சுதந்திரம் பெற்ற பின் 1952ம் ஆண்டில் இருந்து இதுவரை
15 நாடாளுமன்ற தேர்தல்களை இந்தியா சந்தித்து இருக்கிறது. 15-வது பாராளுமன்ற
தேர்தல் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது. 16-வது பாராளுமன்ற
பொதுத்தேர்தலுக்கான முடிவு இன்று வெளியாகிறது.
காங்கிரஸ் கட்சி 11 முறை ஆட்சிக் ஆட்சி அமர்ந்துள்ளது.
பா.ஜ.க 3 முறை ஆட்சி நடத்தி இருக்கிறது. இதுவரை நடந்த தேர்தல்கள் மற்றும்
அரசுகள் குறித்து உங்கள் பார்வைக்கு..
தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1952
காங்கிரஸ் கட்சி முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
வெற்றி பெற்ற கட்சி - காங்கிரஸ்
கிடைத்த இடங்கள் - 489-ல் 364.
பெற்ற ஓட்டு சதவீதம் -- 44.99
முதல் பிரதமராக ஜவகர்லால் நேரு பதவி ஏற்றார்.
தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1957
காங்கிரஸ் கட்சி முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
இந்த தேர்தலில் மாநில கட்சிகள் எழுச்சி பெற தொடங்கின.
வெற்றி பெற்ற கட்சி - காங்கிரஸ்
கிடைத்த இடங்கள் - 494-ல் 371.
பெற்ற ஓட்டு சதவீதம் - 47.78
நேரு மீண்டும் பிரதமர் ஆனார்.
1952 முதல் நாடாளுமன்றம்
முதன் முதலாக பாரதீய ஜனசங்கத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வாஜ்பாய் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.
தேர்தல் நடந்த ஆண்டு - 1962
காங்கிரஸ் முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
வெற்றி பெற்ற கட்சி - காங்கிரஸ்
கிடைத்த இடங்கள் - 494-ல் 361.
பெற்ற ஓட்டு சதவீதம் -- 44.72
3-வது முறையாக நேரு பதவியேற்றார். ஆனால் 1964ம் ஆண்டு
மரணம் அடைந்தார். நேருவின் மரணத்தால் குல்சாரிலால் நந்தா இடைக்கால பிரதமர்
ஆனார். அதன்பின் லால்பகதூர் சாஸ்திரி அந்த ஆண்டில் ஜூன் 9-ந் தேதி
பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவரும் 1966 ஜனவரி 11-ல் சாஸ்திரி
மரணம் அடைந்ததால் குல்சா ரிலால் நந்தா இடைக்கால பிரதமர் ஆனார். அதன் பின்
ஜனவரி 24-ந் தேதி இந்திராகாந்தி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
தேர்தல் நடந்த ஆண்டு - 1967
காங்கிரஸ் கட்சி முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்ய வில்லை.
இந்திரா காந்தியின் தலைமை எதிர்க்கட்சிகளின் கடும்
விமர்சனத்துக்கு உள்ளானது. தேர்தலுக்கு ஓர் ஆண்டுக்கு முன் இந்திரா
காந்திக்கு எதிராக மொரார்ஜி தேசாய் போர்க்கொடி உயர்த்தினார்.
வெற்றி பெற்ற கட்சி - காங்கிரஸ்
கிடைத்த இடங்கள் - 520-ல் 283.
பெற்ற ஓட்டு சதவீதம் - 40.78
இந்த தேர்தலில் இந்திரா காந்தி பிரதமர் ஆனார்.
தேர்தல் நடந்த ஆண்டு - 1971
காங்கிரஸ் கட்சி முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
வெற்றி பெற்ற கட்சி - இ.காங்கிரஸ்
கிடைத்த இடங்கள் - 518-ல் 352
பெற்ற ஓட்டு சதவீதம் - 43.68
இந்த தேர்தலிலும் இந்திரா காந்தி பிரதமர் ஆனார்.
தேர்தல் நடந்த ஆண்டு - 1977
(1975-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ததால் தாமதமாக தேர்தல் நடந்தது.)
ஜனதா பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யவில்லை.
அதிகாரத்தை இந்திரா காந்தி தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
வெற்றி பெற்ற கட்சி - ஜனதா
கிடைத்த இடங்கள் - 542-ல் 345
பெற்ற ஓட்டு சதவீதம் - 52.74
இந்த தேர்தலில் மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். சுமார் 2
1/2 ஆண்டுகளில் ஆட்சி கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து, இந்திரா காந்தியின்
ஆதரவுடன் லோக்தளம் கட்சியின் சரண்சிங் பிரதமர் ஆகிறார். 1979 ஜூலை
28-ந்தேதி முதல் 1980 ஜனவரி 14-ந் தேதி வரை அவர் பிரதமராக இருந்தார் சரண்
சிங்
தேர்தல் நடந்த ஆண்டு - 1980
இந்திரா காங்கிரஸ் கட்சி முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
வெற்றி பெற்ற கட்சி - இந்திரா காங்கிரஸ்
கிடைத்த இடங்கள் - 529-ல் 353
பெற்ற ஓட்டு சதவீதம் - 42.69
இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார். பதவியில் இருந்த போது 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1984
இந்திரா காங்கிரஸ் தனது முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
தேர்தலுக்கு முன் நடந்த இந்திரா காந்தி படுகொலை. இதனால் ராஜீவ்காந்தி பிரதமராக பதவி ஏற்றார்
வெற்றி பெற்ற கட்சி - இந்திரா காங்கிரஸ்
கிடைத்த இடங்கள் - 514-ல் 404
பெற்ற ஓட்டு சதவீதம் - 49.10
இந்த தேர்தலில் ராஜீவ்காந்தி பிரதமர் ஆனார்.
