31 May 2013

சுஜாதாவின் பத்து அறிவுரைகள்


சுஜாதாவின் பத்து அறிவுரைகள் (கண்டிப்பாக படிக்கவும் )



1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...!

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...!
நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரை பற்றிய இரகசியங்கள் இதோ.....!!! (கீழ படிக்கவும்)

திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.

இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட திருவள்ளுவமாலை' என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே திருவள்ளுவ மாலை'யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.



29 May 2013

சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை - தமிழக அரசு அறிவிப்பு!



சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை - தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின (இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ,புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சிகள்) மாணவ மாணவிகளுக்கு 2013-2014 ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. 2013-14ம் கல்வியாண்டிற்கு, புதிதாகஉதவித்தொகை பெறவும் மற்றும் முந்தைய வருடம் பெற்று கொண்டிருக்கும் உதவித்தொகையை புதுப்பிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன.

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :

1) 1
முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு

2)
பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

3)
இறுதித் தேர்வில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

4)
ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 நபர்களுக்கு மட்டும்வழங்கப்படும்

5)
மாணவிகளுக்கு 30 சதவிகிதம் சிறப்பு ஒதுக்கீடு அளிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

http://www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm

பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதிக்குள் தங்களுடைய கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள் :

1.
பிறப்பு சான்றிதழ்

2.
வருமான சான்றிதழ்

3.
சாதி சான்றிதழ்

4.
முகவரி சான்றிதழ்

5.
மாணவர்களின் வங்கி கணக்கு எண்

மேற்கண்ட ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தங்களுடைய பிள்ளைகள் பயிலும் பள்ளிகளில் ஜூலை மாதம் இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆண்டிற்கு கல்வி உதவியாக சுமார் 6500 வரை வழங்கப்படும். எனவே பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி: "கல்வி வழிகாட்டி"

காதலிருந்தும் பெண்கள் ஏன் காதலை ஏற்க மறுக்கின்றனர்?



காதலிருந்தும் பெண்கள் ஏன் காதலை ஏற்க மறுக்கின்றனர்?


காதல் இல்லாத ஒருவரைக் கூட இந்த உலகில் பார்க்க முடியாது. அந்த அளவில் அது ஒரு உன்னதமான ஒரு தெய்வீக உணர்வு. இவ்வாறு காதல் செய்பவர்களில் அதிகம் யோசிப்பவர்கள் யார் என்று பார்த்தால், அது பெண்கள் தான். ஏனெனில் அவர்களுக்கு சற்று பயம் அதிகம். அந்த பயத்தால் தான் அவர்கள் தனக்கு காதல் இருந்தாலும், அதை வெளிப்படுத்த தயங்குகிறார்கள்.


மேலும் பெண்களின் மனமானது ஒரு பூ போன்றது. அதில் அவர்கள் எப்போதும் சந்தோஷம் வேண்டும் என்று தான் விரும்புவார்கள். மேலும் அவர்கள் மனதில் ஒரு சில கேள்விகள், சந்தேகங்கள் எழுவதாலும் அவர்கள் வெளிப்படுத்த மறுக்கிறார்கள். சரி, இப்போது பெண்கள் எதனால் தங்கள் காதலை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர் என்ற உண்மையை அனுபவசாலிகள் கூறுகின்றனர். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
பெண்களின் காதலில் முதலில் தடையாக இருப்பது அவர்களது பெற்றோர்கள் தான். ஏனெனில் இத்தனை நாட்கள் தன்னை பெற்று வளர்த்தெடுத்த பெற்றோர் தன் காதலை ஒப்புக் கொள்ளவில்லையெனில் என்ன செய்வது என்ற ஒரு பயம், எப்போதுமே அவர்களது மனதில் இருக்கும். இதனால் அவர்கள் தங்கள் மனதில் காதல் இருந்தாலும், அதனை வெளிப்படுத்தாமல், மனதிலேயே வைத்துக் கொள்வர்.

