ஆறு நாள் உலகப்படைப்பு -அபத்தமா?
உலகப்படைப்பு, குர்-ஆன், விஞ்ஞானம்
ஓரிறையின் நற்பெயரால்...
குர்-ஆனில் ஆறு நாளில் உலகை படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான்.
இதனடிப்படையில், இவ்வாக்கியத்தை உற்று நோக்கும் எவருக்கும்
பொதுவாக இரண்டு அடிப்படை சந்தேகங்கள் ஏற்படுவது இயல்பே!
1.சர்வ வல்லமையுள்ள கடவுள் என சொல்லபடுபவர் ஏன் உலகை படைக்க 6 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
2.உலக உருவாக்கம் இலட்சக்கணக்கான ஆண்டுகள் என அறிவியல் விஞ்ஞானம்
சொல்லும்போது 6 நாட்களில் உலகை படைத்தாக சொல்லுவது லாஜிக்கே இல்லாமல்
இருக்கிறதே...?
குர்-ஆன் அறிவியலோடு
உடன் படுகிறது என சொல்கிறார்கள்.... பார்த்தீர்களா... எவ்வளவு பெரிய விஞ்ஞான
முரண்பாடு. ஆஹா..... குர்-ஆன் பொய், இஸ்லாம் மாயை...முஹம்மது நபி தான் குர்-ஆனை இயற்றினார்...என இதர
இணையங்களில் கட்டுரை எழுதும் தோழர்கள் இஸ்லாமை தவறான புரிதலுடன் அணுகுகிறார்கள்
அல்லது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் காண்கிறார்கள் என்பது தான் உண்மை!
மேற்குறிப்பிட்ட இரு
கேள்விகளும் தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அழகான, திறமையான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை.
எனினும் திறமையான கேள்விகளுக்கு பதில் இல்லை என்ற விதியும் இல்லை.குர்-ஆனில்
இதற்கான பதில் இல்லாமலும் இல்லை.தன்னின் கேள்விகளில் ஏற்படும் திருப்தியால்
கிடைக்கும் பதிலில் விரக்திதான் மிஞ்சும்.எனவே நியாயமான தன் கேள்விகளுக்கு
கிடைக்கப்பெறும் பதில் நடுநிலையாக உள்ளதா..என சிந்திக்க கடமைப்பட்டு தொடருங்கள்
முதலில் இரண்டாம் கேள்விக்கான
தெளிவை பார்த்தப்பின் முதல் கேள்விக்கு செல்லலாம்...
திருக்குர்-ஆனில் 07:54, 10:03,11:07, 25:59,
50:38, 57:04 ஆகிய வசனங்கள் 6
நாட்களில் உலகை
படைக்கப்பட்டது குறித்து பேசுகிறது
இவ்வசனங்களில் நாட்கள்
(DAYS)
என பொருள்கொள்ளும்
வகையில்
அமைந்த மொழிப்பெயர்ப்புக்கு
நேரடியான அரபு மூல சொல் அய்யாம் (AYYA'M). இது பன்மையே குறிக்கும் சொல்.இதன் ஒருமை
யவ்ம் என்பதாகும். பொதுவாக காலத்தை குறிக்கும் அரபு சொல்லாக இது பயன்
படுத்தப்பட்டாலும், இச்சொல்லுக்கு படிகள்,கட்டங்கள்,நிலைகள் (STEPS/ STAGES )என்ற பொருளும் கொள்ளலாம்.அதை அடிப்படையாக
வைத்து இப்போது குர்-ஆன் கூறும் அவ்வசனங்களை பார்ப்போம்.காண்போரின் வசதிக்காக
அவ்வசனங்களின் அரபு மூலங்களை அப்படியே ஆங்கிலத்திலும் தருகிறேன்,
அத்தியாயம்
:அல்-அஃராஃப் (07)
வசனம் :54
நிச்சயமாக உங்கள்
இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன்
ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கிறது
இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் -
கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப்
படைத்து,
பரிபாலித்துப்
பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்
Inna rabbakumu All[a]hu alla[th]ee khalaqa
a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a]
alAAarshi yughshee allayla a(l)nnah[a]ra ya[t]lubuhu [h]atheethan
wa(al)shshamsa wa(a)lqamara wa(al)nnujooma musakhkhar[a]tin bi-amrihi al[a]
lahu alkhalqu wa(a)l-amru tab[a]raka All[a]hu rabbu alAA[a]lameen(a)
அத்தியாயம் :யூனுஸ் (10)
வசனம் :03
நிச்சயமாக உங்கள்
இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் -
பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும்
அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்)
பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப்
படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள்
சிந்திக்க வேண்டாமா?
