31 October 2013

ஜிஹாத்-ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்களின் விளக்கம்!

அன்புள்ள சகோதர சகோதரிகளே! இங்கு நான் சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று வந்துள்ளேன். 15 வருடங்களுக்கு முன்பு குர்ஆனை படித்துள்ளேன். பத்திரிக்கையிலும், நண்பர்கள் மூலமாகவும் இஸ்லாத்தைப் பற்றியும் முகமது நபியைப் பற்றியும் பல தவறான கருத்துகள் என்க்குள் விதைக்கப்பட்டிருந்தது. இந்த மக்களும், பத்திரிக்கைகளும் குர்ஆனைப் பற்றி சொல்வது உண்மைதானா என்பதை தெரிந்து கொள்வதற்காக நான் குர்ஆனை ஆராய ஆரம்பித்தேன். கிராமத்தில் சொல்லப்படும் பழமொழி ஒன்றைப் போல் குர்ஆனில் உள்ள நல்ல விஷயங்களை படிப்பதை விட்டு விட்டு அதிலிருந்து என்ன தவறுகளை உண்டாக்கலாம் என்று சிநதிக்க ஆரம்பித்தேன். சில முஸ்லிம்களின் நடவடிக்கைகளும், குர்ஆனின் சில வசனங்களும் எதிர்மறையாக என்னை ஒரு புத்தகம் எழுதத் தூண்டியது. அதன் தலைப்பு "THE HISTORY OF ISLAMIC TERRORISM". ஆனால் நான் எழுதியவை அனைத்தும் தவறு என்று பின்னாளில் உணர்ந்து கொண்டேன்.

இந்து மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்துக்கு மறு பெயர் ஜிஹாத் என்றும், ஜிஹாத் என்பது தீவிரவாதம் என்றும் புரிந்து வைத்துள்ளனர். நான் புரிந்து கொண்ட வகையில் இஸ்லாம் என்றால் என்ன என்பது பற்றியும், ஜிஹாத் என்றால் என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ள மஹா பாரத காலத்துக்கு நாம் செல்ல வேண்டும்.

கௌரவர்கள், பாண்டவர்கள், துரியோதனன், அர்ஜூனன் கதைகள் எல்லாம் நமக்கு நன்றாகவே தெரியும்.

"அர்ஜூனா, இந்த சிக்கலான நேரத்தில் இக்களங்கம் எங்கிருந்து உனக்கு வந்தது; பண்புடையவனுக்கு இது தகாதது; மேலுலகுக்கும் வழிகாட்டாதது; இகவாழ்விலோ இழிவைத் தருவது. இது போன்ற தளர்ச்சிக்கு இடம் தராதே. இது உனக்கு ஏற்றதல்ல. இதய பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நில்."

பகவத் கீதை அத்தியாயம் 2 ல் வரும் வசனங்களே இவை. அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் எதிராக நடக்கும் ஒரு யுத்தம் யுத்தம் அல்ல அது தர்ம யுத்தம் என்கிறது இந்து மத வேதங்கள். அங்கு போரிடுவதற்கோ தயவு தாட்சண்யம் பார்ப்பதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை என்கிறது கீதை. இந்த யுத்தத்தில் தோற்றாலும் நீ சொர்க்கம் செல்வாய் என்று உபதேசிக்கப்படுகிறது.

இதே போன்றுதான் மெக்கா நகரில் அந்த மக்களின் குடி விபசாரம், சிலை வணக்கம், வட்டி, பெண் கொடுமை, பெண் குழந்தைகளை கொல்லுதல் போன்ற செயல்களை விமரிசித்து 'ஒரே இறைவனை வணங்குங்கள்' என்று உபதேசித்தார் நபிகள் நாயகம். உடனே அங்கிருந்த குரைஷிகள் இவரையும் இவரது ஆதரவாளர்களையும எதிரிகளாக பாவிக்க தொடங்கினர். பலரை கொலை செய்தனர். அவர்களின் பொருட்களை கொள்ளையடித்தனர். ஊர் விலக்கம் செய்தனர். இவர்கள் செய்த கொடுமைகளை கண்டு மனம் வெதும்பி மதினாவை நோக்கி செல்கிறார் நபிகள். அதே குரைஷி கூட்டம் அங்கும் முஸ்லிம்களை பின் தொடர்ந்து வருகிறது. முஸ்லிம்களை அழிக்கப் பார்க்கிறது.