பொதுவாக பெண்கள் காதல் செய்துவிட்டால், காதலிப்பரையே மணக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது நடக்காவிட்டால், பின் அவர்கள் மனதை கல்லாக்கிக் கொண்டு பெற்றோர் சொல்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் வேண்டுமா என்று நினைத்து, அந்த காதலை மனதிலேயே புதைத்துவிடுவர்.

நமது சமுதாயம் கூட பெண்களின் காதலை வெளிப்படுத்துவதற்கு ஒருவித தடையாக உள்ளது என்றும் சொல்லலாம். ஏனெனில் நமது சமுதாயத்தில் ஜாதி, மதம் போன்றவற்றை அதிகம் பார்ப்பது வழக்கம். இதனால் எவரும் விரும்பியவர்களை மணக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதிலும் ஒரு இந்து பெண், கிறித்துவ ஆணை மணந்துவிட்டால், அந்த சமுதாயம் அதனை வித்தியாசமாக பார்ப்பதோடு, தவறாக பேசுவதால், வீட்டில் இருக்கும் பெற்றோர்களும் அவர்களை ஏற்க மறுகின்றனர். இதுவும் பெண்களின் காதலுக்கு தடையாக உள்ளது. ஆண்கள் தைரியத்துடன் பார்க்கலாம் என்று இருப்பார்கள். ஆனால் பெண்கள் அத்தகையவர்கள் அல்ல.

சில பெண்கள் தைரியத்துடன் காதலித்து தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருப்பார்கள். ஆனால் சில ஆண்கள் காதலித்து மணப்பதற்கு தைரியமின்றி, காதலித்தப் பின் அவர்களை விட்டு போய்விடுவார்களோ என்ற எண்ணத்தில், காதல் தனக்கு வந்தாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு வெளிப்படுத்த தயங்குவார்கள். இந்த விஷயத்தில் பெண்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மேற்கூறிய காரணங்களாலேயே பெண்கள் தங்கள் மனதில் காதல் மலர்ந்தாலும், அவற்றை மறைத்து மனதிலேயே புதைத்துவிடுகின்றனர்.

ரகசிய குறியீட்டு எப்படி உருவாக்க படுகிறது நாம் எப்படி உறவாக்குவது ( Barcode Scanner ) !!


நாம் கடைகளில் பொருட்களை வாங்கும் போது அவற்றில் காந்தக்கோடுகள் எனப்படும் பல தொடர் கோடுகளாலான ரகசியக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கின்றோம்.

