28 February 2013

மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது


தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??

***** அல்லாஹ் நாடினால்......மாரடைப்பை தவிர்க்க .. ******


மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் .
அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..
பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..



நன்றி: இணையம் 

அன்பான வாழ்க்கைக்கு கொஞ்சம் விட்டுக்கொடுங்களேன்!




அன்பான வாழ்க்கைக்கு கொஞ்சம் விட்டுக்கொடுங்களேன்!



இன்றைக்கு பல குடும்பங்களில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்கின்றனர். சில தம்பதியர் மட்டுமே வேலைகளை பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் பெரும்பாலானகுடும்பங்களில் கணவனுக்கு அலுவலக வேலை மட்டுமே பெரிதாக இருக்கிறது. எல்லா பொறுப்பையும் மனைவியே சுமக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் கணவனைப் பற்றி ஒருவித அதிருப்தி மனைவிக்கு ஏற்படுகிறது. 

இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் கணவன் மனைவிக்கு இடையே ஒருவித விரோத மனப்பான்மை இருக்கிறது. இது வெளியில் தெரியாது. இருந்தாலும் இருவரின் செயல்படுகளிலும் அது எதிரொலிக்கும். 

இருவருக்கும் இடையே ஒரு இணக்கமான நிலை இல்லாத காரணத்தினால் அடிக்கடி சண்டையும், வீடே போர்களமாகவும் மாறிவிடுகிறது. இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சினைகளை தீர்க்க கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்தல் இருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். 

ஆனால் தம்பதியரிடையே யார் விட்டுக்கொடுக்கவேண்டும் என்பதில்தான் பிரச்சினையே. இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சினையினால் விட்டுக்கொடுத்தல் இல்லாமலேயே பெரும்பாலான தம்பதிகள் ஒரே வீட்டில் வசித்தாலும் ஒருவருக்கொருவர் நடித்துக்கொண்டிருக்கின்றனர். 

உடல்ரீதியாக அவற்றின் தேவைகளுக்காக மட்டுமே இணைகின்றனர். இதனை சேர்ந்து வாழ்க்கின்றனர் என்று கூறுவதை விட ஒரே வீட்டில் இருந்து கொண்டு உணர்வுகள், செயல்களில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழவில்லை. அவரவர் இஷ்டம் போல செயல்படுகின்றனர். சில வருடங்களில் இருவருக்குமிடையே பிரிந்து வாழவேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து விவாகரத்துதான் என்று முடிவு செய்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது என்னவோ குழந்தைகள்தான். எனவே தம்பதியர் இருவரும் இதனை நன்கு சிந்திக்க வேண்டும். 

தம்பதியர் தங்களுக்குள் தெரியாமல் எழும் விரோத மனப்பான்மையை உடனே களைய முற்பட வேண்டும். இருவரும் விட்டுக்கொடுக்கவேண்டும். அப்பொழுதுதான் குடும்ப வாழ்க்கை தெளிந்த நீரோடைபோல அமைதியாகச் செல்லும். விட்டுக்கொடுத்தல் மட்டுமே குடும்ப அமைதிக்குத் தேவை. குடும்ப முன்னேற்றத்திற்கும் அதுவே அவசியம் என்பதை ஒவ்வொரு தம்பதியரும் உணர்ந்து கொள்ளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

வாய் துர்நாற்றத்தைப் போக்க வழிகள் பத்து

வாய் துர்நாற்றத்தைப் போக்க வழிகள் பத்து..............!!


வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்கள்? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்றத்தை விரட்டி அடித்துவிடலாம்.

ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை.. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும்.

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர்(ulcer) நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இது வாய்துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணங்கள்.

மற்ற காரணங்கள்: புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு.

மருத்துவ ரீதியான காரணங்கள்:

தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் infection ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள்
ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும் இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள்.
அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவுமண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.

வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:

1.
உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப்பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

2. mouth washer
நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக்கொள்ளலாம்.

3.
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவதுபோல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.

4.
அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர் நாற்றம் நீங்கும்.

5.
வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

6.
குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

7.
காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.

