தெரிந்து கொள்வோம்
@. வைரத்தை முதன்முதலில் தோண்டியெடுத்து (கி.மு 200) அதன் பெருமைகளை புரிந்து கொண்டவர்கள் இந்தியர்கள் தான்!.
@. க்ளிங்கோன் என பெயரிடப்பட்டுள்ள வேற்றுகிரக வாசிகளின் மொழியில் பைபிள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது!.
@. ஆல்கஹால் ஜீரணிக்காது! நேரடியாக இரத்த ஓட்டத்தில் கலந்துவிடும்!!.
@. பூமியின் வட துருவத்திற்குச்சென்றோமானால் சுற்றியுள்ள 8 திசைகளுமே தெற்கு தான்! அதே போல தென் துருவத்தில் எட்டுத் திக்கும் வடக்கே!!
@. காயங்களில் நம்மோட எச்சிலை தடவும் மழலைத் தனம் உண்மையிலேயே பலனளிக்கக் கூடியாது! காயம் சீக்கிரமா ஆறிடலாம்!!.
@. வீட்டில் உலாவும் சுண்டெலி வகையறாக்களுக்கு சங்கத்தமிழில் - இல்லெலி என்று பெயர்!! (எவ்வளவு தூய்மையான சொல் வழக்குகளைக் கொண்டுள்ளது தமிழ்!)
-
அஷ்ரப்