பெரும்பாலானவர்களிற்கு அந்தக் கோடுகள் எதற்க்காக அச்சிடப்பட்டுள்ளது என்றும் அந்த ரகசியக்குறியீட்டினுள் அப்படி என்னதான் இருக்கிறது என்றும் தெரிவதில்லை. இந்த ரகசியக்குறியீடுகள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் முழுமையாக ஆராய்வதே இந்தப் பதிவின் நோக்கம்.
விற்பனைப் பொதிகளில் அச்சிடப்படும் இந்த ரகசியக்குறியீடுகள் ஆங்கிலத்தில் Barcodes என அழைக்கப்படும். Barcode என்பது குறிப்பிட்ட பொருட்களின் மீது அதுபற்றிய சில தகவல்களைக் காண்பிக்கும் ஒரு குறியீடாகும்.இவ் Barcodes இனுள்ளே அது அச்சிடப்பட்டுள்ள உரிய பொருளிற்கான விலை, உற்பத்தி தேதி , காலாவதி தேதி , அப்பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் இணையமுகவரி போன்ற தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.இவற்றை நம் வெறும் கண்ணினால் பார்த்து அறிய முடியாது.இவற்றை Barcode Scanner கள் மூலமாகவே வாசித்து அறிய முடியும்.
இந்த ரகசியக்குறியீட்டினை Barcode Scanner இற்கு முன்பாக பிடித்தால் போதும், இரகசியக்குறியீட்டிற்குள் ஒழிந்திருக்கும் இரகசிய விடயங்கள் அனைத்தையும் அறிந்துவிடலாம்.
ஆனால் தற்போது Barcode Scanner களைப் போலவே கையடக்கத் தொலைபேசிகளும் இந்த இரகசியக்குறியீடுகளை இனங்கண்டுகொள்ள பெரிதும் உதவுகின்றன.
குறித்த இரகசியக் குறியீட்டினை கையடக்கத் தொலைபேசியின் கமராவினால் Scan செய்து அதனுள் மறைக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் அறிந்துவிடலாம்.இதற்காகவே பெரும்பாலான கையடக்கத் தொலைபேசிகளில் (Smart Phones) இவ் Barcode களை வாசிப்பதற்க்குரிய மென்பொருள் காணப்படுவது பயனுடையதொரு விடயமாகும்.மேலும் கையடக்கத் தொலைபேசியில் இவ்மென்பொருள் இல்லையென்றால் இணையத்திலிருந்து இலவசமாக Download செய்து நிறுவிக்கொள்ளலாம்.
இரகசியக் குறியீடுகளை வாசிப்பது பற்றி அறிந்து விட்டோம், அடுத்ததாக பார்க்கபோகும் விடயம் அனைவரிற்கும் நிச்சயமாகப் பிடிக்கும்.எமது அடிப்படை விபரங்களை (பெயர், தொலைபேசி இலக்கம், முகவரி, மேலும் பலவற்றை) புகுத்தி எமக்கென்று ஒரு இரகசியக் குறியீட்டினை உருவாக்கிக்கொள்ளலாம்.
Barcodes பல வகைப்படும், அவற்றுள் QR Code என்ற Barcode வகையே பாவனைக்கு இலகுவானதாகும்.
எனவே “QR Code Generator” என Google இல் Type செய்து தேடினால் இவ் Barcode இனை இலவசமாக உருவாக்கித்தருகின்ற பல இணையதளங்கள் உங்கள் முன் தோன்றும்.
அவற்றில் ஏதாவதொரு இணையதளத்திற்கு சென்று உங்கள் இரகசியக் குறியீட்டினுள் நீங்கள் உள்ளடக்க விரும்பும் விடயங்களை வழங்கினால் போதும், உடனே உங்களிற்குரிய இரகசியக் குறியீடு தயாராகிவிடும், அதனை நீங்கள் புகைப்படமாக Download செய்து அதனை அச்சிட்டு (Print எடுத்து) பெற்றுக்கொள்ளலாம்.
இவ் இரகசிய குறியீட்டினுள் அதிகபட்சமாக 250 சொற்கள் கொண்ட தகவல்களை உள்ளடக்க முடியும் என்பது பிரமிக்கத்தக்கவொரு விடயமாகும். இந்த Barcode 1948 இல் தான் முதன்முதலாக பயன்பாட்டிற்கு வந்தது. Barcode ஆனது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
வைத்தியசாலையில் நோயாளிகளின் மணிக்கட்டுப் பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் Barcode இன் மூலம் குறித்த நோயாளியின் முழுத்தகவல்களையும் மருத்துவமனையில் பணியாற்றுபவர்களினால் இலகுவாக அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.
வாடகை கார்கள், விமானப் பயணப்பெட்டி, அணுக்கருக் கழிவு, அஞ்சல் மற்றும் பொட்டலங்கள் உள்ளிட்ட பொருட்களின் நகர்வைக் கண்காணிப்பதிலும் பயன்படுகிறது.
Thanks

Thanabalan Rushanthan

அஷ்ரஃப் 

உங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி?

அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதை இலவசமாக உங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி Control செய்யலாம்.

இதன் மூலம் உங்கள் கணினியில் ஆன்டிராய்ட் போன் பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்ள முடியும். கணினியில் வரும் File Transfer வசதி மட்டும் அலைபேசியில் இல்லை.

Online ல் இருக்கும் Team Viewer நண்பர்களை காண இயலும். விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்க முடியும்.

Keyboard பயன்படுத்தும் வசதியை மிக எளிதாக வழங்கி உள்ளது. இதன் மூலம் கணினியில் உள்ள Keyboard தரும் வசதிகளை நீங்கள் இதிலேயே செய்யலாம்.




left click, right click, drag & drop, scroll wheel, zoom போன்ற அனைத்தும் உள்ளது. இதனால் உங்கள் வேலை மிகவும் எளிதாகிறது, அதே சமயத்தில் எந்த இடத்தில் இருந்தும் உங்கள் கணினியை இயக்க முடிகிறது.

