31 October 2014

இ-காமர்ஸ் தவறுகள்...எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?



கடந்த சில வாரங்களாக -காமர்ஸ் துறை பற்றிய விவாதங்களும், அதன் ஆஃபர்கள் குறித்த சர்ச்சைகளும் அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. ஆன்லைனில் அளிக்கப்படும் கவர்ச்சிகரமான தள்ளுபடி விலையைப் பார்த்து மயங்காத வாடிக்கையாளர்களே இல்லை. ஆசையில் பொருளை வாங்கிவிட்டு, பிற்பாடு அவஸ்தையை அனுபவித்தவர்கள் பலர். ஆன்லைனில் நாம் பொருள்களை வாங்கும்போது செய்யும் தவறுகள் என்னென்ன? இதில் எவ்வளவு விழிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம்.
ஏற்றி இறக்கும் ஆஃபர்!
-காமர்ஸில் பொருள் வாங்குபவர்கள் முதலில் கவனிக்க வேண்டியது, விலையைத்தான். சமீபத்தில் பிரபல -காமர்ஸ் இணையதளம் ஒன்று ஃபாலோ செய்த டெக்னிக் திகைக்க வைத்தது. ஒரு குறிப்பிட்ட விலையைப் பொருளின் விலையாக நிர்ணயித்துவிட்டு, அதில் 60% ஆஃபரை வழங்கியது. ஆனால், அந்த இணையதளம் காட்சிக்கு வைத்த பொருளின் புகைப்படத்தில் அதிகப்பட்ச விற்பனை விலை (MRP) குறைவாகத்தான் அச்சிடப்பட்டிருந்தது. உண்மையில் ஒப்பிட்டுப்பார்த்தால், ஆஃபர் விலையானது அச்சிடப்பட்ட விலையைவிட அதிகம். இப்படி விலையை உயர்த்தி, பின்னர் அதில் தள்ளுபடி வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன ஆன்லைன் நிறுவனங்கள். ஆக, ஒரு பொருளின் விலை நேரடியாக விற்கப்படும் கடைகளில் எவ்வளவு என நன்கு விசாரித்து, ஆன்லைனில் நிஜமாகவே குறைவாக இருந்தால் மட்டுமே வாங்கலாம்.
http://cdnw.vikatan.com/nanayam/2014/11/njrlmg/images/nav45a.jpg
நிதானம் முக்கியம்!
இன்னும் சில மணி நேரங்களுக்கே ஆஃபர் என ஆன்லைனில் செய்யப்படும் விளம்பரங்களைப் பார்த்து நீங்கள் அவசரப்பட வேண்டாம். காரணம், பொருள்களை வாங்கும்முன், அந்தப் பொருளின் விலை எப்படியெல்லாம் மாறி தற்போது இந்த விலையில் இருக்கிறது என்பதை வரைபடமாக வழங்கும் அளவிலான தொழில் நுட்பத்தைக் கூகுள் வழங்கியுள்ளது. உங்கள் கூகுள் க்ரோம் ப்ரெளஸரில்கம்பேர் ஹாட்கே’ (Compare Hatke) எனும் இணைப்பை இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும், நீங்கள் எந்த -காமர்ஸ் இணையதளத்தில் எந்தப் பொருளைத் தேடினாலும், அதன் முந்தைய விலையை வரைபடமாக தந்துவிடும். இதற்கு அதிகபட்சம் இரண்டு நிமிடம்கூட ஆகாது. இந்த இரண்டு நிமிடத்துக்கு அவசரப்பட்டால் குறைந்த விலையில் வர்த்தகமான பொருளை அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும்.

