10 May 2014

மனசுக்கு கஷ்டம் உடலுக்கு இஷ்டம்



நவீன உலகில் வசதி வாய்ப்புகள், அறிவியல் கண்டு பிடிப்புகள் தகவல் தொழில் நுட்பங்கள் வளர்ச்சி ஏற்பட்டு மனித வாழ்க்கை மேம்பட்டு வந்தாலும் அவற்றுக்கு இணையாக புதுப்புது நோய்களும் நம்மை ஆட்டுவிக்கின்றன. பல நோய்களுக்கு பெயர்களைப் போலவே மருந்துகளும் கண்டுபிடிக்க முடியவில்லை. வருமானத்தில் ஒரு பகுதியை மருத்துவத்துக்காக ஒதுக்க வேண்டிய கட்டாய நிலையும் ஏற்பட்டுள்ளது. இவற்றை போக்க முடியாவிட்டாலும் ஓரளவு கட்டுபடுத்த முடியும் என்கின்றனர் இயற்கை வைத்திய நிபுணர்கள்.

அதாவது மருந்துகள் இன்றி, நமது சில தற்காப்பு நடைமுறைகள் மூலம் நோய் நம்மை அணிடாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆனால் அவற்றை வழக்கமாக்க கொள்வதுதான் சற்று கடினம் ஆனால் பழக்விட்டால் அதைப்போல எளிது இல்லை என்க்ன்றனர். அத்காலை சூரிய உதயத்துக்கு முன் துய்லெழ வேண்டும். எழுந்தவுடன் சுமார் அரை லிட்டர் தணிணிராவது வெறும் வயிற்றில் குடிக்க வேணிடும்.

கண்டிப்பாக காலைக் கடன்களை கழித்தே ஆகவேண்டும். காலை இரவு இருவேளையும் பல் துலக்க வேண்டும். ஆண்டுக்கொரு முறை பல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.குறைநித பட்சம் வாரம் ஒருமுறையாக எணிணெய் குளியல் மேற்கொள்ள வேண்டும். ஆனால் சளி, காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு, மாதவிடாய் காலங்களில் (பெண்கள்) எண்ணெய் குளியல் கூடாது. தினசரி அல்லது வாரத்தில் 5 நாட்களாவது குறைந்தபட்சம் அரை மணியிலிருந்து முக்கால் மணி நேரம் உடறி பயிற்சி அல்லது நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

நாற்பது வயதுக்கு மேற்பட்ட ,இதுவரை உடற்பயிற்சி மேற்கொள்ளாதவர்கள் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் உடறி பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வயிறு முட்ட உணவு உண்ணக்கூடாது. அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணிர் போக கால் வயிறு காலியாக இருக்கும் வகையில் சாப்பிட வேண்டும்.

உணவுக்கு பின்னரே தண்ணிர் குடிக்க வேண்டும். நாற்சத்து உள்ள உணவுப் பொருட்களை அதிகம் சேர்ப்பது வயிறு நோய்களை தவிர்க்கும். மலச்சிக்கலைப் போக்கும். மலச்சிக்கல் போனாலே நோய்கள் நெருங்க முடியாது. வெண்டை, முருங்கை, அவரை, பீன்ஸ், வாழைத்தண்டு, பூ, பழம், பீர்க்கங்காய் போன்றவற்றுடன் கீரை வகைகள் உடலுக்கு நல்லது. மாமிச உணவுகளையும், துரித உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. இன்ப்பு, உப்பு, எண்ணெய் உணவுப் பொருட்களை முடிந்த வரையில் தவிர்ப்பது நல்லது. என்க்ன்றனர் இயற்கை வைத்திய நிபுணர்கள்.

அடக்க கூடாதவை:

இயறிகை உபாதைகள் அதாவது காலைக்கடன்கள் அதாவது மலம், சிறுநிர் போன்றவை, பசி, தூக்கம், கொட்டாவி, தும்மல், விக்கல், இருமல், வாந்தி, காற்று பிரிவது (சிலருக்கு எப்போதும் காற்று போய்க்கொண்டே இருக்கும்) போன்றவற்றை அடக்க கூடாது. இவற்றை அடக்குவதன் மூலம் வேறு உபாதைகள் ஏறிபட வாய்ப்புள்ளது என்பது இயற்கை வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை. இதைப்படித்ததும் மனசு ஏற்க மறுக்கத்தான் செய்யும். ஆனால் மனசு ஏற்றுகொண்டால் அது உடலுக்கு இஷ்டமாகிவிடும். பழகித்தான் பார்ப்போமே.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home