Team Viewer பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று இது. முக்கியமாக உங்கள் கணினியில் Team Viewer இருக்க வேண்டும்.

இதை தரவிறக்கம் செய்ய...
https://play.google.com/store/apps/details?id=com.teamviewer.teamviewer.market.mobile


Video Guide:

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=yEofo1tWaoc



அஷ்ரஃப் 




ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா?


ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப்

போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்? இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா? இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன? என்பது குறித்து அறிய சென்னையில் இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளை அணுகினோம். நம் கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தைத் தந்தார்கள் அவர்கள். 
 ஏ.டி.எம். ஃபிட் கரன்சி!
ஏ.டிஏம். வாயிலாக கள்ள நோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏ.டி.எம்.-ல் ரூபாய்த் தாள்களை லோடு செய்வதற்கு முன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM fit currency) மாற்றப்படுகின்றன. இந்த செயல்பாட்டின்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப் பட்டுவிடும். ஆர்.பி.ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும். 
அனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங் களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம். ஏனெனில், எந்த ரூபாயாக இருந்தாலும் அது ஒருமுறையாவது வங்கிகளுக்குள் வராமல் இருக்காது. கள்ள நோட்டுகள் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தால் முதல் முறையிலேயே அதைத் தடுத்துவிடலாம்.

எப்படி வருகிறது?
எந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷினுக்குள் பணம் லோடு செய்யப்படுகிறதோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்பட்டு லோடு செய்யப்படுகிறது. Cash In Tranceit போன்ற பெரும்பாலான ஏஜென்சிகள் இந்தச் சேவையை வங்கிகளுக்கு செய்து வருகின்றன. இவர்களின் பணி வங்கியிலிருந்து மொத்தமாகப் பணத்தைப் பெற்று, அந்தப் பணத்தை அந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷின்களுக்குள் லோடு செய்வதுதான். இவர்களின் உண்மைத்தன்மையையும், தரத்தையும் சோதனை செய்த பின்னரே அவர்களிடம் இந்த வேலையைத் தருகின்றன வங்கிகள்.
யாரை அணுகுவது?
வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ள நோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப் படுத்துவதற்கு முன்னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி.வி. கேமராவில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களைக் காட்டுவது அவசியம். ஏனெனில், ஏ.டி.எம். மெஷினுக்குள் போடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற்குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசாரிக்கும்போது உங்களின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.
பின்னர் ஏ.டி.எம். லிங்டு பேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏ.டி.எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். ஏ.டி.எம். சென்டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி.எம். தொடர்பான பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி தொடர்பு எண்களைத் தந்திருப்பார்கள். அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டு, நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

வங்கி நடைமுறைகள்!
ஏ.டி.எம்-ல் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை மாற்றித் தருவதில் வங்கியில் இருக்கும் நடைமுறை என்ன என்று பார்ப்போம். ஏ.டி.எம்-ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் (ரசீது மிகவும் முக்கியம்) சந்தேகத்திற்குரிய ரூபாய்த்தாளுடன் வங்கியை அணுகியதும், அவர்கள் அந்த ரூபாய் கள்ள நோட்டுதானா என்று பரிசோதிப்பார்கள். அது கள்ள நோட்டு இல்லை எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். கள்ள நோட்டுதான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள். உங்களிடம் பெறப்பட்ட ரூபாய்த் தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்று விசாரித்து தெரிந்துகொண்டு (நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி.எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப்பதன் மூலமும், உங்களின் பின்புலன்களை விசாரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை தருவார்கள். இந்த விசாரணையில் கள்ள நோட்டை கொண்டு வந்தவர் மீது சந்தேகம் வந்தால் அவர் மீது வங்கியானது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்காது. 
எஃப்.ஐ.ஆர். ஃபைல்!
பொதுவாக வாடிக்கையாளர்கள் அவர்களின் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ அல்லது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை எடுத்து அந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்த் தாள்கள் கள்ள நோட்டுகளாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே அவர்களின் மீது வங்கி உடனடியாக காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். ஃபைல் செய்யும். அப்படி இல்லாமல் நான்கு அல்லது அதற்கு குறைவான தாள்கள் கள்ள நோட்டுகளாக இருந்தால் அந்தத் தாள்களை வங்கியானது வாங்கி வைத்துக்கொண்டு விசாரிக்கும். தனது ஏ.டி.எம்-ல் இருந்துதான் அந்த ரூபாய் நோட்டு வெளியேறி இருக்கிறது என்று நிரூபணமானால் உண்மையான தாள்கள் திருப்பித் தரப்படும். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை அந்தந்த மாத இறுதியில் காவல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும்.