மிகக் குறைந்த விலையா, உஷார்!
குறிப்பாக, சில பொருள்கள்ஒன்லி ஆன்லைன்என்ற முறையில் விற்கப்படுவதை வாங்கும்போது சற்றுக் கவனமாக வாங்குங்கள். அதனை நம்மால் விலை ரீதியாகவோ அல்லது யாராவது ஒருவரின் அனுபவத்தில் இருந்தோ, அவற்றைப் பற்றிய கருத்தைப் பெறுவது என்பது கடினமான விஷயம் தான். ஆனால், அவர்கள் அளித்திருக்கும் வசதிகளுக்கு இந்த விலை சரிதானா என்று பாருங்கள். அதிகமாக இருந்தால் வாங்குவதைத் தவிர்க்கலாம். விலை மிகவும் குறைவாக இருந்தால், சற்றுத் தரம் குறைந்த அல்லது இரண்டாம் தர பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது என்று அர்த்தம். அதனால் மிகக் குறைந்த விலையில் பொருள்களை ஆன்லைனில் வாங்குவதை, அதுவும் ஒன்லி ஆன்லைனில் வாங்குவதைத் தவிருங்கள்.
http://cdnw.vikatan.com/nanayam/2014/11/njrlmg/images/nav45b.jpg
உத்தரவாதம் உண்டா?
நிஜமான தள்ளுபடி விலையில் பொருள்களை வாங்குகிற அதேநேரத்தில், அந்தப்  பொருளுக்கான கேரன்டி சர்ட்டிஃபிகேட்டைப் பார்த்து வாங்கு வதும் முக்கியம். எந்த ஒரு பொருளுக்கு கீழேயும் தரப்பட்டிருக்கும் விவரங்களை நம்மில் பலரும் படித்துப் பார்ப்பதே இல்லை. அதில், இதனை வழங்கும் சப்ளையர் உத்தரவாதமானவரா என்பதை அறியசெக்யூர் ஷாப்பிங் சான்றிதழ் ஒன்று வழங்கப்பட்டிருக்கும். அப்படி வழங்கப்பட்ட பொருள்களுக்குத் தான் ஏதாவது தவறு நடந்தால், இழப்பீடோ அல்லது சர்வீஸோ திரும்பக் கேட்க முடியும். சான்றிதழ் பெறாதப் பொருள்கள் ரிஸ்க் நிறைந்தவையே!
கேஷ் ஆன் டெலிவரி!
இதேபோல், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்து பவர்கள் வெரிசைன், எஸ்எஸ்எல் போன்ற பாதுகாப்பான வழிகளில் பணப் பரிமாற்றம் செய்யப்படுகிறதா என்பதையும் கவனியுங்கள். பாதுகாப்பற்ற முறையில் பணப் பரிமாற்றம் செய்து பணத்தை இழக்காதீர்கள். கூடியமட்டில் கேஷ் ஆன் டெலிவரி முறையைப் பின்பற்ற பாருங்கள். ஏனெனில், நீங்கள் ஆர்டர் செய்த பொருள் உங்களை வந்து சேரவில்லை என்றாலும் அதனால் நீங்கள் பணத்தை இழக்கப் போவதில்லை. தவிர, சமீபத்தில் நடந்த மெகா விற்பனையில் கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்தவர்களுக்கு கிரெடிட் கார்டில் பணம் கட்டியவர்களைவிட சீக்கிரமாகவே பொருள்கள் வந்து சேர்ந்திருக்கிறதாம்!
http://cdnw.vikatan.com/nanayam/2014/11/njrlmg/images/nav45c.jpg
வருகிறவர் சரியான ஆளா?
கேஷ் ஆன் டெலிவரி முறையில் பொருள்களை வாங்கும்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். உங்களுக்குப் பொருள்களைக் கொண்டுவந்து தரும் நபர் அதிகாரப்பூர்வ நிறுவனத்தின் டெலிவரி நபர்தானா என்பதைக் கவனியுங்கள். அவர் உங்களிடம் வாங்கும் கையெழுத்து மற்றும் உங்களிடம் பொருளை வாங்கியவுடன் அவர் நிறுவனத்துக்கு அவரிடம் உள்ள கருவி மூலம் செய்தியைத் தெரிவிப்பார். உடனே உங்கள் செல்போனுக்கு நீங்கள் ஆர்டர் செய்த நிறுவனத்திலிருந்து எஸ்எம்எஸ் வரவேண்டும். சில நேரம் உங்கள் மெயிலுக்கு இன்வாய்ஸ் அனுப்புமாறு செய்திருப்பார்கள்; அதனையும் கவனித்துப் பாருங்கள். அப்படி இல்லையெனில், சமீபத்தில் ஒரு கும்பல்
பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் நீங்கள் ஆர்டர் செய்த பொருள் இதுதான் என வெறும் பெட்டியைக் கொடுத்து  பணத்தை ஏமாற்றியிருக்கிறது.
இதுபோன்ற விஷயங்களைக் கவனித்து -காமர்ஸ் தவறுகளில் சிக்கி பணத்தை இழக்காமல் பாதுகாப்பாகப் பர்ச்சேஸ் செய்யுங்கள்!
-அஷ்ரப்

23 October 2014

மது ஒரு பொதுத்தீமை

மிழின் நீதி நூலான 'திரிகடுகம்' என்ற நூலில் மது குடிப்பவன் குறித்து கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:

"உறவினர்களின் பாதுகாப்பிற்குப் பயன்படாத செல்வம்,
பயிர் விளைந்த காலத்தில் அதைப் பாதுகாக்காதவனின் நிலம்.
இளம் வயதிலேயே கள்குடித்து வாழ்கிறவனின் குடிபிறப்பு"

இம்மூன்றுமே கெட்டுவிடும் என்கிறது அந்தத் திரிகடுகம் பாடல்.

