29 November 2014

சர்க்கரை வள்ளிக்கிழகு

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பொதுவாக கார்போஹைட்ரேட் அதிகஅளவில் இருப்பது அனைவரும் அறிந்தது. ஆனால் வேறு சில முக்கிய சத்துக்களும் உள்ளன.
வெப்ப மண்டலப் பகுதிகளில் விளையும் கிழங்கு வகையை சேர்ந்தது சக்கரை வள்ளி. சிவப்பு, சாம்பல், கருஞ்சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் சக்கரை வள்ளி கிழங்கு காணப்படுகின்றன. சக்கரைவள்ளி கிழங்கில் அதிகளவில் மாவுச்சத்து மற்றும் நார்ச்சத்து இருப்பதால் உடலுக்கு உடனடியாக ஆற்றல் தரும். சக்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு சத்து குறைந்த அளவில் இருக்கிறது. மேலும், இதில் உள்ள பீட்டா கரோடின் என்ற இயற்கையான அமிலச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சர்க்கரை சத்து கொண்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கில், வைட்டமின் ஏ சத்து அதிகளவில் இருப்பதால் தோல் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு நன்மை தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்
-அஷ்ரப்

பால் குளியல்... கருத்தரிப்புச் சோதனை... பெண்களின் சடலங்கள்!

ஜெகஜால சாமியார் சான்ட் ராம்பால்
பாலியல் அட்டகாசங்கள் தொடங்கி பல்வேறு அராஜகங்களை, அக்கிரமங்களை அரங்கேற்றி அதிர வைக்கிற சாமியார்களின் வரிசையில் புதிதாகச் சேர்ந்துள்ளார் சான்ட் ராம்பால். கொலை வழக்கில் தன்னைக் கைதுசெய்ய வந்த ஆயிரக்கணக்கான போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையை எதிர்த்து நின்று 'போர்’ புரியும் அளவுக்கு 'ராணுவ’ வல்லமை படைத்தவர் இந்தச் சாமியார். பிரேமானந்தா, நித்யானந்தா, ஆசாராம் பாபு, பாபா ராம்தேவ் என பலே சாமியார்கள் அனைவரையும் மிஞ்சிவிட்டார், ஹரியானாவைச் சேர்ந்த 63 வயதாகும் இந்தச் சாமியார். கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ள இவரது ஆசிரமத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக ஆடம்பர வசதிகள் அனைத்தும் இருந்துள்ளன. ராம்பால் தினமும் பாலில்தான் குளிப்பாராம். அந்தப் பாலில் 'கீர்’ தயாரித்து பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுமாம்.
சாமியாராக மாறிய என்ஜினீயர்
ஹரியானாவில் விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்த ராம்பால், ஐ.டி.ஐயில் படித்துவிட்டு, மாநில நீர்ப்பாசனத் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். இளநிலை பொறியாளரான அவர், வேலையில் கவனம் செலுத்தாததால் 2002ல் பணிநீக்கம் செய்யப்பட்டார். உ.பியில், 15ம் நூற்றாண்டில் பக்தி இயக்கத்தை உருவாக்கிய கபீரின் மறுபிறவி என்று தன்னை அறிவித்துக்கொண்டார். லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் பெருகினர்.
கொலை வழக்கு!
ஆர்ய சமாஜத்தினருக்கும் ராம்பால் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு, ஒருவர் கொல்லப்பட்டார். அந்தக் கொலை வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் 43 தடவை சம்மன் அனுப்பியது. அதை ராம்பால் மதிக்கவே இல்லை. கடுப்பான நீதிபதிகள், கடந்த 5ம் தேதி ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தனர்.
ஹிசார் மாவட்டம் பார்வாலாவில் 12 ஏக்கர் பரப்பளவில் உள்ள ராம்பாலின் ஆஸ்ரமத்தைச் சுற்றி, ஹரியானா போலீஸின் 30 கம்பெனிகள், துணை ராணுவப் படையினர் மற்றும் 1000 கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டனர். சாமியாரின் ஆதரவாளர்கள் செங்கல், தடிகள்கொண்டு போலீசாரைத் தாக்கினர். சாமியாரின் பயிற்சிப் பெற்ற 'ராணுவ’ கமாண்டோக்கள் பெட்ரோல் வெடிகுண்டுகளையும், ஆசிட் குப்பிகளையும் போலீசார் மீது வீசினர்.
மனிதக் கேடயங்கள்!
ராம்பாலின் அப்பாவி பக்தர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் ஆஸ்ரமத்துக்குள் இருந்தனர். உள்ளே நுழைய முயன்ற போலீஸார் மீது சாமியாரின் கமாண்டோக்கள் துப்பாக்கியால் சுட்டனர். போலீஸாரும் பதில் தாக்குதல் நடத்தினர். அந்தப் பகுதியே போர்க்களம்போல காட்சியளித்தது. 10 நாள் போராட்டத்துக்குப் பிறகு, கடந்த 19ம் தேதி இரவு ஆசிரமத்துக்குள் போலீஸார் நுழைந்தனர். ராம்பாலை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆசிரமத்தில் பெண்களின் சடலங்கள்!
போலீஸார் மீது தாக்குதல் நடத்த டிரம்களில் ஆசிட் நிரப்பப்பட்டு இருந்தது. ஏராளமான துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸார் கைப்பற்றினர். குண்டுகள் துளைக்க முடியாத டாடா சஃபாரி, ஒரு பஸ், 2 டிராக்டர்கள், 82 மோட்டார் சைக்கிள்கள் இருந்தன. சாமியாரின் அறையில், கருத்தரிப்பு பரிசோதனைக் கருவிகள் இருந்தன. ஆஸ்ரமத்தில் இருந்து ஒரு கைக்குழந்தை மற்றும் ஐந்து பெண்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன.
ஒரு குட்டி ராணுவத்தையே உருவாக்கி, தனியாக ஓர் அரசாங்கம் நடத்தும் அளவுக்கு ஒரு சாமியார் வளர்ந்ததை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துள்ளன. சாமியார்களின் மோசடிகள் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலமாகி வருகிறபோதிலும், அதுபற்றிய விழிப்பு உணர்வு மக்களுக்கு இல்லை. மதத்தைவைத்து அரசியல் நடத்தும் கட்சிகள், இதுபோன்ற சாமியார்களை தங்கள் அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தும் நிலையில், மக்களை மட்டுமே குறை சொல்ல முடியவில்லை.
ஆ.பழனியப்பன்
-அஷ்ரப்

