இஸ்லாமிய சர்வதேச உறவுகள்….!
இஸ்லாமிய அரசு இந்த நாடுகளுடன் ஒருபோதும் அந்நிய நாடுகளுடன் வைத்துள்ள இராஜதந்நதிர உறவுகளையோ எவ்வித உடன்படிக்கை களையோ மேற்கொள்ளாது.
இந்த நாடுகள் அனைத்தும் கிலாபத் அரசின் பகுதியாக காணப்படும். இவர்கள் வாழும் பிரதேசம் தாருள் இஸ்லாமாக இருக்கும் பட்சத்தில் கிலாபத் அரசின் குடிமக்களாக கருதப்படுவார்கள். அவர்கள் பிரதேசம் தாருள் குப்ராயின் தாருள் குப்ரில் வாழும் முஸ்லிம்களாக கருதப்படுவார்கள்.
மேற்கிலும் கிழக்கிலும் உள்ள நாடுகள் தாருள் ஹர்பாக காணப்படும். இந்நாடுகளுடன் முஸ்லிம்களது நலனையும் கிலாபத்தின் நலனையும் அடிப்படையாக கொண்டுள்ள வெளிநாட்டு உறவுகள் இருக்கும். இறை சட்டத்தின் அடிப்டையில் இந்நாடுகளது வெளிநாட்டு உறவுகள் தீர்மானிக்கப்படும்.
இந்நாடுகளுடன் குறித்த தவணையில் நட்புமுறையில் (வர்த்தகம், பொருளாதாரம், விவசாயம், அறிவியல்) ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படமுடியும். இவ் ஒப்பந்தங்களின் போது முஸ்லிம்களதும் கிலாபத் அரசினதும் நலன்கள் கருத்திற்கொள்ளப்பட்டதாவவே அமையும்.
முஸ்லிம்களுடன் போர்க்குணத்துடன் நடந்துகொள்ளும் காலனித்துவ நாடுகளுடன் முன்னெச்செரிக்கையாக கிலாபா அரசு நடந்து கொள்வதுடன் இராஜ உறவுகள் வைத்துக்கொள்ளப்பட மாட்டாது. இந்நாட்டு இராஜ தூதரகங்கள் கிலாபத்தினது முஸ்லிம் தேசத்திற்குள் இருப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. இந்நாட்டு மக்கள் வீசா மற்றும் கடவுச் சீட்டுடன் மட்டுமே இஸ்லாமிய நிலப்பரப்பில் அனுமதிக்கப்படுவார்கள்.
முஸ்லிம்களுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் நாடுகள் கிலாபத்தின் போர்ப்பிரகடன நாடுகளாக கருதப்பட்டு எதிரி நாடுகளுடனான இராஜ உறவுகள் மேற்கொள்ளப்படும்.
மேற்குறித் அடிப்படையிலான வெளிநாட்டு உறவுகள் இன்று உலகில் எந்த ஒரு முஸ்லிம் நாடுகளிலும் இல்லை.
அதேவேளை இத்தகைய நிபந்தனைகள் சுமார் 1300 வருடகாலமாக இஸ்லாமிய கிலாபா அரசு இருந்த வேளையில் கடைப்பிடிக்கப்பட்டு முஸ்லிம்களது கண்ணியம் மற்றும் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது.
இன்று கிலாபா அரசு இல்லாதபடியில் முஸ்லிம் நாடுகள் காலனித்துவ மற்றும் ஏகாதிபத்திய நாடுகளது சுடுகாடுகளாக மாறி முஸ்லிம்களது உயிர்களுக்கும், உடைமைகளுக்கும், இயற்கை வளங்களுக்கும் வேட்டு வைக்கப்பட்டு முஸ்லிம் உம்மத் இந்த அந்நிய சக்திகளால் சூரையாடப்படுகிறது.
ஆகவே, இன்று முஸ்லிம் உம்மத் இழந்துள்ள இஸ்லாமிய தலைமைத்துவத்தை எமது முஸ்லிம் நாடுகளில் ஏற்படுத்தி முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் மேற்குலகின் பிடியில், சதிவலையில், சூழ்ச்சியில், சுரண்டலில் இருந்து பாதுகாப்போம். நபிவழியில் மீண்டும் கிலாபாவை ஏற்படுத்த அயராது உழைப்போம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள்.” (அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)
முஸ்லிம்கள் மீது காஃபிர்கள் ஆளுமை செலுத்துவதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்: முஃமின்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்த வழியையும் அல்லாஹ் இறைநிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான். (அந்நிஸா:141)
விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமது பாதகாவலர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். (ஆல இம்ரான்: 28)
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home