8.
வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.

9.
அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

10.
சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.

வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம்.

சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க்கொப்பளித்துவிடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும். மேலும் இரவு படுக்க போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.

கிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது.(Mouth odor is caused by germs) அதேபோல ஒவ்வொரு முறையும் பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம். குளோசப் டூத்பேஸ்ட் விளம்பரங்களில் வருவதைப் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதோடு முக்கிய எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவிடலாம்.

குறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துற்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும். இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி.. !

பிரசவத்தைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்




பிரசவத்தைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்............!!
கர்ப்பமாக இருக்கும் போது, பிரசவத்திற்கு முன்னும், பிரசவத்திற்கு பின்னும் என்ன செய்ய வேண்டுமென்று நிறைய திட்டங்களை தீட்டுவோம். ஆனால் பிரசவம் நடைபெறப் போகிற இறுதி மாதத்தில் இருந்து, ஒருசில கவலை மற்றும் பயத்தைப் பற்றிய எண்ணம் அதிகம் இருக்கும். எனவே பிரசவத்தின் போது தைரியமாக இருக்க அனைத்து பெண்களும் தயாராக வேண்டும். அதிலும் முதல் பிரசவம் தான் ஒரு பெண்ணுக்கு மறுவாழ்வு, ஆகவே பிரசவத்தின் போது பயப்படாமல், தைரியாமக இருப்பதற்கு நிறைய விஷயங்களை பலர் சொல்லி, தைரியம் கூறுவார்கள். அதுமட்டுமின்றி ஒவ்வொரு பிரசவத்தைப் பற்றிய புத்தகத்திலும் விரிவாகவும், தெளிவாகவும் பிரசவத்தின் போதும், பிரசவத்திற்கு பின்னும் என்னவெல்லாம் நடைபெறும் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். 

ஆனால் ஒருசில விஷயங்களை மருத்துவர்கள் சொல்லமாட்டார்கள். ஆனால் இறுதி மாதத்தில் எவ்வாறெல்லாம் நடக்க வேண்டுமென்று பட்டியலிடுவார்கள். சிலர் அதனை எதற்கென்று தெரியாமலே பின்பற்றுவார்கள். அத்தகைய விஷயங்களை முன்பே தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அதைக் கீழே பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பிரசவத்தின் போது நடைபெறும் ஒரு செயல்களில் ஒன்று தான் கழிவுகள் வெளிவருதல். ஏனெனில் குழந்தை பிறக்கும் நேரம் அதிகப்படியான அழுத்தம் வயிற்றில் கொடுப்பதால், அப்போது சில பெண்களுக்கு உடலில் உள்ள கழிவுகளும் வெளிவரும். ஆகவே தான் மருத்துவர்கள் பிரசவ வலி ஏற்படுவதற்கு ஒரு மாதத்தில் இருந்தே அதிகப்படியான தண்ணீரை குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆகவே இந்த நேரத்தில் திடமான உணவுகளை அதிகம் சாப்பிடாமல், தண்ணீரையும், பானங்களையும் அதிகம் குடிக்க வேண்டும். இதனால் பிரசவத்தின் போது கழிவுகள் வெளியேறுவதை தவிர்க்கலாம். 

சிலருக்கு பிரசவத்தின் போது வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் பிரசவம் ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் நடைபெறும். ஏனெனில் பிரசவத்தின் போது வயிறு மிகுந்த உப்புசத்துடன் இருப்பதால், அது இறுதியில் வாந்தியை வரவழைப்பதோடு, அத்துடன் இயற்கையாக நடைபெறும் வயிற்றுப்போக்கும் நடைபெறும். ஆனால் இந்த மாதிரியான விஷயத்தை யாரும் சொல்லவே மாட்டார்கள். 