28 November 2014

வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை Format செய்வதற்கு



நாம் நமது பென்டிரைவை Format (ஒழுங்கமைப்பு) செய்யும் போது சில சமயம் அது இயலாமல் இருக்கும். இதற்க்கு முக்கிய காரணம வைரஸ் தான் இருக்க கூடும்.
இதனை சரி செய்வதற்கு முதலில் Format செய்யும் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். உங்களால் உங்கள் பென்டிரைவை நேரடியாக Format செய்ய இயலவில்லை எனில் My Computer->(Right Click) Manage->Disk Management-> சென்று உங்கள் பென்டிரைவின் எழுத்தில் வலது கிளிக் செய்து Change Drive Letter And Paths-ல் தெரிவாகி உள்ள எழுத்தினை நீக்கம் செய்யவும்.
இப்போது அதே இடத்தில் உங்கள் பென்டிரைவ் மீது வலது கிளிக் செய்து Format கொடுக்கவும். இப்போது Format ஆகிவிடும், பின்னர் மீண்டும் வலது கிளிக் செய்து அதற்கு எழுத்து ஒன்றை தெரிவு செய்து விடவும், இல்லை என்றால் உங்கள் பென்டிரைவ் My Computer இல் தெரியாது.
இந்த முறையில் Format ஆகவில்லை என்றால் உங்கள் கணனியால் அந்த பென்டிரைவை Format செய்ய இயலாது
-அஷ்ரப்

பெண் குழந்தை ஒரு பாக்கியம்..!





இந்த உலகில் ஒரு சில நல்லமல்களை செய்து விட்டு மரணித்து விடும் நாம், நமது மரணத்திற்கு பிறகும் நமக்கு நன்மையை ஈட்டு தரக்கூடிய ஒன்றை இந்த உலகில் விட்டு செல்கிறோம் என்றால் அது நமது குழந்தைகள் !
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்று செயல்கள் தவிர மற்ற அனைத்துமே நின்று விடுகின்றன.
1. நிலையான தர்மம். 2. பிறருக்கு பயன்பெறும் வகையில் அவன் கற்றுக்கொடுத்த கல்வி. 3. அவனுக்காக பிரார்த்தனை செய்கிற நல்ல குழந்தைகள்.
முஸ்லிம் 3358