ஆர்.பி.ஐ.-ன் உதவி!
வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து நீங்கள் எடுக்கும் ரூபாய்த் தாள்களில் மூன்று தாள்கள் கள்ள நோட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்து வங்கியை அணுகும்போது, அதில் இரண்டு உண்மையான தாள்கள், ஒன்று மட்டும் கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகும் உங்களுக்கு சந்தேகம் நீடித்தால் அந்த வங்கியினது கரன்சி செஸ்ட் கிளைக்கு (Currency chest branches) சென்று உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதற்கு அடுத்தும் உங்களின் சந்தேகம் நீடித்தால் ஆர்.பி.ஐ.யை அணுகி ரூபாய்த் தாள் உண்மையானதுதானா என்பதை பரிசோதித்து தெரிந்துகொள்ளலாம். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு, www.rbi.org.in, www.paisabolthahai.rbi.org.in என்கிற ஆர்.பி.ஐ. இணையதளங்களை நாடலாம்.''
இனியாவது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருப்பது தெரிந்தால், பதற்றப்படாமல் முறைப்படி வங்கியை அணுகி, நஷ்டப்படுவதைத் தவிருங்கள்!


- செ.கார்த்திகேயன்
நாணயம் விகடன் இதழில் இருந்து.

25 May 2013

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார்

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார்

உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார். சிறு 

வயது வாழ்க்கை

16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.

1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.
https://www.facebook.com/safeek.ahamed.982?ref=tn_tnmn

இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே உக்கிரப் போர் மூண்டது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு பரிச்சயமுள்ளவர் உமர் முஃக்தார். அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர்புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக பெனிட்டோ முசோலினியின் படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.
உமர் முஃக்தார் அவர்களை இத்தாலிய படைகள் கைது செய்து, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படம் http://www.facebook.com/photo.php?fbid=187649431330344

உமர் முஃக்தார் தொழில் ரீதியாக குரானை போதிக்கும் ஆசிரியராக இருந்தார். ஆனாலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர்தந்திரவாதியாக விளங்கினார். தன் இயக்கத்தினருக்கு இவரே ஆசானாக இருந்து கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார். பாலைவனங்களில் போர் புரியும் தந்திரங்களையும் அறிந்தவர். பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார். இருப்பினும் 1931ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி பாசிஸ இத்தாலிப் படையினரால் உமர் முஃக்தார் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் 20 ஆண்டுகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு தளர்ந்தது இறுதியில் இத்தாலியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு மரணதணைடனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

உமர் முஃக்தார் கைது செய்யபட்டு தண்டணையை எதிர்நோக்கியிருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களை சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படம் ஒமர் முக்தார் என்ற பெயரில் 1980 களில் வெளியிடப்பட்டது. மக்களிடையே அத்திரைப்படம் மகத்தான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

1930 -ல் இத்தாலியில் பாசிஸ்ட் முசோலினி உருமினான… ” ஏன் இன்னும் லிபியா விழவில்லை “

படைத்தளபதி பயந்து கொண்டே ” சர், அங்கு கலகக்காரர்களை அடக்குவது கடினமாக உள்ளது”
முசோலினி ” யார் அவர்களை வழி நடத்துவது ?”

தளபதி: ” ஒமர் முக்தார் “

முசொலினி: “ஒமர் முக்தார் ?!! யார் இவன் ?!”