Inna rabbakumu All[a]hu alla[th]ee khalaqa
a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a]
alAAarshi yudabbiru al-amra m[a] min shafeeAAin ill[a] min baAAdi i[th]nihi
[tha]likumu All[a]hu rabbukum fa(o)AAbudoohu afal[a] ta[th]akkaroon(a)
அத்தியாயம் :ஹுது (11)
வசனம் :7
மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய
அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச்
சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) "நிச்சயமாக
நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்" என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்)
காஃபிர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்று நிச்சயமாகக்
கூறுவார்கள்.
Wahuwa alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti
wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min wak[a]na AAarshuhu AAal[a] alm[a]-i
liyabluwakum ayyukum a[h]sanu AAamalan wala-in qulta innakum mabAAoothoona min
baAAdi almawti layaqoolanna alla[th]eena kafaroo in h[atha] ill[a] si[h]run
mubeen(un)
அத்தியாயம்
:அல்-ஃபுர்கான்(25)
வசனம் :59
அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில்
படைத்தான்;.
பின்னர் அவன் அர்ஷின்
மீது அமைந்தான். (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.
Alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a
wam[a] baynahum[a] fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi
a(l)rra[h]m[a]nu fa(i)s-al bihi khabeer[a](n)
அத்தியாயம் :காஃப் (50)
வசனம் :38
நிச்சயமாக நாம் தாம்
வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில்
படைத்தோம்;
(அதனால்) எத்தகைய
களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.
Walaqad khalaqn[a] a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a
wam[a] baynahum[a] fee sittati ayy[a]min wam[a] massan[a] min lughoob(in)
அத்தியாயம் :அல்
ஹதீத்(57)
வசனம் :04
அவன் தான்
வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள்
நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான், நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே
இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
Huwa alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti
wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yaAAlamu
m[a] yaliju fee al-ar[d]i wam[a] yakhruju minh[a] wam[a] yanzilu mina
a(l)ssam[a]-i wam[a] yaAAruju feeh[a] wahuwa maAAakum ayna m[a] kuntum
wa(A)ll[a]hu bim[a] taAAmaloona ba[s]eer(un)
மேற்கூறிய அரபு மூல
வார்த்தையோடு இவ்வசனங்களை அணுகும்போது 6 நாட்கள் எனும் சொல்லுக்கு பொருத்தமாக,உலகம் 6 படிகளில், 6 நிலைகளில், 6 கட்டங்களில் படைக்கப்பட்டது என பொருள்
கொள்ளலாம். அதுதான் சரியானதும் கூட...
ஆக நாள் என்ற பதம்
மேற்கூறிய வார்த்தைகளின் அடிப்படையிலேயே தமிழ் மற்றும் ஏனைய
மொழிப்பெயர்ப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே திருக்குர்-ஆன் கூறும் உலக
படைப்பு 6
கட்டங்களாக
நிகழ்த்தப்பட்டது என்பதை அரபு மூலத்துடன் ஒப்பிடும் சிந்தனையாளர் எவரும் மறுக்க
மாட்டார்கள்.
இல்லை...இல்லை நாட்கள்
என தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது எனவே அது குறிப்பிட்டது 6 நாளை தான் என மொழிப்பெயர்ப்பை
பற்றிப்பிடித்து கொள்ளும் நண்பர்களுக்காக.. 6 நாட்கள் தான் என்ற ரீதியில் குர்-ஆனை
அணுகினாலும் மேற்குறிப்பிட்ட அதன் நிலைப்பாட்டை உண்மைப்படுத்தலாம்.