எந்த குழந்தையாக இருந்தாலும், அவர்களை நாம் அன்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்ப்போம் என்றால், நாம் மரணித்த பிறகும் நமக்காக அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், சொர்க்கத்தில் ஒரு அடியானின் தகுதியை உயர்த்துவான். யா அல்லாஹ், இது எனக்கு எப்படி கிடைத்தது? என்று அவன் கேட்கும் போது, உனக்காக உன் குழந்தை பாவ மன்னிப்பு கேட்டது அதனால் தான், என்று அல்லாஹ் விடையளிப்பான்.
அஹ்மத் 10202
பெண் குழந்தைகளை நாம் வெறுப்பது என்பது, நபியை விட்டு நாம் விலகி செல்கிறோம் என்பதையே காட்டும்.
அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. (6:140)
என்று கண்டிக்கிற அல்லாஹ், இன்னொரு வசனத்தில்
அவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்கு கூறப்பட்ட கேட்ட செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து வாழ்கிறான்.இழிவுடன் இதை வைத்துக்கொள்வதா அல்லது மண்ணில் புதைத்து விடுவதா? (என்று எண்ணுகிறான்). கவனத்தில் கொள்ளுங்கள் அவன் தீர்பளிப்பது மிகவும் கேட்டது. (16:58)
என்று கூறுகிறான்.
ஹதீஸ்களில் இதற்கு விடை கிடைக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள் முஸ்லிம் 5127
முதல் ஹதீஸில், நல்ல சாலிஹான குழந்தைகள் நமக்காக பிரார்த்தனை செய்வதன் மூலம் சொர்க்கத்தில் நம் அந்தஸ்து உயர்த்தப்படுகிறது என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், இந்த ஹதீஸில், பெண் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து ஆளாக்கும் போது அதுவே நாம் சொர்கத்திற்கு செல்வதற்கு காரணமாகி விடுகிறது என்பதை விளக்குகிறார்கள் என்றால், நாம் எந்த அளவிற்கு பெண் குழந்தைகளை அன்புடனும் பாசத்துடனும் வளர்க்க வேண்டும் என்பதை புரிய வேண்டும்.
பொருளாதார சுமை அதிகரிக்கும் என்று எண்ணி கூட நமது பெண் குழந்தைகளை கொன்று விடகூடாது.
வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளை கொன்று விடாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம் என்று அல்லாஹ் 17:31 வசனத்தில் எச்சரிக்கிறான்.
இந்த எச்சரிக்கையோடு சேர்த்து நமக்கும் நமது குழந்தைக்கும் தேவையானவற்றிற்கு அல்லாஹ் பொறுப்பு என்கிற வாக்குறுதியையும் தருகிறான்.
-அஷ்ரப்

இது நம் தாய் தமிழ் நாட்டில்



111 பழங்களின் பெயர்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. சில பழங்களுக்கு அதன் தமிழ்ப் பெயர் தெரியாதபடியால் ஆங்கிலப் பெயர்கள் பாவிக்கப்பட்டுள்ளன
#A
Ambarella ——
அம்பிரலங்காய்
Apple ——
அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
Apricot ——
சருக்கரை பாதாமி