தளபதி: ” சர், அவர் ஒரு ஆசிரியர்…He is a teacher “ முசோலினி ஆச்சரியத்துடன் ” a teacher ?!!” பின் ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக தனக்குள்ளே ” Even I was a teacher ” என்கிறான்.

பாலைவன சிங்கம் என அனைவராலும் புகழப்பட்ட, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலியின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய “ஓமர்-அல்-முக்தார்” பற்றி தெரிந்தவர்கள் இது உண்மையாக நடந்திருக்கும் என தயங்காமல் ஒத்துக் கொள்வார்கள்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல் கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு வந்த, இத்தாலியின் முழு லிபியாவையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் ஆசையை நிறைவேற விடாமல் அடித்த, பெயர் கேட்டாலே லிபியா மக்கள் சிலிர்த்துப் போகின்ற ஓமர்-அல்-முக்தார் ஒரு சாதாரண பள்ளிக்கூட ஆசிரியர் என்றால் நம்ப முடிகிறதா?

இத்தனைக்கும் இவரது ஆட்களிடம் பயிர்ச்சியோ நவீன ஆயுதங்களோ, போக்குவரத்து சாதனங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ கூட கிடையாது. தணியாத சுதந்திர வேட்க்கையும், அந்நியரிடம் அடிமைப் படக் கூடாது என்ற வெறியும் ஒமர் முக்தார் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலும் மட்டுமே இருந்தது.

ஒமர் முக்தார் வழி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. அவரே முன்னின்று போரிட்டார். முதிர்ந்த வயதில் நோய் வாய்ப்பட்ட பிறகும் மலையில் மறைந்து வாழ்ந்து கொரில்லா போர் புரிந்து கொண்டிருந்த போது, அவரது குழுவினர் அவரை தப்பித்து போய் விடும் படிவற்புறுத்தியதையும் மறுத்து சண்டையிட்டு கடைசியில் இத்தாலியப் படைகளிடம் சிக்கினார். இத்தாலியப் படை அவரை சலோக் நகரில், 1931 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் தேதி எல்லா மனித உணர்வுகளையும் மீறி, சர்வதேச விதி முறைகளையும் மீறி, அவரது வயதையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிட்ட போது அவருக்கு வயது 80.(எண்பது).

சிறையில் சிறை அதிகாரி “ஆசிரியரான உங்களுக்கு ஏன் இதெல்லாம் வீண் வேலை?” என்ற போது ” ஆசிரியன் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவனாகவும் அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும்” என்றாராம் ஒமர் முக்தார்.

உங்கள் நண்பன் பொலிஸ்



அஷ்ரஃப் 

ஆண்மையை அதிகரிக்க வைக்கும் வெங்காயம் !!!


வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது அந்த அளவுக்கு எல்லா சமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது. தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும். இவர்கள் ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்று விடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள் அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம் சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும். இதற்கு வெங்காயத்தை நசுக்கி சாறுபிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகு விரைவில் நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
முருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள் அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம் இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன. மிகச் சிறிய குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்துவிடுவது உண்டு. தேனீ போன்றவை கொட்டிவிட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள் ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண் டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.
ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம்.
வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள் இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது. பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.
பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பார்கள். இவ்வாறு அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும் வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து அழற்சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத் தொல்லை இருந்தால் நிறைய வெங் காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும். முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது. வெங்காயத்தையும், கடுகு எண்ணெயை யும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும். எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு செலனியச் சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக் குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும்.
இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மன நிலையில் சமநிலை உண்டாகும்.
சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும்கூட அதை வெங்காயம் குறைத்து விடும்.
புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப்பொருள் வெங்காயம். புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்திவிடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது. முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன.
பெரியவெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை சாப்பிடுவோம் நோய் இல்லாமல் வாழ்வோம்.


அஷ்ரஃப் 



வெளிநாட்டிலிருந்து டி.வி.வாங்கி வரப் போகிறீர்களா ?