மதுவால் புத்தி பேதலித்தவர்கள் எத்தனைப்பேர்.....?
மதுவால் தற்கொலை செய்தவர்கள் எத்தனைப்பேர்....?
மதுவால் பிறரைக் கொண்றவர்கள் எத்தனைப்பேர்....?

ஒய்வறியாமல் உழைத்து உருக்குலைந்து குடிபோதையில் தடுமாறும் கணவன்மார்களின் கால்களில் மிதிபட்டு, பசி மயக்கத்தில் தள்ளாடும் பிள்ளைகளுக்கு சோறிடும் பொறுப்பைச் சுமந்தபடி அன்றாடம் வாழ்க்கையுடன் போராடும் இலட்சக்கணக்கான தமிழக கிராம பெண்களின் அவலம் உங்களுக்கு தெரியுமா?

ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், குடும்பத்தலைவனை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி, குடியானவனை கொன்று விட்டு, அவனது மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இது அந்த ஏழைக் குடியானவன் இதுவரை அரசுக்குச் செலுத்தி வந்த டாஸ்மாக் கப்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப ஒய்வூதியமா என்பதை இந்த அரசு விளக்குமா?

தமிழகத்தில் ஏற்கனவே 6 சாராய ஆலைகளுக்கு அனுமதி இருந்த நிலையில், இதே உள்துறை, மேலும் 8 ஆலைகளுக்கு அனுமதி அளித்து, இனி மொத்த 14 ஆலைகள் இரவும் பகலும் சாராய உற்பத்தி செய்து, தமிழக ஆண்மக்களின் வாய்களில் மதுவைத் திணித்துவிட்டு.அப்புறம் என்ன மயி.....க்கு மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு என்று எச்சரிக்கை செய்கிறது?

குடிபோதையில் வீட்டிற்கு வராமல் தன் மனைவி குழந்தைகள் வீட்டில் என்னவானார்கள் என்பதைப்பற்றி கூட கண்டுக்கொள்ளாத அவர்களின் பாதுகாப்பு குறித்துக்கூட கவலைப்படாத கணவன்மார்கள்,மதுவால் தன் மகளிடம் தகாத முறையில் நடக்கும் தந்தை, தன் மருமகளிடம் மப்பில் மதி கேட்டு நடக்கும் மாமனார், தன் தாய் மது அருந்த காசு தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக கொலை செய்ய துணியும் மகன்.....இப்படி மது பழக்கம் கருவையே கருவருக்கின்றது


மது அருந்தும் தனிப்பட்ட மனிதனோடு அதன் பாதிப்பு நின்றுவிடுவதில்லை. ஆனால் அது அருந்தியவனின் மனைவி, பிள்ளைகள், குடும்பம், வசிக்கும் பகுதி என பாதிப்பின் வலை விரிந்துகொண்டே செல்வதுதான் போராபத்து. சமூகத்தின் பொருளாதாரத்தையும், பண்பாட்டையும் ஒருசேர குழித்தோண்டிப் புதைக்கும்.

எனவே தான் மதுவை ‘தீமைகளின் தாய்’ என்று இஸ்லாம் கூறுகிறது.

இந்த மதுவை குறித்த சிறு வரலாற்றுப்பார்வை:

மதுவைக் காய்ச்சி வடிகட்டும் முறை (Distillation) அன்றைய அரேபிய, பாரசீக, ரோம சாம்ராஜ்யங்களில் நிலவி வந்தது. இதில் ஒயினை விடவும் கூடுதல் போதை தரும் ‘அல்-கூகுல்’ எனும் திரவத்தைக் கண்டு பிடித்தவர் ஜாபர் இப்னு கையாம் என்பவர். இவர் ஒரு வேதியல் அறிஞர். இந்த அல்-கூகுலே பிறகு அல்கஹால்
 என்று அழைக்கப்பட்டது.

ஜாபர் இப்னு கையாம் அதை மருந்தாகத்தான் பயன்படுத்தினார். அவரது நோக்கமும் அதுவே. பிறகு 13-ம் நூற்றாண்டில் இத்தாலிமாண்ட் பெல்லியர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்னால்ட் வில்லோனோவா என்பவர்தான் அதை மதுவாகவும் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்தார். இன்றைய நவீன மது வகைகள் தோன்றிய வரலாறு இதுவே.

