இனாம் குளத்தூர் இஜ்திமா 2019..!
********************************************
அலங்கார நுழைவாயில். பிளக்ஸ் பேனர்கள். கொடி தோரணங்கள் எதுவும் இல்லை.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை- இஜ்திமாவுக்கு வந்தவர்களின் பேருந்துகள். வேன்கள். கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் அந்த வழியாக செல்லும் நெடுஞ்சாலையில் எந்த வாகன நெரிசல்களும் இல்லை.
பிரமாண்டமான பந்தலில் பயான் தொடர்ந்து நடைபெற்றவண்ணமாக இருந்தது. ஆனால் பந்தலில் உள்ளவர்களுக்கு மட்டுமே கேட்கும் விதத்தில் சவுண்ட் வைக்கப்பட்டிருந்தது. வெளியே உள்ளவர்களின் செவிப்பறையை பதம் பார்க்கும் வகையில் ஒலி பெருக்கிகள் வைக்கப்படவில்லை.
ஆலிம்களுக்கென்று தனியாக ஒரு வளாகத்தை ஒதுக்கி -பயான் அரங்கு. உணவு. உறைவிடம். கழிவறைகள் என்று அனைத்து வசதிகளும் அந்த வளாகத்திற்குள்ளேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆலிம் பெருமக்களையும் அங்கே காணமுடிந்தது.

எளிமையே வெற்றியை நல்கும்.. என்ற முறையில் இஜ்திமாவில் அனைத்து அம்சங்களிலும் எளிமையை காணமுடிந்தது.
சிறிய பொதுக்கூட்டத்திற்கே அலங்கார மேடை. மேடைக்கு பின் பிளக்ஸ் பேனர். என ஸ்டேஜ் அலங்காரத்தை பார்க்கிறோம். ஆனால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயான் சொல்ல அமைக்கப்பட்ட மேடை என்பது மரபெஞ்சுகளின் மீது துணிகள் போடப்பட்டு அதன் மீது இரு நாற்காலிகள். ஒரு மைக். ஒரு மின் விசிறி. இது தான் மேடை.

இஜ்திமாவுக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு உணவு. உறைவிடங்கள். கழிப்பறைகள்.. என மிக கச்சிதமாக எவ்வித குறையின்றி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
கொள்கைகளால் வேறுபட்ட JIH. TNTJ. JAQ.. ஆகிய அமைப்புகளை சேர்ந்த சகோதரர்களும் திரளாக வந்திருந்தனர்
இதற்கு முன்பு நெல்லை மற்றும் மேல்விஷாரத்தில் நடைபெற்ற இஜ்திமாக்கள் இணையதள தொழில்நுட்பம் வளராத கால கட்டத்தில் நடந்தது.
தற்போது இணையதள வசதிகள் உள்ளதால் இஜ்திமா குறித்த அறிவிப்புகள் பரவலாக எல்லா மக்களையும் அடைந்ததால் மக்கள் பெருமளவில் வந்திருந்தனர்.
இஜ்திமா நிகழ்வுகள் சமூக வலைத்தளங்கள் மூலமாக உள்நாடு மட்டுமன்றி சர்வதேச நாடுகளிலும் செய்திகள் அறியப்பட்டது.

இஜ்திமா பந்தலில் பார்க்கிங் முதல் பந்தி வரை ஜமாத் சேவகர்கள் ராணுவ ஒழுங்குடன் மிக துல்லியமாக சேவைகள் செய்தனர்.
ஆலிம்கள். மஸ்ஜித் நிர்வாகிகள். முக்கிய பிரமுகர்கள். தொழில் அதிபர்கள். பொதுமக்கள். மாணவர்கள். என்று பொதுஜனத்தை மிகப்பெரும் அளவில் இஜ்திமா என்ற பெயரில் திரட்டி- மூன்று நாட்கள் அவர்களுக்கு உறைவிடங்கள். உணவு. குடிநீர். கழிப்பறை.. என்று அனைத்து வசதிகளையும் வழங்கும் சக்தி - தப்லீக் ஜமாத்தை தவிர வேறு எந்த அமைப்பாலும் செய்ய முடியாது... என்பதை திருச்சி இஜ்திமா மீண்டும் உணர்த்தியுள்ளது.