தேர்தல் நடந்த ஆண்டு - 1989
முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யவில்லை.
அதிக இடங்களில் வென்ற கட்சி - ஜனதாதளம்
கிடைத்த இடங்கள் - 529ல் 143 பெற்ற ஓட்டு சதவீதம் - 17.79
வி.பி.சிங் தலைமையில் ஜனதா தள கூட்டணி ஆட்சி அமைந்தது.
அந்த அரசு சில மாதங்களில் கவிழ்ந்ததால் சமாஜ்வாடி ஜனதாவின் சந்திரசேகர்
தலைமையில் புதிய கூட்டணி அரசு பதவி ஏற்றது. ஆனால் அந்த அரசும் விரைவிலேயே
பதவி இழந்தது. 16 மாதங்களில் இரு கூட்டணி அரசுகளும் முடிவுக்கு வந்தது
தேர்தல் நடந்த ஆண்டு - 1991
காங்கிரஸ் கட்சி முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
அதிக இடங்களில் வென்ற கட்சி - காங்கிரஸ்
கிடைத்த இடங்கள் - 521ல் 232
பெற்ற ஓட்டு சதவீதம் - 17.79
இடது சாரி கட்சிகளின் ஆதரவில் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்து தனது முழு பதவி காலத்தையும் பூர்த்தி செய்தது.
தேர்தல் நடந்த ஆண்டு - 1996
முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யவில்லை.
அதிக இடங்களில் வென்ற கட்சி - பா.ஜ.க.
பா.ஜ.க.- 543ல் 161 வெற்றி பெற்றது
காங்கிரஸ் கட்சி 140 இடங்களில் வெற்றி பெற்றது
பா.ஜ.க. பெற்ற ஓட்டு சதவீதம் - 20.29
இந்த தேர்தலில் 161 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க.
வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை
நிரூபிக்க முடியாததால் 13 நாட்களில் அரசு கவிழ்ந்தது.
அதன்பின் காங்கிரஸ் ஆதரவுடன் தேவேகவுடா தலைமையில்
ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு அமைந்தது. பின்னர் காங்கிரஸ் ஆதரவை வாபஸ்
பெற்றதன் காரணமாக இந்த அரசும் 1997ம் ஆண்டு ஏப்ரல் வரைதான் நீடித்தது. அதன்
பின் ஐ.கே.குஜ்ரால் பிரதமர் ஆக்கப்பட்டார். பின்னர் அவரது அரசையும்
1998-ல் காங்கிரஸ் கவிழ்த்தது.
11வது நாடாளுமன்றம் 2 ஆண்டு காலத்தில் 3 பிரதமர்களை கண்டது
தேர்தல் நடந்த ஆண்டு - 1998
முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யவில்லை.
அதிக இடங்களில் வென்ற கட்சி - பா.ஜ.க.
பா.ஜ.க. கிடைத்த இடங்கள் - 543ல் 181
காங்கிரசுக்கு கிடைத்த இடங்கள் - 141
பா.ஜ.க. பெற்ற ஓட்டு சதவீதம் - 25.59
வாஜ்பாய் தலைமையில் மீண்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால் ஓர் ஆண்டிலேயே இந்த அரசு கவிழ்ந்து விட்டது.
தேர்தல் நடந்த ஆண்டு - 1999
பா.ஜ.க. முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
அதிக இடங்களில் வென்ற கட்சி - பா.ஜ.க.
பா.ஜ.க. வெற்றி பெற்ற இடங்கள் - 543ல் - 182
பெற்ற ஓட்டு சதவீதம் - 40.80
பாரதீய ஜனதா தலைமையில் தேர்தலை சந்தித்த தேசிய ஜனநாயக
கூட்டணி 270 இடங்கள் வெற்றி பெற்றது. வாஜ்பாய் 3வது முறையாக நாட்டின்
பிரதமர் ஆனார்.
தேர்தல் நடந்த ஆண்டு - 2004
காங்கிரஸ் முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
அதிக இடங்களில் வென்ற கட்சி - காங்கிரஸ்
காங்கிரஸ் கிடைத்த இடங்கள் - 543ல் 141
பா.ஜ.க. வெற்றி பெற்றது 137
காங்கிரஸ் கூட்டணி பெற்ற ஓட்டு சதவீதம் - 35.40
சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது.
மன்மோகன்சிங் முதல் முறையாக பிரதமர் ஆனார்.
தேர்தல் நடந்த ஆண்டு - 2009
காங்கிரஸ் கட்சி முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
அதிக இடங்களில் வென்ற கட்சி - காங்கிரஸ்
காங்கிரஸ் வெற்றி பெற்றது - 543ல் 203
பா.ஜ.க. கட்சிக்கு கிடைத்த இடங்கள் 117
காங்கிரஸ் கூட்டணி பெற்ற ஓட்டு சதவீதம் - 37.22
மன்மோகன்சிங் மீண்டும் 2வது முறையாக பிரதமராகி 5 ஆண்டுகளை ஆட்சியை பூர்த்தி செய்துள்ளார்.
அஷ்ரப்