தமிழகத்தில் சங்க காலத்திற்கு முன்பே மதுவை முறையாக அறிமுகப்படுத்தியவர்கள் ஆரியர்கள்தான். கைபர், போலன் கணவாய் வழியாக வரும்போதே சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளையும் கையில் கொண்டு வந்தார்கள். மது அருந்தாததையே அடையாளமாகக் கொண்டு அசுரர்கள் என்று தமிழரை அழைத்தார்கள். சுரபானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டு. சுரபானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள்.

ஆனால் இன்று தமிழர்கள், திராவிடர்கள் என்று சொல்லப்படுகின்றன தமிழகத்தின் நிலை என்ன தெரியுமா? சில புள்ளி விபரங்களை பார்ப்போம்.

1.குவார்ட்டர் கட்டிங், சைட் டிஷ் போன்ற அதிமுக்கியமான தலைப்புகளில் சினிமா படங்கள் தயாரிக்கப்படுவது இங்கே தான்.

2. இன்று இந்தியாவில் மிக அதிகமாக மது அருந்துபவர்கள் உள்ள மாநிலம் தமிழகம். இங்கு 13 வயது சிறுவர்கள் கூட குடிகாரர்களாக இருக்கிறார்கள்.

3. தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. அவர்களில் 20 விழுக்காட்டினர் குடியைவிட்டு மீளமுடியாத அளவுக்கு அடிமைகள்.

4.தமிழகத்தில் அன்றாடம் மது அருந்துபவர்களில் 49 இலட்சம் பேர் 13 முதல் 28 வயதை சேர்ந்தவர்கள்.

5.மிக அதிகமான சாலை விபத்துக்களைக் கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்தையே சேரும். ஒராண்டில் நடக்கும் 60,000 சாலை விபத்துகளுக்குப் பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் இருக்கலாம். ஆனால் 60 விழுக்காடு சாலை இறப்புகளுக்குக் குடித்துவிட்டு ஓட்டுவதே முதன்மைக் காரணம்.

6.மதுபான விற்பனையால், ஆண்டு தோறும் தமிழக அரசுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசின் சொந்த வருவாயில், கிட்டதட்ட 30 சதவீத அளவுக்குச் சாராய விற்பனையில் இருந்து கிடைக்கும் நிலை.

7.கிராமப் புறங்களில் உள்ளவர்கள் தங்கள் வருமானத்தில் 24 சதவீதத்தையும், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் 32 சதவீதத்தையும் மதுபானத்துக்காக செலவிடுகிறார்கள்.

நமது எதிர்கால சமூகத்தை நினைத்தால் பயமே ஏற்படுகிறது.


டாஸ்மாக் குடிவெறியில் மனைவி, மகனை 

கொன்ற விவசாயி

போதையில் தடுமாறும் தந்தை
போதையில் பொது இடத்தில் போலீஸ்
சத்தியமா இது திருவிழா கூட்டம் இல்லீங்கே
மாணவர்கள் எதிர்கால இந்திய எங்கே
நிற்கிறது பார்த்தீர்களா?
போதை என்பதே விஷம் தான். அது எந்த வடிவத்தில் சமூகத்தில் நடமாடினாலும் சரி. இந்த பொதுத்தீமையை எதிர்த்துப் போர்த்தொடுப்போம். வைரஸ் காய்ச்சலை விட மிக வேகமாக பரவி வரும் இந்த போதைக் கலாச்சாரத்தை அழிக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. இதிலிருந்து நாம் நழுவினால், வருங்கால தலைமுறையினருக்கு பதில் சொல்ல வேண்டியது வரும்.


(நன்றீ;
ஹைதர் அலி,)
-அஷ்ரப்

மனிதநேய மார்க்கம் இஸ்லாம்




இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது.

இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும் சொல்லாடல் இணைக்கப்பட்டு இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற இணைப்பாகும்.

மனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல.
மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும், மனித நேயம் மிளிர வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது. அதனாலேயே எல்லா மதங்களை விடவும் அதிகமாகவே இஸ்லாத்தின் போதனைகளில் மனித நேயம் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.
அவற்றை அறியும் போது இஸ்லாம் தீவிரவாதத்தைப் பரப்பும் மார்க்கம் அல்ல, மனித நேயத்தை மற்ற மதங்களை விடவும் அதிகம் பரப்பும் மார்க்கம் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

