ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ஸ்பெயினிலிருந்தும் தொலைபேசி அழைப்புகளை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜன்சி (என்.எஸ்.ஏ) திருடியுள்ளது
ஒரு மாதத்தில்
மட்டும் ஆறுகோடி தொலைபேசி அழைப்புகளை என்.எஸ்.ஏ திருடியதாக அதன் முன்னாள் தொழில்நுட்ப ஒப்பந்த ஊழியர் எட்வர்ட் ஸ்நோடன் வெளியிட்ட
ஆவணங்களை மேற்கோள்காட்டி ஸ்பெயின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2012 டிசம்பர் 10 ஆம் தேதிக்கும் இவ்வாண்டு ஜனவரி 8-ஆம் தேதிக்கும் இடையில் என்.எஸ்.ஏ இவ்வளவு தொலைபேசி அழைப்புகளை ஸ்பெயினிலிருந்து திருட்டுத்தனமாக சேகரித்துள்ளது. ஆனால், உரையாடல்களை திருடியதா? என்பது தெளிவில்லை.
நட்பு நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையில் ரோஷம் கொண்டு ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் அமெரிக்க அதிகாரிகளை அழைத்து கண்டனத்தை தெரிவிக்கவிருக்கும் வேளையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இக்குற்றச்சாட்டுக் குறித்து விளக்கம் அளிக்க மாட்ரிடில் அமெரிக்க தூதருக்கு ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home