சாதாரணமாக சிங்கப்பூர் .துபாய் மலேஷியா என சுற்றுலா சென்று வருபவர்களும் ,அங்கு வேலை பார்த்துவிட்டு வருபவர்களும் சந்தோசமாக வாங்கி வருவது LED அல்லதுLCD டி.வி. மேலும் சில எலெக்ட்ரானிக் பொருட்கள்..இனி இப்படி வெளிநாடுகளில் வாங்கி இங்கு கொண்டு வரப்படும் டி.வி க்களுக்கு இங்கு வாரண்ட்டி ,சர்வீஸ் சப்போர்ட் ஆகியவை இருக்காது என சோனி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
பொதுவாக எலெக்ட்ரானிக் பொருட்கள் இந்தியாவில் விற்கும் விலையை விட அந்த நாடுகளில் இவற்றின் விலை மிகவும் குறைவு. உதாரணமாக SONY 46 அங்குல LCD TV யின் இந்திய விலை ஏறக்குறைய 60000 ரூபாய் அதே TVயை துபாயில் வாங்கினால் வெறும் 37000 ரூபாய்தான்.அதே போன்று இந்தியாவில் ஏறக்குறைய 25,500 ரூபாய்க்கு விற்பனையாகும் LG 32 INCH LED TV சிங்கப்பூரில் 14000 ரூபாய்க்கு கிடைக்கிறது .சாம்சங் நிறுவனத்தின் 40-inch 3D LED TV இங்கு 74000 ரூபாய் பாங்காங்கில் அதன் விலை 42000 ரூபாய்தான்.. டி.வி. மட்டுமின்றி நிறைய எலெக்ட்ரானிக் பொருட்களும் மற்ற நாடுகளில் விலை குறைவு.
இதன் காரணமாக இந்திய விமான நிலையங்களில் வந்து இறங்கும் பயணிகள் மூலமாக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3000 டி.வி க்கள் வருகிறது.என Consumer Electronics and Appliances Manufacturers Association என அழைக்கப்படும் CEAMA தெரிவிக்கிறது.
இவ்வாறு குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் காரணமாக இந்தியாவில் மார்க்கெட் நடுநிலை, ,வியாபாரத்திட்டங்கள் மற்றும் சட்டப்படியான விநியோகத்திட்டம் ஆகியவை தடுமாறுகிறது.மேலும் இந்திய சந்தையில் பொருள் வாங்கும் மனநிலை குறைகிறது.என சோனி நிறுவனத்தின் இந்தியத் தலைவர் சுனில் நய்யார் தெரிவித்தார்.
இதனால் பல்லாயிரம் கோடி முதலீடு செய்து இந்தியாவில் தொழிற்சாலையை தொடங்கியுள்ள சாம்சங்,சோனி ,எல்ஜி மற்றும் பேனசானிக் போன்ற கம்பெனிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே இப்படி வெளிநாடுகளில் வாங்கி இங்கு கொண்டுவரப்படும் டி.வி க்களுக்கு இனி இங்கு வாரண்ட்டி ,சர்வீஸ் சப்போர்ட் ஆகியவை இனி இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் பனசானிக் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டுள்ள பொருட்கள் வாரண்டியுடன் இருந்தாலும் உதிரி பாகங்கள் மற்றும் சர்வீசுக்கு கட்டணம் வசூலிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
மேலும் வெளிநாடுகளில் உள்ள தங்கள் கிளைகம்பெனிகளிடம் பேசி சர்வதேச வாரண்டிமுறையை நிறுத்தும் படி கேட்டுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்ததனர்.
இதற்கிடையில் வெளிநாடுகளில் விலை மலிவாக கிடைக்கும் டிவி இங்கு ஏன்அதிக விலைக்கு விற்கப்படுகிறது என கேட்டபோது இங்கு மற்ற நாடுகளை விட வரி விதிப்பு முறைகளின் காரணமாக 30% முதல் 40% அதிக வரி ,உற்பத்தி செலவு மற்றும் பலகட்ட விநியோக முறை ஆகியவை இருப்பதால் இந்த கூடுதல் விலை என்று சாம்சங் நிறுவன தரப்பில் கூறினார்.மேலும் இப்படி வெளி நாடுகளில் இருந்து கொன்து வருவதன் காரணமாக அரசுக்கு வர வேண்டிய வரியிலும் பெரும் இழப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர்.
இதுபற்றி அரசு தெளிவான முடிவு எடுக்காத நிலையில் இனி வெளி நாடுகளிலிருந்து வாங்கி வரும் டி.வி.க்களை இங்கு சர்வீஸ் செய்வது என்பது இனி கடினம்தான்.அரசு வரிவிதிப்பு முறைகளை மாற்றி இங்கும் குறைந்த விலையில் டிவிக்கள் கிடைக்க ஏற்பாடு செய்தால்தான் இதற்கு ஒரு விடை கிடைக்கும்.
நன்றி
ஆந்தையார்