ஒரு வருடம் அல்லது இரு வருடம் அல்ல. 13 வருடங்கள் இது போன்ற கொடுமைகளை முகமது நபியும் அவரது தோழர்களும் அனுபவிக்கின்றனர். இவ்வளவு கொடுமைகள் தினம் தினம் நடந்தும் தனது தோழர்களிடம் 'பொறுமையாக இருங்கள். பொறுமையாளர்களோடு நம்மைப் படைத்த இறைவன் இருக்கிறான்' என்று அமைதியாக உபதேசித்தார். மக்கா குரைஷிகளின் அக்கிரமங்கள் உச்ச கட்டத்தை அடைந்த போதுதான் தங்களை தற்காத்து கொள்ள எதிர்த்து போரிடுகிறார்கள் முஸ்லிம்கள். மதினாவில் பயந்து தஞ்சம் அடைந்த முஸ்லிம்களை கொல்வதற்காக படை திரட்டிக் கொண்டு மக்காவிலிருந்து மதினா நோக்கி குரைஷிகளின் படை வருகிறது. பகவத் கீதையில் எந்த சூழலை நாம் பார்ததோமோ அதே சூழல்தான் இங்கு முஸ்லிம்களுக்கும் உள்ளது. இதுதான் இஸ்லாத்தில் ஜிஹாதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தீவிரவாதம் என்று பெயரிடுவீர்களா? தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள ஒருவன் எடுக்கும் தற்காப்பு முயற்சிக்கு தீவிரவாதம் என்ற சொல் சரியாகுமா? பகவத் கீதையில் வரும் சம்பவங்களை நியாயப்படுத்தும் பலர் இஸ்லாமியர்களின் தற்காப்பு போர்களை விமரிசிப்பது ஏன்?

நமது நாட்டில் தங்களை வளர்த்துக் கொள்ள சிலர் இந்துக்களையும் முஸ்லிம்களையும் நிரந்தரமாக பிரித்து வைக்க முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லி தங்களை வளமாக்கி கொள்கின்றனர். ஜிஹாதுக்கு தவறான விளக்கத்தை கொடுத்து இந்துக்களை பிரிக்க பார்க்கின்றனர்.
*************************************************
Fahad Ahmed PM :அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் பயின்ற இந்து மத பெரியவர் ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்கள் கான்பூர் நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு கருத்தரங்கில் இஸ்லாமிய ஜிஹாதைப் பற்றி அழகிய கருத்துரையை வழங்கினார். ஹிந்தி தெரியாதவர்களுக்காக அதனை தமிழில் மொழி பெயர்தவர் சகோதரர் அப்துல்லா ஃபிர்தோஸி
****************************************************
கலை வேந்தன்: நண்பரே.. குர் ஆனில் இருக்கும் ஜிஹாத் விளக்கம் மாஹா பாரதப்போரோடு ஒப்புமை குறித்துக் காணும் போது ஏற்புடையது என்பதில் இரு கருத்தில்லை. ஆனால் அந்த காலத்தில் ( முகமது நபியின் காலத்தில் இருந்த ஜிஹாத் நிலைமையை தற்காலத்தில் இஸ்லாம் அல்லாதவர்களுடனான புனிதப்போர் என்னும் பெயரில் ஆங்காங்கு கலவரங்களை உண்டாக்கும் வகையில் தீவிரவாதத்தை வளர்ப்பது ஏன்..? முகமது நபியின் காலத்தில் இருந்ததைப் போல் இன்று உலகில் எங்கே இஸ்லாமியர் துரத்தப்படுகிறார்களோ அங்கே இந்த ஜிஹாதை நடத்துவதை ஏற்புடையதாக்கிக்கொள்ளலாம். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து மக்களுக்கும் நிகராக ஏன் ஒரு படி மேலாக இஸ்லாமியருக்கு வசதிகளும் உரிமைகளும் தரப்படுகின்ற சூழலில் இங்கே புனிதப்போர் என்னும் பெயரில் தீவிரவாதத்தை திணிப்பது என்ன வகையில் நியாயம் எனக்கூறுவீர்களா..? நான் இந்தியாவை மட்டுமே இங்கே நிலைநிறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என் கருத்துக்கு நேரதி பதிலை மட்டுமே எதிர் நோக்குகிறேன். புரிதல் இல்லாத வசவுகளை யாரும் தரவேண்டாம். நன்றி.