பிரசவத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் மிகவும் கொடியது இரத்த அழுத்தமானது அதிகரிப்பது தான். ஏனெனில் குழந்தை வெளிவருவதற்கு தொடர்ச்சியாக கொடுக்கும் அழுத்தத்தினால், இரத்த அழுத்தமானது அதிகரிக்கும். இந்த பிரச்சனை சிலருக்கு வாழ்நாள் முழுவதும் தொடரலாம் அல்லது சிலருக்கு சில நாட்களில் குணமாகலாம். எனவே குழந்தையை வெளியேற்றும் போது மிகவும் டென்சன் இல்லாமல் அமைதியாக அழுத்தத்தை கொடுக்க வேண்டும். 

கர்ப்பமாக இருக்கும் போது மாதவிடாய் சுழற்சியானது தடைபடும். ஆனால் குழந்தை பிறந்த பின்னர் சிலருக்கு தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு மேல் மாதவிடாய் சுழற்சியானது நடைபெறும். சிலருக்கு குழந்தை பிறந்த பின்னர் ஒரு வருடத்திற்கு மேல் கூட மாதவிடாய் சுழற்சியானது நடைபெறாமல் இருக்கும். 

பிரசவ வலி பிரசவத்தின் போது மட்டும் வரும் என்று நினைக்க வேண்டாம். அந்த வலியானது பிரசவம் முடிந்த பின்னர் சில நாட்களோ அல்லது வாரமோ இருக்கும். எனவே இந்த வலியை தவிர்க்க சரியான ஓய்வு மிகவும் அவசியமானது. 

இவையே பிரசவத்தின் போதும், பிரசவத்திற்கு பின்னரும் நடைபெறும் விஷயங்கள். ஆகவே 9 ஆவது மாதம் வந்துவிட்டால் மிகவும் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ?




நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ?

சில சந்தேகங்கள் நாம் அருந்தும் தண்ணீரைப் பற்றியது.

1.
இரவில் தூங்க செல்லும் முன்னர் மிதமான சூட்டில் உள்ள சுடு தண்ணீர் அருந்திவிட்டு படுக்கச் செல்வது சரியா?

2.அல்லது சுட வைத்த தண்ணீரை ஆற வைத்துதான் அருந்திவிட்டு தூங்க செல்லவேண்டுமா?

3.பகலில் அதிக முறை குறைந்த தண்ணீர் அருந்துவது சரியான முறையா?

4.அல்லது சில முறை குடித்தாலும் அதிக அளவு தண்ணீர் அருந்துவது சரியான முறையா?

5.மேற்கண்ட எல்லா முறையிலும் தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவதுநல்லதா?

6.அல்லது சூடான தண்ணீரை ஆற வைத்துத்தான் அருந்த வேண்டுமா?

பதில்:

எமது உடலின் செயற்பாடுகளுக்கு ஒட்சிசனுக்கு அடுத்ததாக அத்தியவசியாமான பொருள் நீர் என்றால் மிகையில்லை.ஆனாலும் அநேகமானோர் உடலின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் போதியளவு நீரை அருந்துவதில்லை. ஒவ்வொருநாளும் நாம் பல்வேறு விதாமாக உடலில் இருந்து நீரை இழந்துகொண்டிருக்கிறோம்.

சிறுநீர், சுவாசம், வியர்வை, மலம் என பல்வேறு வழிகளினூடாக நாம் நீரை தினம்தோறும் இழக்கிறோம். இந்த நீர் மீண்டும் நமது உடலைச் சேருவது நாம் அருந்தும் நீர் மூலமாகவும், உணவில் உள்ள நீர் மூலமாகும். 

ஒருவருக்கு ஒருநாளைக்கு தேவையான அளவு நீர் அவர் மேலே சொன்ன வழிமுறைகள் மூலம் இழக்கும் நீராகும். அதுதான் வியர்வையான காலத்தில் அதிகம் நீர் வியர்வை மூலம் இழக்கப் படுவதால் அதிக நீர் உடலுக்குத் தேவை என்பதால் தாகம் அதிகரிக்கின்றது.

ஒருவர் ஒருநாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்பது அவரின் உடல் நிறை, அவர் வசிக்கும் காலநிலை, அவர் செய்யும் வேலையின் அளவு என்பவற்றில் தங்கியிருக்கிறது.

