற்கும் இரண்டாம் தலைமுறை (2nd Generation), மூன்றாம் தலைமுறை (3rd Generation), நான்காம் தலைமுறைக்கும் (4th Generation)என பெயரிட்டுள்ளனர். இவற்றை 2G, 3G, 4G, என அழைக்கின்றனர்.
இங்கு G என்பது Generation என்பதைக் குறிக்கிறது.. மூன்றாம் தலைமுறை வலையமைப்பே முற்றிலும் உலகெங்கும் பரவாத நிலையில் அதனுடை யஅடுத்தக்கட்ட படிகளான 4G ம் வந்துவிட்டது....
தற்பொழுது 5G வலையமைப்பும் ஆய்வில் உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை எடுக்கத்தொடங்கிவிட்டது Huawei நிறுவனம். இந்த வலையமைப்பின் ஆராய்ச்சிக்காக ஆறு நூறு மில்லியன் டாலர் செலவிட தயாராகி வருகிறது ஹூவாய் நிறுவனம்.
இதற்கு முன்பே சாம்சங் நிறுவனம் 5G கம்பியில்லா நுட்பத்தை சோதனை செய்து, அவற்றில் வெற்றிப்பெற்றதையும் அறிவித்திருந்தது.
இந்த புதிய 5G தொழில்நுட்பத்தின் மூலம் 2 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் 1 Giga Bye டேட்டா 1 செகண்ட்டுக்குள் பறிமாறப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக சாம்சங் அறிவித்திருந்தது.
இனி கண்ணிமைக்கும் நேரத்தில் மிகப்பெரிய டேட்டாக்களை பரிமாறிக்கொள்ள முடியும். இவ்வளவு வேகத்தில் இயங்கும் இணையத்தில் Games, Ultra HD Real time Streaming போன்றவைகளை எந்த ஒரு தங்குதடையில்லாமல் மேற்கொள்ள முடியும்.
அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home