30 April 2014

உலகின் மிகப்பெரிய டாப்- 10 விமானப்படைகள்: சீனாவுக்கு அடுத்து இந்தியா!



1912ல் இங்கிலாந்து நாட்டின் ராயல் ஃப்ளையிங் கார்ப்ஸ் உருவாகியது முதல், ராணுவ நடவடிக்கைகளுக்கு விமானப் படையின் பங்கு இன்றிமையாதது என்பதை பல்வேறு உலக நாடுகள் உணர்ந்து கொண்டு விமானப் படைகளை உருவாக்கின.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டிலிருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எளிதாக எதிர்கொள்வதற்கு விமானப் படையின் பங்கு ஒவ்வொரு நாட்டிற்கும் அத்தியாவசிமாகியுள்ளது. உணவு பட்ஜெட்டில் துண்டு விழுந்தாலும், ராணுவத்துக்கு சில நாடுகள் அதிக அளவில் நிதியை ஒதுக்கி தங்களது பாதுகாப்பை உறஉதிய செய்து கொள்கின்றன.

பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய போர் விமானங்களை பல நாடுகள் போட்டி போட்டி வாங்கியும், சொந்தமாக தயாரித்தும் தங்களது விமானப் படையை வலுவாக்கி வைத்திருக்கின்றன. அதில், அதிக போர் விமானங்களை கொண்ட உலக நாடுகளின் விமானப் படையின் பட்டியலை இங்கே வழங்கியுள்ளோம்.

அஷ்ரப்

1. அமெரிக்கா

உலகின் மிக பலம் வாய்ந்த விமானப் படை அமெரிக்காவினுடையதுதான். 1947ல் அமெரிக்க ராணுவத்திலிருந்து விமானப் படை தனியாக பிரிக்கப்பட்டது. 3,318 போர் விமானங்கள் அமெரிக்க விமானப்படையில் இருக்கின்றன. இதில், எஃப் 16 என்ற ஒரே வகையில் மட்டும் 1,245 போர் விமானங்களை வைத்துள்ளது.

2. ரஷ்யா

கடந்த 1992ம் ஆண்டு பழைய சோவியத் யூனியன் விமானப்படையிலிருந்து ரஷ்யாவின் புதிய விமானப் படை உருவாக்கப்பட்டது. கடந்த 1990ம் ஆண்டில் சோவியத் யூனியனாக இருந்தபோது 6,100 போர் விமானங்கள் இருந்தன. ஆனால், தற்போது ரஷ்ய விமானப் படையில் 1,900 போர் விமானங்கள் உள்ளன. இதில், மிகோயன் மிக்-31 ரக போர் விமானம் மணிக்கு 3,000 கிமீ வேகத்தில் பறக்க வல்லது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானப் படையாக இருக்கிறது.


3. சீனா

சீன விமானப் படையில் 1,500 போர் விமானங்கள் உள்ளன. மேலும், சீன விமானப் படையில் 3,30 லட்சம் வீரர்களும் உள்ளனர். மொத்தமாக சீன ராணுவத்தில் 2,500 விமானங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சொந்தமாகவே போர் விமானங்களையும், குண்டுகளை வீசும் பிரத்யேக விமானங்களையும் தயாரிக்கும் வல்லமை கொண்டது. அதில் ஷென்யாங் ஜே11 மற்றும் ஸியான் எச்-6 ஆகிய விமானங்கள் 9,070 கிலோ எடையுடைய குண்டுகளை சுமந்து சென்று வீசும் திறன் கொண்டது. இதுபோன்ற விமானங்கள் உலகின் சில விமானப் படைகளிடம் மட்டுமே உள்ளது.

4. இந்தியா

சீனாவுக்கு அடுத்து உலகின் மிகப்பெரிய விமானப் படை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. போர் விமானங்களை அசெம்பிள் செய்யும் வல்லமை கொண்ட நாடாக இருக்கிறது. சுகோய் ரக விமானங்களை ரஷ்யாவிடமிருந்து உரிமம் பெற்று இந்தியா அசெம்பிள் செய்து தயாரித்துள்ளது. மேலும், தற்போது சொந்தமாக போர் விமானத்தை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. தற்போது தேஜஸ் என்ற இலகு ரக போர் விமானத்தை தயாரித்து சோதனைகளை நடத்தி வருகிறது. இந்திய விமானப் படை 1.27 லட்சம் வீரர்களை கொண்டுள்ளது.

