31 December 2013

ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு !!



நேற்று இரவு வழக்கமாக வாழைப்பழம் வாங்கும் பெட்டிக் கடையில்
தொங்கவிடப்பட்டிருந்த பத்திரிகை பேனரை பார்த்துக் கொண்டிருந்தேன்.

" நாகர் : தாயைக் கொன்று சாக்கில் கட்டிய வாலிபர் "

என்ற தலைப்பைப் பார்த்து திடுக்கிட்டேன். பக்கத்தில் இரு பெரியவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களும் இதைப்பற்றியே பேசினார்கள்.

" ஆராம்பள்ளியிலே நடந்தது பாத்துக்கோ ...
வயக்காட்டிலே வச்சு போட்டு தள்ளிட்டா ன் "
" எதுக்கா வேண்டியாம் ?"
" எல்லாம் சொத்து தகராறுதான் "

" பால் கொடுத்து வளர்த்தத் தாயை கொல்ல எப்படிங்க மனசு
வந்துது ?" ன்னு நான் கேட்டேன்.
" அட போங்க பாய்...பெத்தவளுக்கு சொத்து இருந்து ரெண்டு பிள்ளைகளும் இருந்தா
அதை ரெண்டு பேருக்கும் சமமா பங்கு வச்சுக் கொடுக்கணுமா வேண்டாமா ? ஒருத்தனுக்குக் கொடுத்து இன்னொருத்தனுக்குக் கொடுக்காட்டா அவன்
என்ன பண்ணுவான் ... கொலைதான் பண்ணுவான் " அப்படின்னாரு ஒருத்தரு .

" ஒரு கண்ணுல வெண்ணையும் மறு கண்ணுல சுண்ணாம்பும் வச்சா
இதுதான் கதி " ன்னு இன்னொரு பெரியவர் நியாயம் சொன்னாரு.

" ஆனாலும் இப்படியா ? ன்னு நான் லேசாக முணுமுணுத்தேன்.

அந்த பெரிய ஆளுக்கு கொஞ்சம் கோபம் வந்து விட்டது. ( அவரும் பாதிக்கப்பட்டிருப்பார்போல ..)
" ரெண்டு பிள்ளைல ஒருத்தன் பணக்காரனா இருப்பான். இன்னொருத்தன் பாவமா இருப்பான்.. அது என்னங்க நியாயம் ? ஒரு நல்ல தாயிக்காரி
இப்படி செய்வாளா " னு கேட்டாரு.
எனக்கு பதில் சொல்லத் தெரியல...
நமக்கெதுக்கு வம்புன்னு வந்துட்டேன்.

" உங்கள் குடும்பத்தாரிடம் மனைவி மக்களிடம் நீதமாக
நடந்து கொள்ளுங்கள். அவர்களிடையே அநீதம் இழைக்காதீர்கள் "
என்ற நபிகளாரின் அறிவுரைதான் நினைவுக்கு வந்தது.
-அஷ்ரப்

