ஆசியாவையும்,ஐரோப்பாவையும் இணைக்கும் வரலாற்றுமுக்கியத்துவம்வாயந்த இஸ்தான்பூல் நீர்க்கீழ் ரயில் சுரங்கம் திறக்கப்பட்டுள்ளது.
ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களை இணைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தமுதலாவது நீர்க்கீழ் ரயில் சுரங்கம் ஒக்டோபர்,29 செவ்வாய்க்கிழமையன்று உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.துருக்கி குடியரசின் 90வது வருடத்தை முன்னிட்டு செவ்வாய்க் கிழமையன்று மேற்படி நீர்க்கீழ் ரயில் சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளது.மர்மரி திட்டம் என அழைக்கப்படும் இந்நீர்கீழ் ரயில் சுரங்கப்பாதை திட்டமானது துருக்கி மற்றும் ஜப்பான் ஆகிய இருநாடுகளின் கூட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துருக்கியின் 150வருட கனவு முழுமைபெற்றுள்ளது. 150வருடங்களுக்கு முன்னர் உஸ்மானிய கிலாபத்தின் கலீபாவான சுல்தான் 2ஆம் அப்துல் ஹமீத்தினால் உஸ்மானிய பேரரசையும் ஐரோப்பாவையும் இணைப்பதற்கு நீர்க்கீழ் ரயில் சுரங்கத்தை அமைப்பதற்கான திட்டம் வரையப்பட்டது.எனினும், குறைந்த தொழிநுட்ப வளர்ச்சி மற்றும் நிதிப்பிரச்சினை காரணமாக இத்திட்டத்தை அவரால் முழுமைப்படுத்த முடியாது போனது.பின்னர் 1990ஆம் மீள ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமானது நிதிப்பற்றாக்குறை காரணமாக இடைநடுவில் நிறுத்தப்பட்டது.பின்னர் 2005ஆம் ஆண்டு தற்போதைய துருக்கி பிரதமர்
தைய்யிப் எர்டோகனின் அரசாங்கத்தில் மீள ஆரம்பிக்கப்பட்டு முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.திறப்பு விழாவில் பேசிய துருக்கி பிரதமர், எமது முன்னோர்களால் ஆரம்பிக்கப்பட்ட சுரங்கப்பதை திட்டமானது எங்கள் கைகளால் முழுமைப்படுத்தப்பட்டது எனத் தெரிவத்தார். சுரங்கக் கட்டுமாணப்பணிகளுக்கு 4வருடங்கள் திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், பல தொடர்ச்சியான வரலாற்று சின்னங்கள் கிடைக்கப் பெற்றதானால் வேலை பல தடவைகள் தாமதமானது. இந்நீர்க்கீழ்
சுரங்கத்தினூடாக ஒரு நாளைக்கு ஆகக்கூடுதலாக 1.4மில்லியன் பயணிகளுக்கு பயணம் செய்ய முடியுமானதுடன், இதன் மூலம் இஸ்தான்பூல் நகரின் போக்குவரத்து நெரிசலை 20சதவீதத்தால் குறைக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home