குர்-ஆன் அவ்வசனத்தில்
குறிப்பிடும் நாள் என்ற பதமும்,நடைமுறையில் நம் வழக்கில் உள்ள நாள் என்ற பதமும் ஒன்றா...?
பொதுவாக, நாம் சூரியனை மையமாக வைத்து பூமி தன்னைத்தானே
ஒரு முறை சுழலுவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவான 24 மணி நேரத்தை ஒரு நாள் என்கிறோம்.ஆக இதை
அடிப்படையாக வைத்து பார்க்கும்போது உலகம் படைக்கப்படுவதற்கு எடுத்துக்கொண்ட கால
அளவு
6 X 24 = 144
144 மணி நேரத்தில் உலகம் படைக்கப்பட்டது என்பது அறிவுக்கு பொருந்தாத
வாதம் எனவே குர்-ஆன் கூறுவது பொய் எனலாம்.இந்த கணக்கீடு சரி,ஆனால் அந்த காலஅளவீட்டையா குர்-ஆன் சொல்கிறது?ஆமாம் அந்த அளவீட்டைதான் சொல்கிறது என
குர்-ஆனை பொய்யாக்க விளைவோர் கூறுவார்களேயானால் உண்மையாகவே பொய்யாக்குகிறார்கள்., குர்-ஆனை அல்ல விஞ்ஞானத்தை.
ஒரு நாளை
கணக்கிடுவதற்கு இரு செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஒன்று பூமி தன்னில்
தானே சுழல வேண்டும்.அதே நேரத்தில் சூரியனையும் மையமாக கொள்ள வேண்டும்.அப்போது தான்
ஒரு நாள் என்பது நமக்கு கிடைக்க சாத்தியம்.ஆனால் மேற்கூறப்பட்ட திருக்குர்-ஆனிய
வசனங்களை சற்று பொறுமையாக, கவனமாக பார்வையிடுங்கள். அவ்வசனங்கள் பூமியும்,வானமும் படைக்கப்ப்ட்டதே 6 நாட்களில் என்கிறது ,ஆக நாட்களை கணக்கிடும் பூமியே அதுவரை அங்கு
உருவாகவில்லை எனும்போது எதன் அடிப்ப்டையில் அல்லாஹ் இங்கு நாட்களை கணக்கிட
முடியும்?ஆக அல்லாஹ் நாட்கள் என குறிப்பிடுவது
மனிதர்கள் கூறும் கால கணக்கின் அடிப்படையில் அல்ல என்பதும் பிரத்தியேகமாக அவன்
உண்டாக்கிய வேறு கால அளவு என்பதும் தெளிவு!
மேலும் வசனம் 50:03 ல் இறுதியாக- "எத்தகைய களைப்பும்
நம்மைத் தீண்டவில்லை" என முடிக்கிறான். அவனது வல்லமையின் வெளிபாடாக கூறும்
இவ்வாசகத்தில் ஓர் அறிவியல் உண்மையும் ஒளிந்துருக்கிறது.பொதுவாக களைப்பு என்பது
சிறு செயல்கள் மற்றும் குறைவான நேரத்தில் செய்து முடிக்கும் பணியின்
காரணங்களுக்காக ஏற்பாடது.மாறாக அதிக பளுவாக வேலைகளோ,தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் கடின
செயல்களாலோ ஏற்படுகிறது என்பதை கடைநிலை பாமரன் கூட அறிவான்.தான் மேற்கொண்ட உலக
படைப்பின் கால அவகாசம் நீண்ட,நெடியது என்பதையும் அவ்வாறு மேற்கொண்ட போதிலும் சிறு களைப்பும்
தம்மை வந்தடையவில்லை என்று அவன் குறிப்பிடுவதிலிருந்தே -சிந்திக்கும் எவருக்கும்
அவனது இவ்வசனம் அத்தாட்சியாக இருக்கும்.
ஆக அய்யாம் என்ற அரபு
மூலத்தின் அடிப்படையில் அணுகினாலும், நாட்கள் என்ற மொழிப்பெயர்ப்பு பதத்தின் வழி அணுகினாலும் 6 நாட்கள் உலக படைப்பு அறிவியலுக்கு
முரணானதல்ல.