நீங்கள் நினைத்தவுடன் களைந்து விட ஹிஜாப் எங்கள் உடையல்ல.... - உயிர்



நீங்கள் நினைத்தவுடன் களைந்து விட ஹிஜாப் எங்கள் உடையல்ல.... - உயிர் வெற்று வார்த்தைகளால் விரட்டி விட - அது வெறும் உணர்வல்ல... - எம் பெண்ணினத்தின் உரிமை மிரட்டல்களால் துகிலுரிய அவை துப்பட்டாக்கள் அல்ல...எங்கள் மானம் காக்கும் தோட்டாக்கள்..... நாங்கள் ஹிஜாப் உடுத்துவது என்னவோ உடலில்தான்...- ஆனால் எங்கள் உயிரோடல்லவா அதைத் தைத்து வைத்திருக்கிறோம்???? அதைக்களைய உங்களால் ஒருபோதும் முடியாது.... ஹலால் எங்கள் கிணற்றுத்தண்ணீர்..... திருட்டுத்தனமாய் கவர நினைத்தீர்கள்... நாங்களே அள்ளிக்கொடுத்துவிட்டோம் - அது எங்கள் பெருந்தன்மை.. ஆனால் ஹிஜாப்???? நாங்கள் அடுப்பெரிக்கும்நெருப்பு அணைக்க நினைக்காதீர்கள்!!!! எரிந்து போவீர்கள்.... புத்தரின் போதனைகளில் ஒன்றைத்தானும் உடன் பிறந்தவர்களுக்கே ஊட்ட முடியாத நீங்களா???? உடைக்க நினைக்கிறீர்கள்எங்கள் ஈமானிய உணர்வுகளை... உடை உடுத்தும் நிர்வாணமாய் அலைகிறாளே உங்கள் இன சகோதரி... முடிந்தால் அவளுக்கு அறிமுகம் செய்யுங்கள்;.. புத்தர் வறையறுத்த ஆடைகளில் ஒன்றையேனும்... முடியாது!!!!!!..- உங்களால் முடியவே முடியாது.. உங்கள்; சமூகத்தில் நீங்கள் ஆடுகளாய் மாறிப்போனதினால்தான் எங்களிடம் வேங்கைகளாய் வேசம்போடுகிறீர்கள்!!!!... உங்களை அன்புடன் தொட்டுப் பேசியதற்காய் - எம் இனத்தை வெட்டிப்போடப்பார்க்கிறீர்கள்...- ஆனால் அந்நிய தேசத்தில் உங்களில் ஒருவன் அடிமேல் அடிவாங்குகின்றான்... காவியுடைக்காகவும்,,,, என்றோ நீங்கள் செய்த பிழைக்காகவும்.... இப்போது எங்கே உங்கள்; இணையத்தளங்களும்... இதயமே இல்லாத கருத்துரைகளும்... போதி மரங்களில் ஞானப்பால் வடியலாம்!!!!! ஆனால் இன்று கள்ளிப்பால் அல்லவா வடிகிறது????... காவியுடைகள் கூட இன்று இனவாதத்தால் கறுத்துப்போய்விட்டன. மனிதாபிமானமே இல்லா தர்மச்சக்கரங்களுக்குள் மிதிபடுகிறது எங்கள் பெண்மை.. மிருகவதைக்காய் குரல் கொடுக்கும் உங்கள் தர்மத்தில் மனித வதைக்கு தாராள அனுமதியோ???? உங்கள் அகோரப்பசிக்கு ஆளான..... சின்னஞ்சிறுசுகளில் ஒன்றைக்கேட்டுப்பாருங்கள்.. அது சொல்லும்.... நானும் ஹிஜாப் அணிந்திருந்தால் - இந்த மிருகங்களிடம் இருந்து தப்பியிருப்பேன் என்று.... இத்தனைக்குப் பின்னரும் உங்களை மன்னிக்க மனசு வருகிறது...ஏனெனில் நீங்கள் முகத்திற்கு முன்னால் நின்று எங்களை எதிர்க்கும் வீரர்கள் என்பதால்... பெற்ற தாயின் முக்காடுகள் களையப்படும் பொழுதும்,,,,,, உடன் பிறந்தவளின் உடைகள் கிழிக்கப்படும் பொழுதும்....,,, எங்கள் தனித்துவமும் தன்மானமும் நசுக்கப்படும் பொழுதும்,,,,, எச்சில் ஒழுகும் நாக்குகளை தொங்கவிட்டுக்கொண்டு.. எஜமான விசுவாசத்துடன்... மௌனமாய் இருக்கிறார்களே எங்கள் அரசியல் தலைமைகள் அவர்களைவிட நீங்கள் எவ்வளவோ மேல்... எங்களை வதைத்தாவது நீங்கள் பௌத்தம் வளர்க்க நினைக்கிறீர்கள்.... அவர்களோ!!!! எங்களை விற்றாவது பதவிகளை வாங்க நினைக்கிறார்கள்.. காலவோட்டத்தில் உங்கள் தவறுகள் மறைந்து போகலாம்;;.... கடைசிவரை அவர்களின் துரோகத்தினை மறக்கமாட்டோம்.... மீண்டும் ஒரு முறை அவர்களை பதவியில் இருத்த மாட்டோம்... ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்..- சரித்திரத்தில் எங்கள் வரலாறு இரண்டு விதமாய் எழுதப்பட்டிருக்கிறது... சிங்கள அரசனுக்காய் உயிர் துறந்த பெண்மையும் நாங்களே.. சீறிவந்த எதிரியின் தலைகளைக் கொய்த,,,,, சுமையாக்களும் நாங்களே!!!! நன்றி:இன்பாக்ஸில் அனுப்பிய நண்பா...
-அஷ்ரப்

காதலருடன் ஓடிப்போகும் பெண்களின் நிலை



பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.
உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம், நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ.
அல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள், ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய், தகப்பனும் வேண்டாம்,அண்ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி, நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது.
நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்க படுகிறாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.
இறுதியில் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.
ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம். உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே,அழகான முறையில் எடுத்துசொல்லுங்கள், இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும், பெற்றோர்கள் விழிப்போடு இருக்கவேண்டும், தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும். நம் சகோதரிகளை பாதுகாக்கவேண்டும்.
தகவலுக்கு நன்றி.
மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்
இலங்கை

-

அஷ்ரப்