வரப்போகுது பேஸ்புக் பணப்பரிமாற்றம்
இன்றைய உலகில் பல்வேறு சமூக வலைதளங்கள் புழக்கத்தில் இருந்தாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வலைதளங்களின் வரிசையில் பேஸ்புக் முதலிடத்தில் இருந்து வருகிறது. வலைதளங்களை பயன்படுத்துபவர்களில் 80 சதவீதம் பேர் பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் கூகுள் வலைதளத்திற்கு இணையாக பேஸ்புக்கும் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களை கவருவதற்காக பல்வேறு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி அதை இலவசமாகவும் வழங்கி வரும் பேஸ்புக் வலைதளம், தற்போது மேலும் ஒரு புதிய சேவையை துவக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அது என்னவென்றால், பேஸ்புக் இணையதளம் மூலம் வங்கியில் நடப்பது போல பணிப்பரிமாற்றம் செய்யும் சேவையை அறிமுகப்படுத்துகிறது. இந்த சேவை வங்கிகள் அளிக்கும் “இன்டர்நெட் பேங்கிங்” வசதியை போன்றதாகும். இதன் மூலம் உலகின் எந்த மூலைக்கும் ஒரு நொடியில் பணத்தை அனுப்பிவிட முடியும். இந்த சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களின் பேஸ்புக் கணக்கையே பயன்படுத்தி பணப்பரிமாற்றங்களை செய்துகொள்ளலாம். தற்போது இந்த சேவையை துவக்குவதற்கான ஆயத்த பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்த பணிகள் நிறைவடைந்ததும் இலவசமாகவே, இவ்வசதியை அனைத்து பேஸ்புக் வாடிக்கையாளர்களும் பெறலாம். பேஸ்புக் நிறுவனம் இச்சேவையை முதலில் ஐரோப்பிய நாடுகளில் செயல்படுத்தி, அங்கு கிடைக்கும் வெற்றியை பொறுத்து பிறநாடுகளிலும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இத்திட்டம் முழுமையாக வெற்றிபெற்றால் வங்கிகள் வழங்கும் அனைத்து சேவைகளையும் பேஸ்புக் மூலமாக பெறலாம். குறிப்பாக இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தபின் பேஸ்புக் பயன்படுத்தும் அனைவரும் அனைத்து கட்டணங்களையும் பேஸ்புக் வலைதளத்தின் மூலமாகவே செலுத்தலாம். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் பேஸ்புக், கூகுள் நிறுவனத்தை மிஞ்சிவிடும்.
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home