அமெரிக்க உளவு எதிரொலி : இந்திய அரசு அலுவலகங்களில் டிசம்பர் முதல் யாகூ-ஜிமெயிலுக்கு தடை....!!
சமீபத்தில்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மையம் (NSA)
பல்வேறு நாடுகளின் இணையதளங்கள்,
மின்னஞ்சல்கள் ஆகியவற்றை ரகசியமாக வேவு
பார்த்த தகவலை அங்கு
பணி செய்த தொழில்நுட்ப ஒப்பந்ததாரரான
எட்வர்ட் ஸ்நோடன் வெளியிட்டிருந்தார்.
அமெரிக்காவின் இந்த செயல் பல்வேறு நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இணையத்தில் மின்னஞ்சல் சேவைகளை அதிகமாக செய்து வரும் ஜிமெயில், யாஹூ சர்வர்களைதான் அமெரிக்கா அதிகமாக வேவு பார்க்க பயன்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் உள்ள அரசு அலுவலகங்களில் பாதுகாக்கப்படும் தரவு (Data) சேவைகள் சைபர் கிரைம் குற்றங்களில் சிக்குவதை முற்றிலும் தடை செய்ய வேண்டி வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் யாகூ, ஜிமெயில் வலைத்தளங்களின் உபயோகத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து இந்திய அரசு இனி தனது உத்தியோகபூர்வ தகவல்களுக்கு கொள்கை தேசிய தகவல் மையத்தின் (நிக்) இணையதளத் தொடர்புகளையே பயன்படுத்த முடிவு செய்துள்ளது. மேலும் அரசாங்க அலுவலகங்கள் இந்த இணையதளத் தொடர்பை உபயோகப்படுத்துவதை அரசு கட்டாயமாக்க எண்ணியுள்ளது.
இதன் மூலம் 5 முதல் 6 லட்சம் அரசு ஊழியர்கள் நிக் தகவல் தொடர்பை பயன்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு செய்வதன் மூலம், உத்தியோகபூர்வ ஆதாரங்களின்படி அரசாங்கத்தின் தகவல் பதிவுகள் பெருமளவில் பாதுகாக்கப்பட முடியும் என்று அரசு கருதுகின்றது.
இந்திய அரசின் கொள்கை என அழைக்கப்படும் இந்தத் திட்டம் கிட்டத்தட்ட தயார் நிலையில் உள்ளது. மற்ற அமைச்சரவைகளின் கருத்துகளும் இதுகுறித்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. வரும் டிசம்பர் மாத மத்தியிலிருந்து இறுதிக்குள் இந்த செயல்பாடுகள் தொடங்கக் கூடும் என்று மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்பத் தகவல்துறையின் செயலாளரான சத்யநாராயணா சிஐஐ உச்சி மாநாட்டின்போது நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த உட்கட்டமைப்பு வசதிகளுக்காக உடனடியாக 4 முதல் 5 கோடி ரூபாய் வரை தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். ஆயினும், இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தும்போது இதன் முதலீடு 50 முதல் 100 கோடி ரூபாய் வரை இருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி இத்தகைய தரவுத் (Data) தகவல்கள் கிளவுட் (cloud) பிளாட்பாரம் எனப்படும் தொகுப்பில் சேமித்து வைக்கப்படும். அதனால், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தங்களுடைய துறை குறித்த தகவல் தொகுப்புகளை எளிதில் கையாள முடியும் என்றும் சத்யநாராயணா விளக்கினார்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home