தோல்வியை கண்டு துவண்டு போகாதீர்கள்
எந்த தோல்வியும் துவண்டு போவதற்காக அல்ல.. நமது வழியை மாற்றி, நம்மை ஒரு
நல்ல லட்சியத்தை நோக்கி பயணிக்க வைக்கலாம் என்பதை எடுத்துக் கூற பல
வரலாறுகள் உள்ளன.
இந்தியாவின் தந்தையாகப் போற்றப்படும் மகாத்மா காந்தி, வழக்கறிஞராக படித்து பட்டம் பெற்றிருந்தால், ஒரு பத்து பேருக்கு தெரிந்த வழக்கறிஞராக மட்டுமே இருந்திருப்பார். ஆனால், வெள்ளையர்கள் அவரை ரயிலில் இருந்து இறக்கிவிட்ட ஒரு சம்பவத்தால் அவர் வாழ்க்கைப் பயணம் தடம் மாறியது. அதனால் அவர் அடைந்தது மகாத்மா என்ற பெருமையை. இதேப்போல, எத்தனையோ பேர், தாங்கள் அடைந்த சிறு தோல்வியால் பயணம் மாறி பெரிய லட்சியங்களை அடைந்துள்ளனர்.
ஸ்பெயினைச் சேர்ந்த ஜூலியோ என்ற இளைஞன் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். அதீத பயிற்சியில் ஈடுபட்டு, ரியல் மேட்ரிட் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் அணியின் சிறந்த கோல் கீப்பராக வருவார் என்று எல்லோரும் எண்ணினார்.
ஒரு நாள் கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜூலியோவிற்கு நடப்பதே கடினமானது. 18 மாத மருத்துவமனை வாழ்க்கையில் இருந்து வெளியே வந்த ஜூலியோ, தனது வாழ்க்கைப் பயணம் இப்படி இருண்டு விட்டதே என்று எண்ணி கண்ணீர் விட்டார். கண்ணீரை பேனாவில் மையாக ஊற்றி பாடல்கள் எழுதினார். இதனை கிட்டாரில் தானே வாசித்து பாடவும் செய்தார்.
பின்னாளில், இசை வரலாற்றில் ஜூலியோ இக்லேசியஸ், சிறந்த பத்து பாடகர்களில் ஒருவராக இடம்பெற்றார். 300 ஆல்பங்களை வெளியிட்டு, ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தார்.
அந்த கார் விபத்து அவருக்கு நேரிட்டிருக்காவிடில், ஜூலியோ இக்லேசியஸ் சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒரு கோல் கீப்பராக இருந்திருப்பார். ஆனால் தற்போது உலகமே அறிந்த பாடகராக இருக்கிறார்.
தோல்வி அடையும் போது துவண்டு விடாமல், நமக்கிருக்கும் திறமை மீது நம்பிக்கை வைத்து, மற்றொரு நல்ல வழியை பின்பற்றி, லட்சியத்தை அடைய முயற்சியுங்கள். தோல்விதான் நமக்கிருக்கும் திறனை வெளிப்படுத்தும் கருவி என்பதை உணருங்கள். நீங்கள் விரும்பியதே கிடைத்துவிட்டால், உங்கள் மனத் திடம் வெளிப்படாது. உங்கள் மீதான நம்பிக்கை பயனற்றுப் போகும். உங்களைப் பற்றி உங்கள் தோல்வியில்தான் நீங்கள் முழுமையாக அறிய முடியும்.
கேரளாவின் ஒரு சிறிய கிராமத்தில் மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டார் ஒரு இளைஞர். ஆனால் மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததன் மூலமாக அந்த கனவு தகர்ந்தது.
தோல்வியில் துவளாமல், அடுத்து எம்.எஸ்சி., முதுநிலை முடித்து ஐடி துறையில் சேர்ந்தார். ஐடி துறையில் தனது திறமையின் மூலம் மிக உயரிய இடத்தை அடைந்தார். அந்த இளைஞன் வேறு யாருமல்ல, இன்போசிஸ் தலைவராக பதவி வகித்த கிரிஸ் கோபாலகிருஷ்ணன்தான்.
எந்த தோல்வியும், நிரந்தரமல்ல. ஒரு கதவு மூடினால், அதனருகில் இருக்கும் மற்றொரு கதவை பலம் கொண்டு திறவுங்கள். நீங்கள் பயணிக்கும் பாதை லட்சியத்தை எட்டுவதாக இருக்கும். தோல்வியை கண்டு துவளாதீர்கள். முட்களின் நிறைந்த பாதைகளின் முடிவில் தான் உங்களுக்கான பிருந்தாவனம் காத்திருக்கிறது.
-அஷ்ரப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home