அண்ணளவாக ஒருவருக்கு ஒருநாளைக்குத் தேவைப்படுவது அவரின் ஒரு கிலோ உடல் நிறைக்கு 35ml நீராகும். 

இருந்தாலும் மேலே சொன்னதுபோல இந்த அளவு காலநிலை மாற்றம், மற்றும் வேலையின் அளவு என்பவற்றைப் பொருத்தும் மாறுபடும். 

சரியாக கணிக்கப்படாவிட்டாலும் அண்ணளவாக ஒருநாளைக்கு குறைந்தது இரண்டரை லீட்டர் நீராவது குடிப்பது அவசியமாகும்.

நீங்கள் இன்னும் சரியாக உங்களுக்குத் தேவையான நீரின் அளவைக் கணித்துக் கொள்ள விரும்பினால் இந்த சுட்டியில் உள்ள கணிப்பானில் உங்கள் தரவுகளைக் கொடுப்பதன் மூலம் கணித்துக் கொள்ள முடியும்.

உங்களுக்குத் தேவையான இந்த நீரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அருந்தலாம்.
அதாவது சூடாகவோ, ஆறியதாகவோ அல்லது பழச் சாறாகவோ.

அதை உங்கள் விருப்பப் படி விரும்பிய அளவுகளில் குடித்துக் கொள்ளலாம்.(எத்தனை தடவையில் குடித்து முடிக்க வேண்டும் என்று கணக்கிடத் தேவையில்லை)

ஆனாலும் அளவுக்கதிகமாக ஒரேயடியாக நேரை குடிப்பதால் மற்றைய வேளைகளில் கவனம் குறையலாம்.
இரவிலே அதிகம் நீரை அருந்தினால் சிறுநீர் கழிப்பதற்காக நித்திரை குழம்ப வேண்டியும் ஏற்படலாம்.

மேலே சொன்னதெல்லாம் ஆரோக்கியமான ஒருவருக்குத் தேவையான நீரின் அளவாகும்.

வாந்தி, வயிற்றோட்டம், காய்ச்சல் ஏற்படும் காலங்களில் நீரிழப்பு அதிகரிப்பதால் இன்னும் அதிகமாக நீர் அருந்த வேண்டி ஏற்படலாம்.

பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?

பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?
1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.


2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.


3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.


4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.


5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.


6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.


7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.


8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.


9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.


10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.


11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.


12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.


13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.


14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.


15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.


16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.


17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.


18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.


19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.


20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.

26 February 2013

நீங்கள் ஒல்லியா ?





நீங்கள் ஒல்லியா ?

பரம்பரையாகச் சிலர் ஒல்லியாக இருப்பார்கள். இன்னும் சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் அப்படியே ஒல்லியாக இருப்பார்கள்! இவர்கள் தங்களுக்கு மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு, தூக்கமின்மை, தாம்பத்தியக் கோளாறு, கல்லீரல் கோளாறு, குடல் கோளாறு முதலியவை உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.

ஏனெனில் மேற்கண்ட காரணங்களாலும் சிலர் தொடர்ந்து ஒல்லியாக இருப்பார்கள்.

இவர்கள் அனைவருமே ஆரோக்கியமான உடல் நலத்தைப் பெற்று சற்றுப் பூசினாற்போல குண்டாக மாற வாய்ப்பு உள்ளது. உடலைச் கொழுக்க வைப்பதிலும் எடையை அதிகரிப்பதிலும் பால், சோயாபால், அத்திப்பழம் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

முதலில் பால் வைத்தியத்தைப் பின்பற்றலாம். காலை முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு கப் பால் வீதம் அருந்த வேண்டும். இது இரவு எட்டு மணி வரை தொடர வேண்டும். அடுத்த நாளும் காலை எட்டு மணிக்கு இந்தப் பால் வைத்தியத்தை ஆரம்பிக்க வேண்டும். வேறு எதுவும் சாப்பிடக் கூடாது.

