15 June 2013

தேனின் கலப்படத்தை அறிய சில வழிகள்...


தேனின் கலப்படத்தை அறிய சில வழிகள்... 

தேனில் கலப்படத்தை அறிய சில வழிகள் உள்ளன.

1)
சிறிதளவு தேனில் தீக்குச்சியை சில வினாடிகள் ஊறவிடுங்கள். மீண்டும் ஊறிய தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப்பெட்டியில் பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை என்பதை அறிய வேண்டும். 

2)
மை உறிஞ்சும் காகிதத்தில் அல்லது செய்தி நாளிதழில் சிறிதளவு தேனை ஊற்றி, சில நிமிடங்கள் வைத்திருங்கள். காகிதத்தின் கீழே தேன் ஊறி இருக்கக் கூடாது. செய்தித்தாளில் தேன் ஊற்றிய இடத்தில் ஊராவிட்டால் அது நல்ல தேன். 

3)
ஒரு கண்ணாடி டம்ளரில் முழுவதும் நீர் பரப்பி அதில் ஒரு தேக் கரண்டி தேனை மேலாக விடுங்கள். தேன் நீரில் கரையாமல் அடியில் சென்று தங்க வேண்டும். நீரில் கரையாவிட்டால் அது அசல் தேனாகும்.

அஷ்ரஃப் 


அசத்தும் ஒளியில் மாயை அதிசயம்!


அசத்தும் ஒளியில் மாயை அதிசயம்!

ஒரு நிமிடம் கண்களை நன்றாகத் துடைத்துக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் பார்க்கப்போகும் படங்கள், உங்கள் கண்களுக்கு அதிக வேலை கொடுக்கப்போகின்றன.

இந்தப் படங்கள், 'நாம் பார்ப்பது நிஜம்தானா?’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி, மீண்டும் மீண்டும் உற்றுப் பார்க்கவைக்கும். படுஜாலியாகவும் இருக்கும். அத்துடன், மூளைக்கும் வேலை கொடுத்து யோசிக்கவைக்கும். அறிவியலின் அடிப்படை விஷ‌யங்களையும் கற்றுத்தரும்.


அப்படி என்ன படங்கள்? காட்சிகளை வைத்துக்கொண்டு கண்ணாமூச்சி காட்டும் விளையாட்டு. கண்ணால் காண்பதும் பொய் என்பார்களே, அதை 100 சத‌விகிதம் உண்மை என‌ நினைக்கவைப்பவை. மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு தோற்றத்தையும் அதையே உற்றுப் பார்த்தால் வேறொரு தோற்றத்தையும் தரக்கூடியவை. தொடர்ந்து உற்றுப் பார்த்தால், இரண்டில் எது நிஜம் என்று மலைக்கவைக்கும்.

அழகான ஓர் உதாரண‌ம்... இந்தப் படத்துக்கு 'ஆறு பென்சில் ஏழு உருவம்' என்று பெயர் கொடுக்கலாம். காரணம், பென்சிலின் மேல் பகுதியைப் பார்த்தால், ஏழு கூர்முனைகளைப் பார்க்கலாம். கீழே பார்த்தால், ஆறுதான் இருக்கும். எத்தனை முறை எண்ணிப் பார்த்தாலும் இதேதான்.

அது எப்படி, ஒரே படத்தில் ஆறு பென்சில்கள் ஏழு பென்சில்களாகவும் தோன்ற முடியும்? இந்த அதிசயத்துக்கு 'ஓளியியல் மாயைஎன்று பெயர். ஆங்கிலத்தில், ஆப்டிக்கல் இல்யூஷன். (optical illusion). அதாவது, உண்மையாக இருப்பதற்கு மாறாக, காட்சிரீதியாக வேறொன்றாக உணரப்படும் தோற்றம்.

வேறுவிதமாகச் சொல்வதானால், கண்ணுக்கு ஒன்றாகவும் மூளைக்கு வேறொன்றாகவும் தோன்றும் காட்சிகள். கண்ணில் தோன்றும் உருவத்தில் உள்ள விவரங்களை, மூளை புரிந்துகொள்ளும் விதத்தில் அது வேறொன்றாகத் தோன்றுகிறது.

இதற்கு எண்ணற்ற சுவாரஸ்யமான உதாரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில, மிகவும் எளிமையானவை.

ஒரு படத்தில் வெறும் மரக்கிளைகளாகத் தோன்றும். கொஞ்சம் உற்றுப் பார்த்தால், அந்தக் கிளைகள் ஒவ்வொரு விலங்காகக் காட்சி அளிக்கும்.

இதேபோல் சிட்டுக்குருவிகள் பறப்பதுபோல் இருக்கும். உற்றுப் பார்த்தால், அதுவே இளம்பெண்ணாகத் தோன்றும். இதுபோன்ற படங்களை அவ்வப்போது பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். இவற்றை இன்டர்நெட்டில் சலிக்காமல் பார்த்து வியக்கலாம். அதற்கெனச் சிறப்பு வலைதளங்கள் இருக்கின்றன.

ஆப்டிக்கல் இல்யூஷனிஸ்ட் (http://www.optical-illusionist.com/) என்ற வலைதளம் இத்தகைய தோற்றங்களை வரிசையாகப் பட்டியலிட்டுத் தருகின்றது. ஒவ்வொரு பட‌த்துடனும் அதற்கான விளக்கமும் இருக்கின்றன.

-
சைபர்சிம்மன்

மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில்……………



1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம், ரைட் சகோதரர்களால் கிட்டி ஹௌக் என்ற இடத்தில் பறக்கவிடப்பட்டதாக கூறப்பட்டதற்கு முழுமையாக எட்டு (8) ஆண்டுகளுக்கு முன், மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில்……………

இதுவரை இந்தியாவில் பழங்காலத்தில் விமானங்கள் இருந்ததாக கூறப்பட்ட கதைகள் வெறும் புனையப்பட்டதாகவும் கற்பனைகளாகவுமே கருதப்பட்டது. ஆனால் அன்று மாலை, விமானம் என்றால் என்னவென்று நிகழ்லுலகம் அறியா தருணத்தில் அந்த அதிசய நிகழ்வு நடத்திக் காண்பிக்கப்பட்டது. நான் கூறும் நிகழ்வு ஏதோ மனிதன் வாழாத கண்டத்திலோ அல்லது கற்காலத்திலோ அல்ல.

1895 ஆம் ஆண்டு சிவ்கர் பாபுஜி தால்பேட் (Shivkar Bapuji Talpade) என்ற இந்திய விஞ்ஞானியும், அவரது மனைவியும் இணைந்து, மும்பாயின் சௌபதி கடற்கறையில் ஒரு ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டு அதிசயித்தனர். இதுவே தற்போதிய காலத்து முதல் விமான கண்டுபிடிப்பு. நான் கூறும் இந்த செய்தி ஏதோ உளறல் போல் தோன்றினால் வலைதளத்தில் தகவல்களைத் தேடவும். மேலும் அக்டோபர் 18, 2004ல் வெளிவந்த டைம்ஸ் ஒஃப் இந்தியா நாளிதழின் செய்தியை இங்கே காணவும் (http://articles.timesofindia.indiatimes.com/2004-10-18/mumbai/27162445_1_plane-wright-brothers-air-show)

இவர்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் பழங்கால ரிக் வேதங்களில் தெரிவித்துள்ள முறைப்படி அந்த விமானத்தை வடிவமைத்தனர். விமான சாஸ்த்திரம் குறித்து 100 தொகுப்புகளில், 8 பகுதிகளாக, 500 விதிகளில், 3000 ஸ்லோகங்களாக ரிக் வேதம் விளக்குகிறது. இன்றைய அறிவியலுக்கு புலப்படாத பல விஷயங்கள் அதில் புதைந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர், மேலும் இவர்கள் பரத்வாஜ முனிவரால் இயற்றப்பட்ட விமானம் செய்யும் வழிமுறைகள் அடங்கிய பழங்கால ஏடுகள் மூலம் இதை சாதித்தனர். உலகில் முதல் முதலில் பாதரசத்தை (Mercury) எரிவாயுவாக பயன்படுத்தியது இந்தியர்கள் தான். பாதரசத்தை எரிவாயுவாக பயன்படுத்துவது எவ்வாறு என்று இன்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த விமானம் முழுக்க முழுக்க பாதரசத்தை பயன்படுத்தும் Mercury Vortex Principle அடிப்படையைக் கொண்டது. இந்த Ion Mercury Vortex Engine ஆனது NASA வின் தீவிர ஆய்வில் உள்ளது.

இதைப்பற்றி தி ஹிஸ்டரி சேனல் (The History Channel) என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஏன்ஸியன்ட் ஏலியன்ஸ் (Ancient Aliens) என்ற ஆவணப்படத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது

இவர் உருவாக்கிய அந்த ஆளில்லா பறக்கும் விமானம் மணிக்கு சுமார் 40000 கிமீ வேகத்தில் 1500 அடி சென்று விண்ணை முட்டி எந்த பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியது. பொது மக்களோடு மக்களாக பரோடாவின் மகாராஜர், சர் சயாஜிராவ் கேக்வாட் அவர்களும் ஜஸ்டிஸ் கோவிந்த் ரானடே அவர்களும் அதை கண்டு வியந்தனர். இந்த செய்தி அப்போதிய கேசரிநாளிதழிலும் வெளியானது.


இவரது ஆய்வுகளுக்கு முக்கிய காரணமாக விளங்கிய பரத்வாஜ முனியின் பழைய குறிப்புகளை கொடுத்துதவியது பண்டிதர் ஸ்ரீ சுப்பராய சாஸ்த்ரி (Pandit Shri Subbaraya Shastri). இவரது தூண்டுதலின் பேரில் தான் தால்பேட் அவர்கள் ஆய்வை தொடங்கினார். தற்போதிய பொறியியல் வரைபடம் போல மிக எளியதாகவும், விமான கட்டுமானத்திற்கு தேவையான வடிவமைப்பு, இயந்திரங்கள், முதலிய அனைத்தின் வரைபடங்கள் மற்றும் விமானிகளின் உடைகள், அவர்களின் உணவு முறைகள் முதற்கொண்டு அதில் அனைத்தும் இடம் பெற்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது பின் நாளில் திரு ஜோஸ்யர் (Mr. Josyer) மற்றும் திரு டேவிட் ஹேட்சர் சில்ட்ரஸ் ( Mr. David Hatcher Childress) ஆகியவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தால்பேடுக்கு தேவையான நிதியுதவியை மகாராஜ சயாஜிராவ் வழங்கினார். 

இத்தனை கண்டுபிடிப்புகளுக்கு பின் தால்பேடுக்கு கிடைக்கப்பட்ட வெகுமதி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கைது நடவடிக்கை. அவருடன் சாஸ்த்ரியும் கைது செய்யப்பட்டார். மகாராஜா பிரிட்டிஷ் அரசினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். பின் சில நாட்களில் தால்பேடின் மனைவி இறந்த பின் ஆய்வில் இருந்து ஓய்வு கொண்டார் தால்பேட். அவரும் இறந்த பின்னர் அவரது மிக முக்கிய குறிப்புகளை, அதன் மதிப்பறியாமல் சில ஜெர்மானியர்களிடம் விற்றுவிட்டனர் அவரது உறவினர்கள்.

இப்போதும் இதை வெளிப்படுத்த இந்திய அரசாங்கம் தவறிவிட்டது. இப்போது நீங்கள் சொலுங்கள் விமானம் கண்டுபிடித்தது யார்?

(பின் குறிப்பு :- பரத்வாஜ முனிவர் வாழ்ந்த காலகட்டம் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு, இராமாயண காலம்)

via Sathish Kumar.

அஷ்ரஃப் 



தைராய்டு புற்றுநோயின் 6 அறிகுறிகள் விழிப்புணர்வு தகவல் !!


அமெரிக்க புற்றுநோய் அமைப்பு ஒன்றின் சார்பில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் புற்றுநோய் தைராய்டுகளினால் 6000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.. மேலும் இந்நோயில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான் என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். தைராய்டு புற்றுநோயை 90 சதவீதம் குணப்படுத்த முடியும் என்றாலும் அதில் நீங்கள் அலட்சியம் காட்டக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகளை பார்க்கலாம்.


கழுத்து பகுதியில் கட்டி

குரல் வளையின் மேற்பகுதியில் ஒரு சிறிய அளவு வீக்கம் அல்லது ஏதேனும் கட்டி போன்ற மாறுதல்கள் ஏற்பட்டிருப்பின் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தைராய்டு மெதுவாக அல்லது விரைவாக வளரும் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறியாகும். 

பேசுவதில் கடினம்

இந்த நோய் சுற்றியுள்ள திசுக்களை நோக்கி வளர்கிறது என்றால் இந்த நேரத்தில் குரல்வளையில் வலி ஏற்படும் வழக்கமாக பேசுவதைக்காட்டிலும் அதிக சிரமத்துடன் குரல் கரகரப்பாக தொண்டைகட்டியது போல பேச நேரிடும்.

நிணநீர் கணுக்கள்

தைராய்டு புற்றுநோயாளிகளுக்கு கழுத்தில் நிணநீர் கணுக்கள் விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது. தொண்டையில் ஏற்படும் மென்மையான விரிவாக்கத்தை தைராய்டு புற்றுநோயாளிகளால் உணரமுடியும். 

விழுங்குவதில் சிரமம்

பேசுவதில் சிரமத்தை ஏற்படுத்துவதை விட அதிகமாக விழுங்குவதில் சிரமம் ஏற்படும். உணவு, பழங்கள் என எது சாப்பிட்டாலும் அதிக சிரமத்துடன் தான் விழுங்க நேரிடும். ஏனெனில் தைராய்டு புற்றுநோய் உணவுகுழாயை ஒடுக்ககிறது.

சுவாசித்தலில் சிரமம்

வழக்கமான நாட்களில் சுவாசிப்பதை போல தைராய்டு புற்றுநோயாளிகளால் சுவாசிக்க முடியாது. தைராய்டு புற்றுநோயாளிகள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். தொண்டைகள் சுறுங்கி கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது..

கழுத்து வலி

கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்பட்டு கழுத்து வலி ஏற்படும். மேலும் கழுத்து பகுதியில் உள்ள நரம்புகளின் மீது ஏற்படும் அழுத்தம் காரணமாக காதுகள் வரை பரவி காதுகளில் வலி ஏற்படக்கூடும்.

தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் ஏற்படின் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

தகவலுக்கு நன்றி 
நண்பனின் நண்பன்



அஷ்ரஃப் 



ஜாதிகள் ஒரு சக்கர வியூகம்!


ஜாதிகள் ஒரு சக்கர வியூகம்!
---------------------------------------

http://hayyram.blogspot.in/2012/12/blog-post_9.html

ஒரு பத்திரிக்கை இரண்டு செய்திகள்:

***
கவுண்டர் சமுதாயத்துக்குன்னு ஒரு பெரிய பாரம்பரியமும், மரியாதையும்,
கலாச்சாரமும் இருக்குதுங்க. ஆனா, காதல் மற்றும் கலப்புத் திருமணத்தால்
எங்க சமுதாய அடையாளம் அநியாயத்துக்கும் அழிஞ்சுபோகுது. 'கவுண்டச்சியைக்
கட்டுவோம், கவுண்டனை வெட்டுவோம்' னு சூளுரையோட செயல்படுறாங்க குறிப்பிட்ட
சில சமூகப் பசங்க. காதல், சாதி மறுப்புத் திருமணம்னு தடம் மாறிப் போயி
சீரழிஞ்ச எங்க பொண்ணுங்களோட எண்ணிக்கை கொத்துக்கொத்தாக் கிடக்குதுங்க.
எதையும் ஆதாரம் இல்லாம நான் சொல்லலை. இந்த வருஷத்தில் (2012) இதுவரை 936
கவுண்டர் சமுதாயப் பெண்கள், தலித் பையன்களைத் திருமணம் செய்து
இருக்காங்க. அதில், 716 திருமணங்கள் மணமுறிவை சந்திச்சிருக்குது. 12
பொண்ணுங்க தற்கொலை செய்திருக்காங்க, 36 பெற்றோர் தற்கொலை
செய்திருக்காங்க" - கொங்கு வேளாளக் கௌண்டர்கள் பேரவை அமைப்பின்
மாநிலத்தலைவர் மணிகண்டன்.

*** "
தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பார்ப்பனரால் கலவரம் தூண்டப்படுவது
இல்லை. எந்தப் பார்ப்பனரும் 'தீண்டாமைச் சுவர்' எழுப்புவது இல்லை. எல்லா
இழிவுகலையும் அரங்கேற்றுபவர்கள் சாதி இந்துக்களாக வலம் வரும் பார்ப்பனர்
அல்லாதோர் திருக்கூட்டமே. ஆனால், பழக்க தோஷத்தில் பெரியார் இயக்கங்கள்
'
பார்ப்பன ஆதிக்கம்' என்ற பழைய பஞ்சாங்கத்தையே புரட்டுகின்றனர்". -
தமிழருவி மணியன்

ஜூனியர் விகடன் - 28.11.2012

ஜாதிகள் அழிந்தால் என்ன ஆகும்? ஒரு அலசல்!

'
ஜாதி முழுதாக அழிந்தாலொழிய, கிறிஸ்தவ மதமாற்றாத்துக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை' - ராபர்ட் கால்டுவெல் சொன்னது!

கால்டுவெல்லின் மதமாற்ற முயற்சியும் அதன் பொருட்டு உண்டான பல புரட்டுக்கள் பற்றியும் 'உடையும் இந்தியா' புத்தகத்தில் திரு. அரவிந்தன்
நீலகண்டன் அவர்கள் பல்வேறு தரவுகளுடன் விளக்கி இருக்கிறார்.

இங்கே ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சமூகம் என்பது விருக்ஷம், அதன் ஆணிவேர் மதம், அடிவேர்களாக மன்னோடு மன்னாக
ஒட்டிப்பிடித்து உறவாடிக் கொண்டிருப்பது ஜாதிகள். மதங்கள் கூறும் தத்துவங்களை, காலச் சூழல் மற்றும் புவியியல் சார்ந்த வாழ்க்கை மற்றும் வழிபாட்டு முறையையும் உள்ளடக்கியது தான் இந்த ஜாதீய வாழ்க்கை முறை.

இந்த ஜாதிகளும் அந்த ஜாதியினருக்குள்ளே இருக்கும் சமூகக்கட்டுப்பாடுகளும், அந்த மக்களின் வாழ்க்கைச் சூழலை உடைத்து பிறர் உள்ளே வந்துவிடாத ஒரு சக்கர வியூகமாக செயல்பட்டு வருகின்றது. அப்படி இறுக்கமாக இருக்கும் தனித்தனிக் குழுக்களை உடைத்து உதிரிகள் ஆக்காமல் அவர்களை ஆளுக்கொரு மதத்திற்கு மாற்ற முடியாது என்பதை புரிந்து கொண்டான் கால்டுவெல் என்பது இங்கே தெளிவாகத் தெரிகிறது. லட்டுவை உடைத்து பூந்தியாக்கினால் தானே பலரும் பகிர்ந்து கொள்ள முடியும். அதனடிப்படையில்
எழுந்தது தான் ஜாதி ஒழிப்பு கோஷங்கள். ஆனால் வரட்டுத் தனமாக திராவிடம் பேசும் சமூகப் போலிகள் ஜாதி ஒழிப்பு என்பதை அரசியல் ஆதாயத்திற்காக
கையிலெடுத்து சமூகத்தின் அடித்தட்டு வாழ்க்கை முறைகளை அடியோடு சிதைக்க முயற்சிக்கின்றனர்.

வெளிநாடுகளிலெல்லாம் கூட ஜாதிகள் இருக்கின்றன. பல்வேறு பெயர்களில் பிரிவுகள் உள்ளன. ஆனால் அவைகளெல்லாம் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தவும் ஒருவர் செல்வங்களை பிறர் அபகரித்துக் கொள்வதற்குமே உருவானவையாக
இருக்கும். ஆனால் பாரதத்தைப் பொருத்தவரை இங்கே இருக்கும் ஜாதிச்சமூகங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதற்காக உருவானவை. ஒரு இனத்தவர்
இல்லாமல் போனால் பிரிதொருவர் வாழ்க்கை முறையை அது பாதிக்கும் என்னுமளவிற்கு நெருக்கமான சார்பு நிலை கொண்ட ஒரு சங்கிலிப் பிணைப்புள்ள சமூகமாக இருந்திருக்கிறது. அத்தகைய சமூகம் இந்த பெரிய சமுதாயத்தின் அடிவேர். அடிவேரான ஜாதிகள் பிடுங்கி எறியப்பட்டால், ஆணிவேராகிய மதம் தனியாக சமூகம் என்கிற விருக்ஷத்தை தாங்காமல் ஒடிந்து விடும். அப்படியே
சாயும் சமூகத்தை கிறிஸ்தவம் என்கிற மாயையால் முட்டுக் கொடுத்து மதம் மாற்றிவிடலாம் என்பது தான் ராபர்ட் கால்டுவெல்லின் கணிப்பு.

அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல் ஜாதியினை ஒழிப்போம் என்று மிஷனரிகளுடன் கைகோர்த்து சமூகச் சங்கிலிப் பிணைப்பை உடைத்தெரிந்து சமூகத்தின் போக்கை மூர்கத்தனமாக சீர்குலைக்க விளைகின்றனர் முற்போக்குவாதிகள் என தங்களைக் கூறிக்கொள்பவர்கள்.

ஜாதியத்தில் இவர்கள் கூறும் ஒரே குற்றச்சாட்டு அவற்றில் அடுக்குமுறைகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதைத் தான். அப்படிப்பட்ட அடுக்குமுறைகள் இல்லாத அமைப்புகளே உலகில் கிடையாது. கம்யூனிஸ கட்சி என்றாலும் ஒருவர் மட்டும் தான் தலைவராக இருப்பார். அதுவே அடுக்குமுறையின் உச்சம் தானே! மனிதச்சமூகமும் அப்படித்தான். ஆனால் அது காலத்தேவைகளுக்குத் தகுந்தவாறு இடம் மாறிக் கொண்டே இருக்கக் கூடியது. அத்தகைய மாற்றங்கள் சமூக அழுத்தத்தின் அகக்காரணங்களைக் கொண்டு தானாக நடந்துவிடும். நாம் பொருளாதார ரீதியான
சமத்துவத்தை அனைவருக்குமாக வழிவகுக்க வேண்டுமே அன்றி சமூக வாழ்க்கையின் பாரம்பரிய முறைகளை சீர்குலைக்கக் கூடாது. ஒருவரை ஒருவர் கீழாக நினைக்கும் போக்கு மாற வேண்டும் என்றெண்ண வேண்டுமே ஒழிய ஒருவரின் வாழ்க்கை முறையை
ஒழித்து இன்னொன்றைப் புகுத்துவோம் என்று எண்ணுதல் கூடாது.

நாம் சீண்டாமல் இருந்தால் காலம் அதனைச் சத்தமில்லாமல் செய்யும்!

அடுக்குமுறைகளைக் காலம் மாற்றியமைத்திருப்பதைப் பாருங்கள்!
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=4k65p7H-44Y

சமூக அடுக்கில் மேலாக கருதப்படுபவர்கள் பொருளாதார அடுக்கிலும் மேலாக
இருக்க வேண்டிய அவசியம் இல்லை! இன்றைய பணப்பொருளாதாரக் காலச்சூழலில் இது
நிதர்சனம்!

கொசுறு:






"
உண்மையான கடவுள் குறித்த அறிவை, புராதன இந்தியர்கள் கொண்டிருந்தனர். அதை
உன்னதமான தெளிவான, ஆடம்பரமான மொழியில் அறிவித்தனர். அதிக ஒளியுடன்
திகழும் இந்த தத்துவங்களின் முன் ஐரோப்பியர்களின் உயர்ந்த தத்துவங்களும்,
கிரேக்கர்களின் தர்க்கங்களும், மதிய நேரத்து சூரிய ஒளியின் முன்
பிரகாசிக்கும் நட்சத்திரங்களாக உள்ளன."



-
ஜெர்மன் எழுத்தாளர், பிரெடெரிக் வான் ஷ்லீகல் (1772-1829) ; - நன்றி: தினமலர்

"பேஸ்புக் : பாலியல் வன்முறையின் புதிய ஆயுதம் !


இங்கிலாந்து நாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி பேஸ்புக் தொடர்பான குற்றச்செயல்கள் மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. 40 நிமிடங்களுக்கு ஒரு முறை பேஸ்புக் தொடர்பான குற்றம் ஒன்று போலீசிடம் பதிவாகிறது.

ஃபேஸ்புக் பாலியல் குற்றம்டிசம்பர் 31-ம் தேதி டெல்லியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, ஐடி துறையில் பணி புரியும் இரண்டு 24 வயது இளைஞர்கள் திட்டமிட்டு தன்னைபாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக போலீசில் புகார் செய்துள்ளாள். அந்த புகாரின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்த மாணவி டெல்லி பப்ளிக் ஸ்கூலில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறாள். பேஸ்புக்கில் செயல்படா விட்டால் வாழ்க்கையே இல்லைஎன்ற சூழலில் படிக்கும் அந்த மாணவி தன் சக மாணவர்களைப் போல பல பேஸ்புக் நட்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

அதில் ஒருவர் தான் நவீன் சிங் கேத்வால் என்ற 24 வயதான கணினி என்ஜினியர். செப்டம்பர் 2011-ல் இவர்களது பேஸ்புக் நட்பு ஆரம்பித்திருக்கிறது. நவீன் சிங் தன்னுடைய உறவினரான ஐடி நிறுவனம் ஒன்றின் மனித வளத் துறையில் பணி புரியும் ராஜேஷ் சிங்குக்கும் இப்பெண்ணை அறிமுகம் செய்துள்ளான்.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் ராஜேஷ் இப்பெண்ணுடன் நெருங்கி விட்டிருக்கிறான். தொலைபேசியில் பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது, பேஸ்புக் அரட்டை, எப்போதாவது வெளியில் சந்திப்பு என்று உறவை வளர்த்திருக்கிறான். நவீனுடன் போட்டிருந்த திட்டத்தின் அடிப்படையில் மார்ச் 2012-ல் அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டித்திருக்கிறான்.