Fahad Ahmed PM: கலைவேந்தன்@ ஜிஹாதையும் முறைப்படி அறிவித்து நடத்தும் அதிகாரம் ஒரு இஸ்லாமிய அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு. அதனை தனி நபர்களோ, தனிக்குழுக்களோ தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது. அத்தகைய இஸ்லாமிய அரசு கூட தன்னிச்சையாக வேறொரு நாட்டின் மீது ஜிஹாத் என அறிவித்து விட முடியாது. மார்க்க ரீதியான, உலகாதாய ரீதியான, ஒழுக்க ரீதியான என எல்லா அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்தே அது முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு போரிடும்போது கூட பெண்களை, பொதுமக்களை, குழந்தைகளை, மதகுருக்களைத் தாக்கக்கூடாது. விளை நிலங்களைச் சேதப் படுத்தக் கூடாது. மரங்களையோ வீடுகளையோ கொளுத்தக் கூடாது. நிராயுதபாணி வீரர்களை கொல்லக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் நிபந்தனைகளை விதிக்கிறது.
மேலும், இறைவன் இந்த ஆட்சியாளர்களை நீதியை நிலைநாட்டும்படி வலியுறுத்துகிறான்.

'உங்களுக்கும், அவர்களின் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும்; மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபை உடையவன்' (60:7)

'மார்க்க (விஷயத்)தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே, அவர்களுக்கு நீங்கள் நன்மை செயவதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்'. (60:8)
************************************************
கலை வேந்தன்: நன்றி நண்பரே.. எனது கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. அப்படியானால் தனிமனிதக்குழுக்கள் ஜிஹாத் என்னும் பெயரில் நடத்துவது தீவிரவாதம் தான் என்னும் கருத்தை உள்லடக்கிய உங்களின் மறுமொழிக்கு மிக்க நன்றி. இதைத்தான் நானும் வலியுறுத்தி வருகிறேன். நல்லவையே நடக்கட்டும் இன்ஷா அல்லாஹ்..!

Fahad Ahmed PM அப்பாவி பொதுமக்களை வேட்டையாடுகிற யூத நடைமுறை, இஸ்லாத்துக்கும் இஸ்லாம் காட்டும் அறவழிக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும். அதே சமயம் தீமைகள் புயலாய் வீசும்போது மூலையில் முடங்கியிருக்க இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை. தனது தாய்நாடு மாற்றாரால் ஆக்ரமிக்கப்பட்டு அப்பாவி பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் ஈவிரக்கமின்றி கொல்லப்படும்போது அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் பணிக்கவில்லை. மண்ணின் விடுதலைக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகளல்ல என்பது உலக நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால், 'ஜிஹாத்' என்ற பெயரிடப்பட்டு இஸ்லாம் மீது பழி சுமத்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் எதுவுமே ஜிஹாத் கிடையாது என்பதை நாம் தெளிவாக புரிந்துள்ளோம்..

உங்கள் கேள்வியில் இஸ்லாமியர்கள் ஜிஹாத் என்ற பெயரில் தீவிரவாதம் புரிந்தாலும் ஜிஹாத் பெயரில் இல்லாமல் புரிந்தாலும் வன்முறை தவறானதே..

அதேநேரத்தில் இஸ்லாமியர்கள் குண்டு வைக்கவில்லை என்று நான் மறுக்கவில்லை செய்துள்ளார்கள் ஆனால் அதை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தாதீர்கள் என்றே கூறுகிறோம், ஏனெனில் இங்கு முஸ்லிம்களைவிட பிற்காலத்தில் சமூக மக்கள் அதிகம் தீவிரவாதம் புரிகிறார்கள் அவர்களை யாரும் அவரின் மதம் சார்ந்து விமர்ச்சிப்பதில்லை, இதனால் முஸ்லிம்கள் செய்தால் முஸ்லிம் தீவிரவாதி என்று அவதூறு பரப்புகிறார்கள்*******************************************

அதேநேரத்தில் இஸ்லாமியர்கள் குண்டு வைக்கவில்லை என்று நான் மறுக்கவில்லை செய்துள்ளார்கள் ஆனால் அதை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தாதீர்கள் என்றே கூறுகிறோம், ஏனெனில் இங்கு முஸ்லிம்களைவிட பிற்காலத்தில் சமூக மக்கள் அதிகம் தீவிரவாதம் புரிகிறார்கள் அவர்களை யாரும் அவரின் மதம் சார்ந்து விமர்ச்சிப்பதில்லை, இதனால் முஸ்லிம்கள் செய்தால் முஸ்லிம் தீவிரவாதி என்று அவதூறு பரப்புகி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home