10 May 2014

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ரயில் போக்குவரத்து

பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து அமெரிக்காவுக்கு மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் போக்குவரத்து தொடங்க சீனா திட்டமிட்டு உள்ளது. சீனாவின் வடகிழக்கு பகுதி வழியாக 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை அமெரிக்காவுக்கு கடலுக்கு அடியில் ரயில் இருப்பு பாதைகளை அமைத்து, சைபீரியா மற்றும் அலாஸ்கா நீரிணைப்பு வழியாக மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக பறக்கும் ரயிலை விடுவதற்கு சீன பொறியியல் அகடமி திட்டமிட்டு உள்ளது. சீனாவில் இருந்து ரஷ்யா மற்றும் அலாஸ்கா வழியாக கடலுக்கு அடியில் 200 கிலோ மீட்டர் தூரம் தொடர் சுரங்க ரயில் பாதை அமைத்து, 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்காவை இணைக்கும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மிக விரைவில் இந்த அதிவேக ரயில்பாதை திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

அப்போது சீனாவில் இருந்து இரண்டு நாட்களில் அமெரிக்காவுக்கு சென்றுவிடலாம். அதற்கு முன்னோட்டமாக, தற்போது மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் சூப்பர் பாஸ்ட் ரயில் தயாரிக்கப்பட்டு உள்ளது என்று சீன ரயில்வே தொழில்நுட்ப நிபுணர் வாங் மெங் சூ நேற்று பீஜிங்கில் கூறினார். அதேபோல், லண்டன் வழியாக பாரிஸ் மற்றும் பெர்லின் வழியாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கும், ஜெர்மனி வழியாக ஈரான் மற்றும் துருக்கிக்கும் ரயில் மற்றும் சாலை வழி போக்குவரத்து திட்டங்களை சீனா திட்டமிட்டுள்ளது. மேலும் வியட்நாம் மற்றும் கம்போடியா வழியாக சீனாவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் விதமாக சாலை மற்றும் ரயில் இருப்பு பாதை திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சீனாவையும் ஆப்ரிக்காவையும் இணைக்கும் ரயில் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home