இத்தோடு சேர்த்து
இங்கு ஒரு துணை விளக்கம்
அத்தியாயம் 41 வசனம் 9,10,11&12 இவ்வனங்களை மேற்கோள் காட்டி சிலர் உலகம் 8 நாட்களில் படைக்கப்பட்டதாக கூறி அது ஏனைய 6 நாட்கள் குறித்த வசனங்களோடு முரண்படுவதாக
நிறுவ முயல்கிறார்கள்.அந்த வசனங்கள் இதோ,
"பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு
இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தானா ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்"
என்று (நபியே!) கூறுவீராக.
அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்
அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான் இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில்
சீராக நிர்ணயித்தான் (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).
பிறகு அவன் வானம்
புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான் ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்
"நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்" என்று
கூறினான். (அதற்கு) அவையிரண்டும் "நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்"
என்று கூறின.
ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன்
ஏற்படுத்தினான் ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான் இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம்
விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம் இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம் இது
யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.
இதில் முதல் வசனத்திற்கு
- 2
நாட்கள்
இரண்டாம் வசனத்திற்கு
-4
நாட்கள்
நான்காம் வசனத்திற்கு
-2
நாட்கள்
ஆக 2+4+2 =8 நாட்கள் என்கிறார்கள்.இந்த எண்ணிக்கையை
கூட்டினால் சரிதான். ஆனால் இங்கு அதை கூட்டவேண்டிய அவசியமென்ன., ஏனெனில் குர்-ஆன் கூறும் இவ்வசனங்கள் கூட்டல்
அடிப்படையில் நாட்களை வகைப்படுத்தவில்லை.மேற்கண்ட நாளளவில் நடைபெற்ற செய்கையை
பற்றித்தான் குறிப்பிடுகிறது.ஏனெனில் இறுதியாக கூறும் வசனத்தில் குறிப்பிடும் அந்த
இரண்டு நாட்களில், அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் என்றே கூறுகிறது
.மாறாக வானம் படைக்கப்பட்டதாக கூறவில்லை. எனவே மேற்கூறிய வசனங்கள் 6 நாட்கள் உலக படைப்பின் விவரிப்புகளே!
இப்பொழுது முதல்
கேள்விக்கு வருவோம்.,
சர்வ வல்லமையுள்ள
இறைவன் உலகை படைக்க நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டது ஏன்?
குர்-ஆனில் இறைவன்
வல்லமையை குறித்து எந்த வசனமும் இல்லாதிருந்தால் அவனது இத்தகையே நீண்ட கால படைப்புக்கு
விடை தேவைப்ப்டலாம்.ஆனால் அவன் தன் வல்லமையே குறிப்பிடும்பொழுது
ஏனெனில் நாம் ஏதேனும்
ஒரு பொருளை (உண்டு பண்ண) நாடினால் நாம் அதற்காகக் கூறுவது, 'உண்டாகுக!' என்பது தான். உடனே அது உண்டாகிவிடும்.(16:40)
(மேலும் பார்க்க:3:59, 36:82, 40:68,46:33,50:38)
ஆக இறைவனின் ஒரு
படைப்புருவாக்கத்தை பற்றி மேலதிக விளக்கம் இல்லாமலே எளிதாக
தெரிந்துக்கொள்ளலாம்.எனினும் சில விசயங்களை தான் நாடிய விதத்தில்
செய்கிறான்.சிலவற்றை தனது அத்தாட்சிக்காக நிறுவுகிறான்,சிலவற்றை தாமதித்து
வெளியாக்குகிறான்.சிலவற்றை வெளிப்ப்டையாக அல்லது அந்தரங்கமாக தெரிய செய்கிறான்-
தங்களுக்கு எந்த பதில் பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள் ஏனெனில்
அவன் செய்பவை பற்றி
எவரும் அவனைக் கேட்க முடியாது ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி)
கேட்கப்படுவார்கள். (21:23)
அல்லாஹ் மிக்க
அறிந்தவன்