பாலை லேசாகக் சுட வைத்தால் போதும். சர்க்கரை வேண்டாம். மூன்றாவது நாள் முதல் மணி நேரத்திற்கு ஒரு கப் வீதம் அருந்த வேண்டும். இதை மூன்று நாட்கள் தொடர வேண்டும். சிலருக்கு இந்த முறையில் தொடர்ந்து பால் சாப்பிடுவது திகட்டும். இவர்கள் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். ஸ்டிரா மூலம் கொஞ்சம் கொஞ்சமாகப் பாலை உறிஞ்சலாம். பசும் பாலுக்குப் பதிலாக சோயா பாலையும் பயன்படுத்தாம். ஆறு நாட்களுக்குப் பிறகு பாலும் அத்திப்பழமும் கலந்து மூன்று வேளையும் சாப்பிட ஆரம்பியுங்கள். நீங்கள் சதை போடுவதை உணர முடியும்

மாற்று முறை :

வைட்டமின்களும், தாது உப்புக்களும் சரியாக உணவில் இடம் பெற்றால், பஞ்சாபியர்களைப் போல வாட்டசாட்டமாக வளர முடியும். கால்சியம் அதிகமுள்ள பால், தயிர், மக்னீஷியம் அதிகம் உள்ள முள்ளங்கி, பீட்ரூட் வைட்டமின் டி (D) அதிகமுள்ள பால், மீன், எண்ணெய் முதலியவற்றை நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். புரதம் அதிகம் உள்ளசோயாபீன்ஸையும் உணவில் சேர்க்க வேண்டும்.

ஒல்லியானவர்கள் சாப்பிடும் உணவு வகைகளில் எண்பது சதவிகிதம் திரவமாகவும், மீதி திட உணவாகவும் இருக்க வேண்டும். இதுவே உடல் எடை சரிவிகிதத்தில் அதிகரிக்க உதவும். உணவில் உள்ள வைட்டமின்கைளுயம், தாது உப்புக்களையும் நன்கு உறிஞ்சிக் கொண்டு, கழிவுகளையும் தாமதமின்றி வெளிேற்ற பி வைட்டமின்கள் அவசியம் தேவை திட உணவான கைக்குத்தல் அரிசி, கம்பு, கேழ்வரகு, பருப்பு, கடலை முதலியவற்றில்பிவைட்டமின்கள் அதிகம் உள்ளன.

தாவர எண்ணெய் வகைகளில் வைட்டமின்உள்ளது. இவற்றில் சமைத்தால் உடல் எடை அதிகரிக்கும்.

டர்னிப், கீரை, பசலைக்கீரை, முள்ளங்கி, பீட்ரூட், காரட் முதலியவற்றை காய்கறி சாலட் போல் சாப்பிட வேண்டும். பச்சையாகச் சாப்பிட முடியாதவர்கள் லேசாக வேக வைத்துச் சாப்பிடலாம். குண்டாக மாற விரும்புகிறவர்கள் கர்பபி, தேநீர், புகைப்பழக்கம் முதலியவற்றை உடனே நிறுத்த வேண்டும்.

மூன்று வேளை உணவை ஆறு வேளையாகப் பிரித்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டால் போதும். குண்டாக விரும்புகிறவர்கள் எப்போதும் சாப்பிடுவதைவிடக் கூடுதலாக 500 கலோரி மட்டும் சாப்பிட்டால் போதும். இதனால் வாரத்துக்கு 650 கிராம் வீதம் உடல் எடை அதிகரித்து வரும்.

சோயா மாவில் பூரி, சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க உதவும். நோஞ்சான் குழந்தைகளுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் உயர்ந்த சத்துணவு இது. சோயா மாவில் செய்யப்பட்ட முறுக்கு, பக்கோடா முதலியவை நல்ல நொறுக்குத் தீனிகள்.

ஒல்லியானவர்களும் குழந்தைகளும், பெரியவர்களும் இந்த நொறுக்குத் தீனியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நன்கு வளர்ந்து குண்டாகிவிடுவார்கள்.

* (
குண்டாக மாற விரும்புகிறவர்கள் மாம்பழம், அத்திப்பழம் பற்றி மேலும் அறிய மணிமேகலைப் பிரசுரத்தின்பழங்களின் மருத்துவக் குணங்கள்என்ற நூலையும் பார்க்கவும்.