Annona ——
சீத்தாப்பழம்
Annona muricata ——
முற்சீத்தாப்பழம்
Avocado ——
வெண்ணைப்பழம்
Banana —— வாழைப்பழம்
Batoko Plum —— ‘
லொவிப்பழம்
Bell Fruit ——
பஞ்சலிப்பழம், சம்பு
Bilberry ——
அவுரிநெல்லி
Bitter Watermelon ——
கெச்சி
Blackberry ——
நாகப்பழம்
Black currant ——
கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
Blueberry ——
அவுரிநெல்லி
Breadfruit ——
சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா
Butter fruit ——
ஆனைக்கொய்யா
Cantaloupe —— மஞ்சள் முலாம்பழம்
Cashew Fruit ——
முந்திரிப்பழம்
Carambola ——
விளிம்பிப்பழம், தமரத்தங்காய்
Cherry ——
சேலா(ப்பழம்)
Cherimoya ——
சீத்தாப்பழம்
Chickoo ——
சீமையிலுப்பை
Citron ——
கடாரநாரத்தை
Citrus Aurantifolia ——
நாரத்தை
Citrus Aurantium ——
கிச்சலிப்பழம்
Citrus medica ——
கடரநாரத்தை
Citrus sinensis ——
சாத்துக்கொடி
Citrus reticulata ——
கமலாப்பழம்
Clementine ——
நாரந்தை
Cocoa fruit ——
கோக்கோ பழம்
Coccinea cordifolia ——
கொவ்வைப்பழம்
Cranberry ——
குருதிநெல்லி
Cucumus trigonus ——
கெச்சி
Cucumber ——
வெள்ளரிப்பழம்
Custard apple, sugar apple(Annona Squanosa), SWEET SOP ——
அன்னமுன்னா பழம்
Damson —— ஒரு வித நாவல் நிறப்பழம்
Date fruit ——
பேரீச்சம் பழம்
Devilfig ——
பேயத்தி
Dragon fruit ——
தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம் (தறுகண், அகி, விருத்திரம் – dragon)
Duku —— ‘
டுக்கு
Durian ——
முள்நாரிப்பழம்,
Eugenia Rubicunda —— சிறுநாவல், சிறு நாவற்பழம்
Emblica ——
நெல்லி
Feijoi / Pinealle guava —— புளிக்கொய்யா
Fig ——
அத்திப்பழம்
Gooseberry —— நெல்லிக்காய்
Grape ——
கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
Guava ——
கொய்யாப்பழம்
Hanepoot —— அரபுக் கொடிமுந்திரி
Harfarowrie ——
அரைநெல்லி
Honeydew melon ——
தேன் முழாம்பழம்
Huckle berry —— (
ஒரு வித) நெல்லி
#I…….
Jack fruit —— பலாப்பழம்
jambu fruit ——
நாவல்பழம்
Jamun fruit ——
நாகப்பழம்
Jumbu fruit ——
சம்புப் பழம்
#K
Kiwi fruit ——
பசலிப்பழம்
Kumquat —— (
பாலைப்பழம் போன்ற ஒரு பழம்)
Kundang ——
மஞ்சல் நிற சிறிய பழம்
#L
Lychee —— ‘
லைச்சி
Lansium ——
அத்திப்பழம்
Lemon ——
வர்க்கப்பழம், எலுமிச்சை
Lime ——
தேசிக்காய்
Loganberry —— ‘
லோகன் பெறி
Longan ——
கடுகுடாப் பழம், முதளிப்பழம்
Louvi fruit —— ‘
லொவிப்பழம்
#M
Mandarin —— ‘
மண்டரின்நாரந்தை
Mango ——
மாம்பழம்
Mangosteen —— ‘
மெங்கூஸ்பழம்
Melon ——
வெள்ளரிப்பழம், முழாம்பழம், இன்னீர்ப் பழம்
Mulberry ——
முசுக்கட்டைப் பழம்
Muscat Grape ——
அரபுக் கொடிமுந்திரி
Morus macroura ——
மசுக்குட்டிப்பழம்
#N……….
#O
Orange (bitter) ——
நாரந்தை , தோடைப்பழம், நரந்தம்பழம்
Orange (sweet) ——
சாத்துக்கொடி, தோடம்பழம், நாரங்கை
Orange (Loose Jacket) ——
கமலாப்பழம்
#P
Pair ——
பேரிக்காய்
Papaya ——
பப்பாளிப் பழம்
Passionfruit ——
கொடித்தோடைப்பழம்
Peach ——
குழிப்பேரி
Persimmon ——
சீமைப் பனிச்சை
Phyllanthus Distichus ——
அரைநெல்லி
Plum —— ‘
ஆல்பக்கோடா
Pomelo ——
பம்பரமாசு
Prune ——
உலர்த்தியப் பழம்
Palm fruit ——
பனம் பழம்
Passion fruit ——
கொடித்தோடை
Pear ——
பேரி
Pine apple —— ‘
அன்னாசிப் பழம்
Pomegranate ——
மாதுளம் பழம், மாதுளை
Pulasan —— (
ஒரு வகை)’றம்புட்டான்
#Quince —— சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
#R
Raisin ——
உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
Rasberry ——
புற்றுப்பழம்
Red banana ——
செவ்வாழைப்பழம்
Red currant ——
செந்திராட்சை, செங்கொடிமுந்திரி
Rambutan —— ‘
றம்புட்டான்
#S
Sapodilla(zapota) ——
சீமையிலுப்பை
Star fruit ——
விளிம்பிப்பழம்
Satsuma ——
நாரத்தை
Sour sop/ Guanabana ——
சீத்தாப்பழம்
Strawberry ——
செம்புற்றுப்பழம்
Syzygium ——
சம்புப்பழம், சம்புநாவல்
#T
Tamarillo ——
குறுந்தக்காளி
Tangerine ——
தேனரந்தம்பழம், தேன் நாரந்தை
Tamarind ——
புளியம்பழம்
Tomato ——
தக்காளிப்பழம்
#U
Ugli Fruit ——
முரட்டுத் தோடை, உக்குளிப்பழம் (உக்குளி – ugly)
#V………….
#W
Watermelon ——
வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தருபூசணி
Wood Apple ——
விளாம்பழம்
Wax jambu ——
நீர்குமளிப்பழம்

-அஷ்ரப்