25 September 2014

பெண்ணுக்கு மூன்றாவது மார்பு


பெண்ணுக்கு மூன்றாவது மார்பு

உலகிலுள்ள பல நாடுகளில் உள்ள மக்கள் அன்றாட உணவுக்காக கூட வழி தேடிக்கொண்டிருக்கும் நிலையில் பணத்தை வீணடிப்பதற்காகவே சிலர் வழி தேடிக்கொண்டிருக்கின்றனர். தற்போதுள்ள நடைமுறை பழக்கங்களை பார்த்தால் உலக அழிவு சீக்கிரம் வந்துவிடும் போலிருக்கின்றது.

பெண்ணொருவர் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் ஒன்றில் நிகழச்சியொன்றுக்காக 20,000 அமெரிக்க டொலர் (இலங்கை பணம் ரூ.2,606,500) செலவு செய்து புதியதொரு மார்பை பொருத்தியுள்ளார் என்று கூறினால் நம்பவீர்களா?

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸ்மீன் எனும் பெண்ணே இவ்வாறு வித்தியாசமானதொரு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

எவ்வளவோ சாதனையை செய்த வைத்தியத்துறையே இவ்வாறான சத்திரசிகிச்சையை செய்யமுடியாது என்று கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 50 முதல் 60 வரையிலான வைத்தியர்களிடம் குறித்த பெண் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இருந்தபோதிலும் வைத்தியர்களுக்கேயான நெறிமுறைகளை மீறக்கூடாது என்ற காரணத்தினால் இதனை செய்யமுடியாது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் அமெரிக்காவிலுள்ள சிறந்த வைத்தியொருவரினால் 2 வருடகாலமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின்னர் குறித்த பெண்ணுக்கு 3ஆவது மார்பு பொருத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டதன் காரணமாக ஜெஸ்மீனின் பெற்றோர் இவருடன் பேசுவதில்லையாம்.

நான் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்காகவே இவ்வாறு செய்துக்கொண்டேன். இதனை ஒரு அதிஷ்ட அங்கமாக நான் எண்ணுகிறேன். நான் பிரபல்யத்தை விரும்புகின்றேன்.

எனக்கு ஆண்களுடன் நேரத்தை வீணடிப்பது பிடிக்காது. இவ்வாறான எனது தோற்றம் கவர்ச்சியற்றதாகவே ஆண்களுக்கு தெரியும். அதனை நான் விரும்புகிறேன் என்று ஜெஸ்மீன் தெரிவித்துள்ளார்.
-அஷ்ரப்

உலகின் சுத்தமான கிராமம் மவ்ளினோங் இந்தியாவில் உள்ளது!

மவ்ளினோங்: உலகின் சுத்தமான கிராமம் இந்தியாவில் உள்ள மவ்ளினோங் ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள மவ்ளினோங் கிராமம் ஆகும். மலையின் மீது அமைந்துள்ளதால் இது வெகு சுத்தமான கிராமமாக இது அறியப்படுகிறது. இங்கு  அமைந்துள்ள அழகிய சிறிய அருவிகள் மேலும் கிராமத்திற்கு அழகை கூட்டுகின்றன.

-அஷ்ரப்

24 September 2014

மிக சிறந்த குர்பானி எது தெரியுமா ..?









எல்லா பங்கு தாரரும்...கண்மணி நாயகத்திற்காக நிய்யத் செய்து கொள்வது !
கூட்டுகுர்பானி யில் ,,,வட்டி போன்ற ஹராமான தொழில் செய்பவர்கள் கூட்டு சேர்ந்தால்.....யாருடைய குர்பானியும் ..சேராது ..!எச்சரிக்கை !
வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒரு ஆடு என கொடுக்கவும் கூடாது !
ஒரு ஆடு ஒரு நபருக்குத்தான் !
கூட்டு குர்பானியில் முஸ்லிம் அல்லாதவர் இணைந்தால் ..யாருடைய குர்பானியும் ..கூடாது !
குர்பானி கொடுக்க கடமை பட்டவர் ...தனக்கு கொடுக்காமல்....மறைந்த பெற்றோருக்கும் கொடுக்கலாம் !
இருந்தாலும்...தனக்கும் கொடுக்க வசதி இருந்தால் ..கண்டிப்பாக கொடுக்கணும் !
கண்டிப்பாய் ..பெருநாள் தொழுகைக்கு முன் கொடுக்க கூடாது !
வசதி படைத்த ஒருவர் ..ஏழையான தன் நண்பருக்கும்,,,அவரது அனுமதி பெற்று ,,குர்பானி கொடுக்கலாம் !
தொழுகையை அலட்சியமாக கருதுபவர் ...குர்பானி கொடுத்தால்...அது குர்பானியாக ஆகாது !
குர்பானி கொடுப்பவர் மட்டும் பிறை ஒன்றில் இருந்து பத்துவரை ..அதாவது குர்பானி கொடுக்கும் வரை முடி ,,நகம் களைய கூடாது !
ஏற்கனவே வாங்கப்பட்ட பிராணியை விட சிறந்ததாக வாங்கணும்..என்றால் மட்டும் மாற்றி வாங்கி கொள்ளலாம் !




