3 December 2013

எத்தனை எளிதில் மறக்கிறோம், வரலாறுகளை?



1845 இலிருந்து 1849 வரையிலான காலகட்டத்தில், அயர்லாந்த பஞ்சத்தினாலும், நோய்களாலும் பீடித்திருந்தது. அயர்லாந்தின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த இந்த வறுமையின் தாக்கம் மிக அதிகமானதும் கூட. அந்தக் காலகட்டத்தில் நோயாலும் பஞ்சத்தினாலும் இறந்தவர்கள் ஒரு மில்லியன் மக்கள், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் ஒரு மில்லியனுக்கும் மேல். உதுமானிய கிலாஃபாவின் ஆட்சி, அன்றைக்கு சுல்தான் கலீஃபா அப்துல் மஜீதிடம் இருந்தது. உடனே ஆணையிட்டார், £10,000 ஸ்டெர்லிங் பவுண்டுகளை அயர்லாந்து விவசாயிகளுக்கு அனுப்பிட. ஆனால் மனங்களிலும், நல்லெண்ணங்களிலும் கடும்பஞ்சத்தில் இருந்த ராணி விக்டோரியா அம்மையார், கலீஃபா அப்துல் மஜீத்திடம் £1000 பவுண்டுகளை மட்டுமே அனுப்புமாறு கோரிக்கை விடுத்தார். ஏனெனில் அவர்களிடமே £2000 மட்டும் தான் அனுப்பும் அளவிற்கு வசதி இருந்தது(!!) அப்போது. ஆனால், இறந்துகொண்டிருப்பவனிடமும் அடித்துத் தின்பது என்னும் கூற்றுக்கேற்ப, அதே காலகட்டத்தில், 147 பேரல்கள் - பன்றி இறைச்சி, 986 சாக்கு மூட்டைகள் - ஹேம் (பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி), 27 சாக்கு மூட்டைகள் - பேகன் (பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி), 528 பெட்டிகள் முட்டை, 1,397 டப்பாக்களில் வெண்ணெய், 477 சாக்குமூட்டைகள் ஓட்ஸ், 720 சாக்குமூட்டைகள் மாவு, 380 சாக்குமுட்டைகள் பார்லி, 187 மாடுகள், 296 ஆடுகள், 4,338 மற்ற உணவு-தானியங்கள் எல்லாம் ஒவ்வொரு தினத்திலும் கார்க் துறைமுகத்திலிருந்து இங்கிலாந்துக்கு வலுக்கட்டாயமாக பயணப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. (தகவல் தேதி: 14, செப்டம்பர், 1847) (மூலம்: The Irish Holocaust 1850-1870 புத்தகம்.) எனினும், சுல்தான் அப்துல் மஜீதும் £1000 மட்டும் அனுப்பி விட்டு ரகசியமாக 3 கப்பல்கள் முழுவதுமாக உணவுப்பண்டங்களையும் அனுப்பினார். இங்கிலாந்து அரசு அதனைத் தடுக்க கடுமையான முயற்சிகள் எடுத்தும், அவை தோல்வியிலேயே முடிந்து, அவசரகால உதவிகள் அனைத்தும் ட்ரொகேடா துறைமுகத்தை (Drogheda harbour) வந்தடைந்தன. மா ஷா அல்லாஹ். மனித விழுமியங்களே இல்லாத / சக மனிதர்களுக்கு உதவாத / சமூக நற்சிந்தனை இல்லாத ஓர் சமூகம் என இஸ்லாமிய சமூகத்தை நோக்கி அம்புகள் பாய்ந்து வரும் இவ்வேளையில், ஒரு கிறிஸ்தவ நாட்டிற்கு (வலிமை வாய்ந்த கிறிஸ்தவ வம்சத்தால் தடைகள் வந்தபோதும்) துணிந்து பேருதவி செய்த முஸ்லிம் ஆட்சியாளரை நினைவு கூர்வது இன்றியமையாக் கடமையாகிறது நம் மேல். இந்த உதவிக்காக அயர்லாந்து அரசு நன்றி கூறிய விதமும் போற்றத்தக்கது. உதுமானிய அரசின் உதவியை நினைவு கூறும் விதத்தில் தங்கள் நாட்டு மரபுச் சின்னங்கள் பொருந்திய மேலங்கி யில் (Coat of arms), உதுமானிய பிறைச்சின்னத்தையும், நட்சத்திரத்தையும் சேர்த்து வடிவமைத்தார்கள். அந்த சின்னம் இன்றைக்கும், அயர்லாந்தின் காற்பந்து குழாமின் உடைகளில் பொறிக்கப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்
.
நன்றி: ஜவ்வாத் யாக்கூப்
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home