31 October 2013

"என்று தணியும் இந்த ஒற்றுமை தாகம் !



இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முஸ்லிம்கள் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து அரசியல் ரீதியாக ஒன்றுபட்டு வருகின்றார்கள்.

* கேரளா முஸ்லிம்கள் ஒன்றுபட்டதால் 20 -க்கும் அதகமான M.L A மற்றும் ஆறு மந்திரிகள் கிடைத்தார்கள்.

* உ.பி மாநில முஸ்லிம்கள் ஒன்றுபட்டதால் சமூக ரீதியாக பல்வேறு சலுகைகள் கிடைக்கிறது.

* மேற்கு வங்காள முஸ்லிம்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியதால் மதரசா வாரியத்திற்கு தனி மந்திரி உள்பட பல்வேறு சலுகைகள்.

* தற்போது கர்நாடகாவிலும் B J P ஆட்சியை அகற்ற முஸ்லிம்களின் வாக்கு ஒருமுகமாக காங்கிரசுக்கு விழுந்ததே காரணம்.

ஆனால் நமது மாநிலம் தமிழகத்தில் காய்தே மில்லத் காலத்திற்கு பிறகு படிப்படியாக பிரிந்து தற்போது சுமார் 24 இயக்கங்களாக பிளவுபட்டு நிற்கின்றது முஸ்லிம் சமுதாயம். இந்த பிளவின் காரணமாக சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் மார்க்கரீதியாக பல்வேறு விதங்களில் பின்தங்கி உள்ளோம்.

தலைவர்கள் தங்களது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை தியாகம் செய்துவிட்டு சமூதாய மேம்பாடு கருதி ஒன்றுபடவேண்டும்.

இல்லேயேல் அடுத்த தலைமுறையின் கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும் என்பது உறுதி.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் சமூதாய தலைவர்களுக்கு மன மாற்றத்தை தந்தருல்வனாக.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home