ஒரு தாய் மக்கள்

மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு. நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு இணைப்பு, நெருக்கம் உண்டாகும். இந்த உணர்வு இல்லையாயின் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன? என்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம் உண்டாகிவிடும்.
இஸ்லாம் அத்தகைய சகோதர உணர்வைத் தவறாது ஏற்படுத்தி விடுகிறது.
மக்கள் அனைவரும் ஜாதி, மதப் பாகுபாடின்றி ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே என்று கூறி அன்பு செலுத்துவதற்கான அடிப்படை உணர்வை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
(திருக்குர்ஆன் 49:13)

இஸ்லாம் கூறும் ஒரு தாய் மக்கள் என்ற இந்தச் சித்தாந்தம் தீவிரவாதத்தை அடியோடு அடித்து நொறுக்கும் சித்தாந்தமாகும். அனைவரும் சகோதரர்கள் சகோதரர்களுக்குள் வெட்டுக் குத்து, சண்டை சச்சரவு இருக்கக் கூடாது என்பதே இந்தச் சித்தாந்தம் வலியுறுத்தும் கருத்தாகும்.

பிறருக்கு உதவு

சிரமப்படும் மக்கள் யாராக, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதர உணர்வோடு அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அது மிகச்சிறந்த தர்மம் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.

தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்என நபியவர்கள் கூறியதும் தோழர்கள்அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்?” எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்?” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை என்றால்?” என்றதும், “நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்திட வேண்டும் இதுவே அவர் செய்யும் தர்மமாகும்என்று கூறினார்கள்.
நூல்: புகாரீ 1445

ஏழையும் இறைவனும்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இதையும் தாண்டி இஸ்லாம் மனிதனுக்கு உதவி செய்வது இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றது எனவும், மனிதர்களை உதாசீனப்படுத்துவது படைத்த இறைவனையே புறக்கணிப்பதைப் போன்றது எனவும் போதிக்கின்றது. இது இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மனிதனுக்கு உதவுவதை இறைவனுக்கே உதவுவதைப் போன்று ஒப்பீடு செய்யும் இதை மிஞ்சிய மனிதநேயம் வேறென்ன இருக்கின்றது?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், “ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லைஎன்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லைஎன்று கூறுவான்.

அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லைஎன்று கூறுவான்.

அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).
நூல்: முஸ்லிம் (5021)

மனிதர்களிடம் இரக்கம்

மனிதர்களுடன் இரக்க உணர்வோடு நடந்தால் தான் இறைவன் நம்மிடம் இரக்கம் காட்டுவான் என்ற இஸ்லாத்தின் போதனை இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மற்றுமொரு முத்திரை பதித்த சான்று.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 7376

போரில் மனித நேயம்

போர் என்றாலே மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட களமாகப் பார்க்கும் உலகம் இது. போர் என்று வந்து விட்டால் சிறியவர், பெரியவர், குழந்தைகள், பெண்கள், அப்பாவிகள் என ஒருவர் விடாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் கொன்றொழிக்கும் அழிவுக் கலாச்சாரம் தான் இன்றைய போர்முறை. சர்வதேச நாடுகளில் எந்த ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. போர் என்றால் பொதுமக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று ஆட்சியாளர்களே அதை நியாயப்படுத்திப் பேசுவதையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் இஸ்லாம் மாத்திரம் தான் போர்க்களத்தையும் மனித நேயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய களமாகப் பார்க்கிறது. ஆகவே பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், போருக்குத் தொடர்பில்லாத அப்பாவிகள் ஆகியோரைப் போரில் கொல்ல இஸ்லாம் தடைவிதிக்கின்றது. அவற்றைப் பெரும்பாவமாக அறிவிப்பு செய்கின்றது.

நடைமுறை உலகில் சிறு குற்றமாகக் கூட பார்க்காத ஒன்றை இஸ்லாம் பெரும்பாவம் என்று குறிப்பிடுவது மனித உயிர்களுக்கு இஸ்லாம் அளிக்கும் மதிப்பை மிகச்சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
இன்னும் எண்ணற்ற செய்திகள், இஸ்லாம் மனிதநேயத்தைப் போதிக்கும் மார்க்கம் என்பதை சான்றளிக்கின்றது. அது எங்கேயும் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை.

இப்படி தீவிரவாதத்திற்கு எதிராக, மனிதநேயத்திற்கு ஆதரவாக தனது சாட்டையைத் தீவிரமாக சுழற்றும் இஸ்லாத்தை தீவிரவாத மார்க்கம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்?

அறிவிலிகள், மனிதநேயமற்ற சில காட்டுமிராண்டிகள் செய்யும் தீவிரவாதச் செயலால் அவர்கள் சார்ந்த மதத்தை தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்துவது எந்த வகையிலும் ஏற்க இயலாத, நியாயமற்ற செயலாகும்.
-அஷ்ரப்