5.எகிப்து

எகிப்து விமானப் படையில் மொத்தம் 1,300 போர் விமானங்களும், 50,000 வீரர்களும் உள்ளனர். எகிப்து விமானப் படையில் எஃப்16 வகை விமானங்கள் அதிகளவில் உள்ளன.

6.வடகொரியா

பல நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் வடகொரிய விமானப் படையில் 661 போர் விமானங்கள் இருக்கின்றன. சீன தயாரிப்பு போர் விமானங்களும், சில ரஷ்ய தயாரிப்பு போர் விமானங்களும் வடகொரியாவிடம் உள்ளன. ஆனால், இவற்றில் பல விமானங்கள் இயக்குவதற்கான தகுதி இல்லாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

7. பாகிஸ்தான்

1947ல் துவங்கப்பட்ட பாகிஸ்தான் விமானப்படையில் தற்போது 502 போர் விமானங்கள் உள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. பாகிஸ்தான் விமானப்படையில் சீன தயாரிப்பான செங்க்டு ஜே-7 அதிகளவில் உள்ளன. தவிர, எஃப்- 16 மற்றும் பிரானஸ் தயாரிப்பான மிராஜ்- 5 மற்றும் மிராஜ்-3 ஆகிய போர் விமானங்களும் உள்ளன.

8. துருக்கி

தனது பிராந்தியத்தில் ராணுவ பலம் வாய்ந்த நாடாக துருக்கி திகழ்கிறது. 4 லட்சம் வீரர்களை கொண்ட பலம் வாய்ந்த ராணுவ பலம் பொருத்திய துருக்கி விமானப் படையில் 465 போர் விமானங்கள் உள்ளன. மற்ற டாப்- 10 நாடுகளை விட குறைவான போர் விமானங்களை கொண்டிருந்தாலும், பலம் வாய்ந்த ராணுவத்தை கொண்டிருப்பதால் பட்டியலில் 8ம் இடத்தை பிடித்துள்ளது. துருக்கி விமானப் படையில் எஃப்- 16 விமானங்கள் அதிகளவில் உள்ளன.

9. தென்கொரியா

அண்டை நாடுகளிடமிருந்து வந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதத்தில் 1949ல் தென்கொரிய விமானப் படை துவங்கப்பட்டது. அமெரிக்க தயாரிப்பான எஃப்-16 மற்றும் நார்த்ராம் எஃப் ஆகிய போர் விமானங்கள் அதிகளவில் உள்ளன. இதுதவிர, பல ரக விமானங்களையும் தென்கொரிய விமானப் படை வைத்துள்ளது.

10. ஜெர்மனி

இங்கிலாந்து ராணுவத்தை விட சிறியதாக இருக்கும் ஜெர்மனி விமானப் படையில் மொத்தம் 423 போர் விமானங்கள் உள்ளன. 1955 வரை ஜெர்மனி விமானப்படை வைத்துக்கொள்வதற்கான தடை இருந்து வந்தது. நேட்டோ அணியில் சேர்ந்தபின் விமானப் படையை உருவாக்கிக் கொண்டது. ஜெர்மனி விமானப் படையில் நவீன ரக யூரோஃபைட்டர் தைபூன் மற்றும் பிரபல பனவியா டோர்னாடோ ஆகிய விமானங்கள் உள்ளன.

பட்டியலில் விடுபட்ட நாடுகள்: ஏன்?

இந்த பட்டியலில் இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானப் படைகள் இடம்பெறவில்லை. இந்த நாடுகள் ஆயிரக்கணக்கான விமானங்களை வைத்திருக்கின்றன. இவை விமானப் படைத்துறையில் ஜாம்பவான்களாக இருந்தாலும், இது Fixed wing Combat aircraft விமானங்களை அதிகம் வைத்திருக்கும் நாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல்