23 September 2013

அயோத்தியின் ராணி.....!!



மூடி மறைக்கப்பட்ட அயோத்தியின் வரலாறு.

பாஜக காவி கூட்டம் இந்தியாவை ஆண்ட போது பள்ளிக்கூட வரலாறு பாட புத்தகத்தில் உண்மை வரலாற்றை அப்படியே திரித்து மூடி மறைத்துள்ளது.

அவ்வாறு மறைக்கப்பட்ட பல்வேறு சுவடுகளில் இதுவும் ஒன்று....

அயோத்தியின் அரசியாக திகழ்ந்தவர் பேகம் ஹஜ்ரத் மகள்.

அயோத்தி என்பது தியாகம், அதன் சின்னம் ஹஜ்ரத் பேகம்.

ஹஜ்ரத் மகள் ராணியாக இருந்த போது தன் மக்களுக்காக அரும்பாடு பட்டார். அவர் ராணியாக இருந்த போது அவரை போற்றி பிடித்தது ஒரு கூட்டம்.

தான் ஒரு ராணி என்பதை மறந்து விடுதலை படையை உருவாக்கி வெள்ளையனை விரட்ட களம் கண்டார்.

இந்திய முதல் சுதந்திரப்போரில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்து தோல்வியை தழுவினார்.

அயோத்தியின் ராணியாக திகழ்ந்த பேகம் ஹஜ்ரத் மகள் சுதந்திர போரில் தோல்வியை தழுவியவுடன் அவருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு கூட எந்த இந்து மன்னனும் முன் வரவில்லை.

இமயத்தின் அடிவாரக் காடுகளில் தன்னுடைய 10 வயது மகனோடு அனாதையாக மரணத்தை தழுவினார்.

ராணியாக திகழ்ந்தவர் ஆள் அரவம் இல்லாத காட்டில் அனாதையாக மரணத்தை தழுவியதை திட்டமிட்டு மறைத்தது ஏன் ?

இதனால் முஸ்லிம்களுக்கு அவமானம் அல்ல...

அந்த பெண்ணை இழந்த மண்ணுக்கு தான் அவமானம்.

கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது ?




கர்ப்பம் தரித்த எல்லா கர்ப்பங்களும் ஒன்பது மாதங்கள் (40 வாரங்கள்) முடிவுற்று அதன் விளைவாக குழந்தை பிறப்பதில்லை.
சில நேரங்களில் கர்ப்ப காலத்திற்குள்ளேயே தானாக கலைந்து விடுகிறது. இதனை கருச்சிதைவு என்கிறோம். இது தானாக ஏற்படும் கருச்சிதைவு ஆகும்.
பொதுவாக இந்த கருச்சிதைவு 26 வாரங்களுக்கு முன்னதாகவே ஏற்படும்.
கருவில் குழந்தை உயிர்வாழும் சாத்தியம் இல்லாதபோதுதான் கருச்சிதைவு ஏற்படுகிறது.
பெரும்பாலும் கருவுற்ற முட்டையில் கோளாறு இருப்பின் கருச்சிதைவு ஏற்படுகிறது. ஒரு சில வேளைகளில் அவ்வாறு குறையுள்ள கருவுற்ற முட்டை தொடர்ந்து வளர்ச்சியடையும் போது உருக்குலைந்த அல்லது ஊனம் போன்ற குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க நேரிடுகிறது. ஒரு வகையில் பார்த்தால் இதுபோன்ற பிறப்புகளை தடுக்கிறது கருச்சிதைவு என்று சொல்லலாம்.
மலேரியா, சிபிலிஸ், கர்ப்பவதி கீழே விழுவதினால், இனப்பெருக்க உறுப்புகளில் உள்ள பிரச்சினை போன்ற காரணங்களினாலும் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
சில நேரங்களில் கருப்பையில் வளர வேண்டிய கரு, கருப்பையில் அல்லாமல், கருவகத்திற்குச் செல்லும் குழாயில் வளர்ச்சியடைவதால் ஒரு கட்டத்தில் அதன் இயக்கம் தடைபட்டு கருச்சிதைவு ஏற்படுகிறது.
கருப்பை அல்லாத பகுதிகளில் வளர்ச்சியடையும் கருமுட்டையினாலும் ஏற்படும் கர்ப்பமானது பாதியிலேயே கருச்சிதைவு ஆகிறது.
இந்த கருச்சிதைவு ஏற்படுவதற்கு இரண்டு அறிகுறிகள் உள்ளன. ஒன்று பெண் உறுப்பில் இருந்து ரத்தப்போக்கு ஏற்படுதல், மற்றொன்று அடிவயிற்றில் ஏற்படும் அதிகமான வலி. இரத்தப் போக்கு முதலில் குறைவாக இருக்கும். பின் அதிகரிக்கும். ஓரிரு மாதங்கள் ஆகியிருந்தால் ரத்தம் கட்டி கட்டியாக வெளிப்படும். ஆனால் கர்ப்ப காலத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும் கருச்சிதைவு, வலி மற்றும் இரத்தப்போக்கு பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படுவது போலத்தான் இருக்கும்.
கருப்பையில் உருவான கரு சிதைவடைந்து முழுமையாக வெளியேற்றப்பட்ட பின்னர்தான் ரத்தப்போக்கு நிற்கும். அதுவரை ரத்தப்போக்கு இருந்து கொண்டுதான் இருக்கும். இவ்வாறு கருச்சிதைவடைந்த பெண்கள், 2 முதல் 4 வாரங்களுக்கு கனமான பொருட்களைத் தூக்கக் கூடாது. இவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். இந்த நாட்களில் உடலுறவை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
சிலருக்கு முழுமையாக கருச்சிதைவு ஆகாமல், சில திசுக்கள் கருப்பையிலேயே இருக்கும். இதனால் தொடர்ந்து ரத்தப்போக்கு, அடிவயிற்றில் வலி இருக்கும். அந்த சூழ்நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகி எஞ்சியுள்ள திசுக்களை வெளிக்கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவாக சுத்தம் செய்ய வேண்டும்.
கருச்சிதைவு முழுமை அடையாமல் தேங்கியிருக்கும் திசுக்களால், நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, கருக்குழாயில் பாதிப்புகள் ஏற்பட்டு எதிர்காலத்தில் கருவுறும் தன்மையையே இழக்கச் செய்யும் அளவிற்கு செல்லும்.
கருச்சிதைவு ஆன பெண்கள், அடுத்து கர்ப்பம் தரிப்பதற்கு சில மாதங்கள் காத்திருத்தல் அவசியம். இந்நாட்களில் கருவுருவதைத் தடுக்க, கருத்தடை முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
ஒரு சில பெண்களுக்கு கருச்சிதைவானது திரும்பத்திரும்ப ஏற்படும். ஒன்று அல்லது இரண்டு முறை ஆரம்பநிலையிலேயே கருச்சிதைவு ஏற்படின், கவலைப்பட வேண்டாம். ஆனால் மூன்றாவது அல்லது நான்காவது முறை இதுபோன்ற கருச்சிதைவு ஏற்படின், அடுத்த கர்ப்ப காலத்திற்குள் அந்த பெண், மருத்துவரின் முழுமையான பரிசோதனைக்குட்பட்டு, மருத்துவரின் ஆலோசனையின்படி மட்டுமே கர்ப்பம் தரித்தல் நிகழ வேண்டும்.
இவை அல்லாமல் குண்டாக இருக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே அதிக உடல் எடை கொண்ட பெண்களுக்கு, கர்ப்பம் தரித்த பின் ஏற்படும் பல்வேறு மாற்றங்களினால் இயற்கையாகவே கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே பெண்கள் தங்களது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியமாகிறது.
பொதுவாக கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்ததை அறிந்ததும் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது மிக மிக அவசியம்.

22 September 2013

சிந்திப்போமா சில நிமிடம்!






இன்றைய நவ நாகரிக யுகம் மனிதனை மகத்தான சுபாவத்திலிருந்து மிகவும் மோசமான பாவங்களின் பால் இழுத்துச் செல்கின்றது.
ஆம்! சினிமா எனும் நூதனக்கூத்து இன்று பெரும்பாலான வீடுகளில் தலை விரித்தாடுகின்றது. இதனால் ஏற்படும் தீமைகளோ ஏராளம்! ஏராளம்.
இன்று சில பிள்ளைகளிடம் மார்க்க சம்பந்தமான கேள்விகள் ஏதும் கேட்டால்தெரியாதுஎன்று தான் சட்டென சொல்லுவார்கள். மாறாக சினிமா பற்றி கேட்டாலோ அப்பப்பா! எதுவித தடுமாட்டமுமின்றி சொல்லி விடுகின்றார்கள்.

சிந்திக்க வேண்டாமா? இந்த சீரழிந்த சினிமாவினால் மனித ஒழுக்க நெறி மாறி பாவமான காரியங்களை தூண்டி விடுகின்றன. அதில் தோன்றும் உடை, நடை, பாவனைகளை பின்பற்றி வாழவும் நேரிடும்.
மேலும், பெற்றோரும் பிள்ளைகளும் சரிசமமாக அமர்ந்து பார்க்கக் கூடாத அசிங்கமான காட்சிகளையெல்லாம் எந்தவித கூச்சமுமின்றி ரசித்துக்கொண்டிருப்பார்கள். இதனால் பிள்ளைகள் எதுவித வெட்க உணர்வுகளுமின்றி தங்கள் பாட்டில் வளர்ந்து விடுவார்கள்.

இவை மாத்திரமல்ல. குர்ஆன் மத்ரஸா, ‘டியூஷன்போன்றவற்றை கட்பண்ணி விட்டும் கூட திரைப்படம் பார்ப்பதற்காக வீட்டில் தங்கி விடுவார்கள். இதுபற்றி பெற்றோர்களோ அல்லது வீட்டிலுள்ள பெரியவர்களோ தட்டிக் கேட்பார்களா? அது தான் இல்லை. இப்படியானவர்கள் தங்களது பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்தை குழி தோண்டிப் புதைத்து விடுகின்றார்கள் எனக் கூறினாலும் மிகையாகாது.
தம்பிள்ளை பரீட்சையில் தோல்வி அடைந்துவிட்டால் கற்பிக்கும் ஆசிரியருக்கும்- பாடசாலைக்கும் குறைகூற முற்படுவார்கள். இது தவிர்க்கப்படவேண்டும். முதலில் பெற்றோர் பிள்ளைகள் விடயத்தில் மிக அக்கரையோடும், அவதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.

மேலும், பிள்ளைகளை பேணி வளர்ப்பது என்பது நல்லவிதமான ஆடை அணிவித்து வகை வகையான உணவுகளை உண்ணக் கொடுப்பது மாத்திரம் சரியென எண்ணிவிடக் கூடாது. அல்லாஹுத் தஆலா தனது அருள்மறையாம் திருமறையில்,

விசுவாசிகளே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பை விட்டும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்என கூறுகிறான்.

பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிபெரிய உத்தியோகத்திலோ- வியாபாரத்திலோ அமர்த்தி விடுவது பெரிய காரியமல்ல. மறுமையில் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பிலிருந்து காக்க கற்றுக்கொடுத்து அதன்படி வாழச் செய்வது தான் பெரிய காரியமாகும்.

பிள்ளைகளை நற்கிரியையின் பால் தூண்டவேண்டும். வீட்டிலுள்ள பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர் சன்மார்க்க நெறிகளை பேணுபவர்களாக இருப்பார்களேயானால் நிச்சயமாக அவர்களின் பிள்ளைகள் ஒருபோதும் தவறான வழிகளில் செல்லமாட்டார். நல்ல அறிவொழுக்கம் நிறைந்த மாணிக்கங்களாக திகழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, நிலையில்லாத இந்த உலகை விட்டும் நீங்க வேண்டிய நாம், அல்லாஹுத்தஆலாவால் எமக்களித்த இனிய வாழ்க்கையை ஆடலிலும் பாடலிலும் -ஆடம்பரத்திலும் கழித்துவிட்டு மறுமையில் என்ன பதிலைத் தான் சொல்லப் போகின்றோம் என்பதனை ஒவ்வொருவரும் சற்று சிந்திப்போமாக!

நன்றி : சகோதரர் அபூ பக்கர்