அஷ்ரஃப் 



பொதுஅறிவு:-

* உலகின் மிகப் பெரிய பாலைவனம் சகாரா பாலைவனம். 90 லட்சம் சதுர பரப்பளவு கொண்டது இந்தப் பாலைவனம்.

* சாதாரணமாக ஒரு பல்ப்பின் ஆயுள்காலம் 3,000 மணி நேரம் ஆகும்.

* பன்னீர்ப் பூ இரவில் மலரும்.

* ரோஜா மலரின் வாசனை இதயத்துக்குபலம் சேர்க்கும்

* கார்த்திகைப் பூ என்றழைக்கப்படுவது காந்தள் மலர்.

* உலகின் மிகப் பழைய மரம் தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம். இதன் வயது 4,130 ஆண்டுகள்.

* உலகின் மிகப் பெரிய மரம் கலிபோர்னியாவில் ùஸகோயா பூங்காவில் உள்ள ஷெர்மன் மரம்.

* டென்னிஸ் மட்டைகள் மகாகனி, சிக்மோர், பீச் ஆகிய மூன்றுவித மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

* ஆஸ்ட்ரிச் என்னும் பறவை கல்லை தின்னும் தன்மை உடையது.

* பாம்பு, பல்லி, ஆமை, முதலை போன்ற ஊர்வனவற்றில் ஏறத்தாழ ஐந்தாயிரம் வகைகள் உள்ளன.

* உலகில் ஏறத்தாழ 500 எரிமலைகள் உள்ளன.

* ஒட்டகம் ஒரே நேரத்தில் 90 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.

* ஒட்டகத்துக்கு மூன்று இரைப்பைகள் உள்ளன.

* பல்லிகளில் 2,500 வகைகள் உண்டு.

* பாம்பு போல பல்லியும் தனது மேல் தோலை உரிக்கும்.

* பல்லிகள் மாதக் கணக்கில் உணவின்றி உயிர் வாழும் இயல்பு கொண்டது.

* வாழும் இடத்துக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை பல்லிகளுக்கு உண்டு.

* வீட்டுப் பல்லிகள் இரண்டு ஆண்டுகளே உயிர் வாழும்.

* வெட்டுக் கிளிக்கு கால்களில் தான் காதுகள் உள்ளன.

* நியூசிலாந்தில் காகமே கிடையாது.

* காகத்திற்கு காதுகள் கிடையாது.கண்ணின் பின்புறமுள்ள துளையின் வழியே கேட்கிறது.

* உலகிலேயே அதிகமாக முட்டையிடும் உயிரினம் கரையான் தான்.

* எலி, கங்காரு ஆகியவை மிக குறைந்த அளவே தண்ணீர் அருந்துகின்றன.

* ஆஸ்திரேலியாவில் இருக்கும் கங்காருவின் உயரம் 6 அடி. உடலில் பையை உடைய ஒரே விலங்கினம் கங்காரு. கங்காருவின் வால் 4 அடிக்கு மேல் நீளமானது. ஒரே தாவலில் இது 25 முதல் 30 அடிவரை தாண்டி விடும். இதன் குட்டிகள் பிறக்கும் போது கருஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். கங்காருகள் பொதுவாக பயந்த சுபாவம் கொண்டவை. கங்காருகளின் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.