இதனால் மனமுடைந்த அப்பெண், மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளாள். அந்த நேரத்தில், அவளை தேற்றும் விதமாக அவளுடன் பழக ஆரம்பிக்கிறான் நவீன் சிங். அவளுடன் லோதி கார்டன், லஜ்பத் நகர், கன்னாட் பிளேஸ் போன்ற இடங்களுக்கு தனது பைக்கில் ஊர் சுற்றியிருக்கிறான். ஜூலை மாதம் 24-ம் தேதி அவளை சப்தர்ஜங் என்க்ளேவில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளான்.

அடுத்த சில வாரங்களில் தனது நட்பு உறவாடலை குறைத்துக் கொண்டு செப்டம்பர் 7-ம் தேதி வேலையை விட்டு விட்டு உத்தர்காண்டுக்கு திரும்பிப் போவதாக சொல்லி உறவை துண்டித்திருக்கிறான். இந்த முறை ஆறுதல் சொல்லும் பாத்திரத்தில் ராஜேஷ் இறங்கியிருக்கிறான். அடுத்த நாளே அவனது நண்பனின் அறையில் அவளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கிறான்.


இதைத் தொடர்ந்து நவீனும் ராஜேஷூம் இந்தப் பெண்ணுடைய தொலைபேசி எண்களை பிற நண்பர்களிடம் சுற்றுக்கு விட்டிருக்கின்றனர். அவளுக்கு ஆபாச தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த உளவியல் கொடுமையை தாங்க முடியாமல் லைசால் என்ற சுத்திகரிக்கும் திரவத்தைக் குடித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறாள்.

நவீன், ராஜேஷ் இருவரும் இணைந்து, திட்டம் போட்டு, ஒருவரோடு ஒருவர் பேசி வைத்துக் கொண்டு அவளிடம் நட்பு ஏற்படுத்துவதாக சொல்லி உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். இந்த உண்மையை நவீனின் உறவினர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்ட பிறகு அந்தப் பெண் போலீசிடம் புகார் கொடுத்திருக்கிறாள்.

மேலோட்டமான நட்பு, நுகர்வு கலாச்சார வாழ்க்கை, விட்டேத்தியான தனிநபர் வாதம் போன்றவற்றில் மூழ்கியிருக்கும் அந்த மாணவியை இக்கயவர்கள் சுலபமாக பிடித்திருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய சூழலில் பொறுக்கிகள் பலரும் மெனக்கெடமால் தமது வக்கிரத்தை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய வாய்ப்புகளைத் தராமல் வாழ்வை உறுதியாகவும், பயன்தரத்தக்க முறையில் கழிக்கவும் மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்க இளையோர் முயல்வதில்லை. விளைவு இம்மாணவிக்கு நேர்ந்தது போல நடக்கிறது.




நண்பர்கள் வட்டத்தை பெருக்குகிறோம், எங்களுடன் எல்.கே.ஜி முதல் கல்லூரியில் படித்த அனைவரையும் இணைக்கிறோம்என்று நோக்கத்துடன் பேஸ்புக்கில் சேருபவர்கள் பின்னர் போலியான அடையாளங்களுடன் தமது நோக்கங்களை நிறைவேற்ற முனைகின்றனர். பதின்ம வயதினர் மட்டும் இன்றி, 13 வயதுக்கு குறைவான குழந்தைகள் கூட பெற்றோரின் துணையுடன், பொய்யான வயதைக் குறிப்பிட்டு பேஸ்புக்கில் தங்களை இணைத்துக்கொண்டு வாழ்க்கையில் இதைச்செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் வாழ்கின்றனர். எது நல்லது, கேட்டது என்று அறியாத பதின்ம வயதினருக்கு எப்படியாவது 100க்கும் அதிகமான நண்பர்களை தங்கள் வட்டத்தில் சேர்க்க வேண்டும்என்ற பிற பள்ளி நண்பர்களிடையே ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக, முன் பின் தெரியாத பலரின், நட்பு விண்ணப்பத்தை ஏற்று அவர்களின் நட்புவட்டத்தை 100-200க்கும் மேலும் பெரிதாக்குகின்றனர். விளைவு, கயவர்களின் ஜாலப் பேச்சுக்கும், பிற தொல்லைகளுக்கும், தவறுகளுக்கும் துணைபோகவோ, ஆட்படவோ நேரிடும் சூழலில் தள்ளப்படுகிறார்கள்.

சிறுவயது முதற்கொண்டே குழந்தைகளை அடிமைப்படுத்தும் கணினி, வீடியோ விளையாட்டுகள், சமூக வலைத்தளங்கள் அவர்களை வெளி உலக எதார்த்தங்களிலிருந்து அன்னியப்படுத்துகின்றன. மனிதர்களிடம் பழகுவது, அவர்கள் உணர்வுகளை பற்றின புரிதல் என்னவென்று அறிந்து கொள்ளும் திறமை குறைந்து போகின்றன. நண்பன் யார் பகைவன் யார் என்று தெரியாத வயதில் இவ்வாறான சூழல் அவர்களை மேலும் பிரச்சனைக்குள் தள்ளும் நிலைதான் வலுக்கிறது.

இங்கிலாந்து நாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி பேஸ்புக் தொடர்பான குற்றச்செயல்கள் மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. 40 நிமிடங்களுக்கு ஒரு முறை பேஸ்புக் தொடர்பான குற்றம் ஒன்று போலீசிடம் பதிவாகிறது. சென்ற ஆண்டு மட்டும் 12,300 குற்றங்கள் பதிவாகி உள்ளன. கொலை, பாலியல் வன்முறை, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள், தாக்குதல், கடத்தல், கொலை மிரட்டல், சாட்சியங்களை மிரட்டல், மோசடி போன்ற குற்றங்கள் மீதான விசாரணைகளில் பேஸ்புக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நட்புகளின் எண்ணிக்கையை சமூக அந்தஸ்தாக அளவிடும் மாணவர்களையும் இளைஞர்களையும் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பேஸ்புக் புதிது புதிதான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. பல்வேறு உத்திகளில் தனது வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் முயற்சிகளில் இறங்கியிருக்கும் பேஸ்புக் 13 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளும், பேஸ்புக்கில் சேர வாய்ப்பை ஏற்படுத்தப் போவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. குழந்தைகள் பெற்றோரின் கடன் அட்டைகளை பயன்படுத்தி தாம் விளையாடும் இணைய விளையாட்டுகளுக்கு கட்டணம் செலுத்த வைப்பதற்கான உத்திகளையும் யோசித்து வருகிறது.

பதின்மவயதினரை போல அவர்கள் பெற்றோர்களும் பேஸ்புக்க்கு அடிமையாகி இருக்கும் போது, தமது சந்தைப்படுத்தும் லாப வேட்டைக்கு பயன்படுத்தும் நோக்கில் வணிக நிறுவனங்கள் அந்த அடிமைத்தனத்தை மேலும் மேலும் உறுதியாக்கும் சூழலில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சட்டங்களும் காவல் துறையும் என்ன பாதுகாப்பு அளிக்க முடியும்? அயோக்கியர்களையும் நண்பர்கள் என்று காண்பிப்பதுதான் முகம் தெரியாத பேஸ்புக்கின் அடிப்படை செயல் முறை. அதிலிருந்து அறுவடை ஆகும் வருமானத்தை வங்கியில் குவித்துக் கொள்ளும் பேஸ்புக் அதன் விளைவாக பலியாகும் குழந்தைகளின் வாழ்க்கைக்கு பொறுப்பேற்கப் போவதில்லை.

இந்த சம்பவத்தில் ராஜேஷ், நவீன், என்று இருவரை மட்டும் காவல் துறை கைது செய்திருக்கிறது. தவறான நபர்களை அறிமுகம் செய்து குற்றங்கள் நிகழும் சூழலை உருவாக்கியுள்ள பேஸ்புக் மற்றும் நகரத்து மேட்டுக்குடி கலாச்சார நிறுவன முதலாளிகளை தண்டிப்பது யார்?

-
வினவு


அஷ்ரஃப்