தகுதி இருந்தும் குர்பானி கொடுக்காதவர்...அல்லாஹ்வின் அருளுக்கு ..அருகதையற்றவர் ..என கண்மணி நாயகம் சொல்லி இருக்கிறார்கள் !
தகுதியிருந்தும் ,,குர்பானி கொடுக்காதவர்கள் ..ஈதுப்பெருநாள் தொழுகையை கூட வர வேண்டாம் என சொல்லி இருக்கிறார்கள் கண்மணி ரஸூலுல்லாஹ்!
பெண்களும் குர்பானி அறுக்கலாம் !
இரவில் அறுப்பது ..மக்ரூஹ் !
அருப்பவருக்கு தோலை..கூலியாக கொடுக்க கூடாது !
ஓர் ஆண்டு பூர்த்தியான ஆடு..இரண்டு ஆண்டு பூர்த்தியான மாடு ,,ஐந்து வருடம் பூர்த்தியான ஒட்டகம் ..தான் கொடுக்கணும் !
குர்பானி அறுக்க தெரியாதவர் ..அறுப்பவரின் கைமேல் ,,தன் கையை ,வைத்துக்கொண்டு...பிஸ்மி சொல்ல வேண்டும் !
அப்படி செய்யாவிட்டால்..குர்பானி கூடாது !
தமக்கு பதிலாக பிறரை ,,குர்பானி தரும்படி ,,கூறலாம் !
கடனாளியான ஒருவர் ...குர்பானி கொடுப்பது கடமை இல்லை !


மிக சிறந்த கூட்டுகுர்பானி ...
நன்றி:Shafiyath Qadiriyah

-
அஷ்ரப்

''10 ரூபாய் தினக்கூலி... பல கோடி ரூபாய் ஊழல்!


ஆவின்.. வைத்தியின் அசுர வளர்ச்சி

''ஆவின் நிறுவனத்தின் எம்.டி. சுனில் பாலிவாலை டிரான்ஸ்ஃபர் பண்ணி காட்றேன் பாருங்க'' என சபதம் போட்டார் வைத்தியநாதன். ஆனால், சுனில் பாலிவாலுக்கு பதிலாகப் பதவியை பறிகொடுத்தார் பால்வளத் துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி.

'மாதவரம் மூர்த்தியின் தலை உருண்டதற்கு காரணம் ஒரே ஒரு ஆள்தான்’ என பெயர் குறிப்பிடாமல் 'பால் கடத்தலுக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா?’ என்ற தலைப்பில் கடந்த 14.9.14 தேதியிட்ட ஜூ.வி இதழில் எழுதியிருந்தோம். அந்த ஆள் வேறு யாருமில்லை வைத்தியநாதன்தான். ஆவின் பால் கலப்பட ஊழல் விவகாரம் சந்தி சிரிக்க காரணமாக இருக்கும் வைத்தியநாதன் அ.தி.மு.க புள்ளி. அவரைப் பற்றிய வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றினார்கள் ஆவின் ஊழியர்கள். ''தென் சென்னை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக இருந்த வைத்தியநாதன் 1985-ல் ஆவினில் தானியங்கி பால் நிலையத்தில் 10 ரூபாய் தினக்கூலியாக வேலைக்குச் சேர்ந்தார். இப்போது முக்கியப் பதவியில் இருக்கும் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் மூலம்தான் வளர்ச்சி அடைய ஆரம்பித்தார் வைத்தியநாதன். அப்போது தானியங்கி பால் வழங்கும் நிலையங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டு வந்தது. அவர்கள் பெயரில் அந்த பூத்துகளை மோசடியாக கைப்பற்ற ஆரம்பித்தார் வைத்தியநாதன். அப்படிப் பெற்ற பூத்துகளில் தண்ணீரைக் கலந்து கொள்ளை லாபம் பார்த்தார். இதில் ருசி கண்டதால் ஆவினை கரையான்போல அரிக்க ஆரம்பித்தார். 1991-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்தபோது ஜனார்தனன் பால்வளத் துறை அமைச்சராக இருந்தார். அவருடைய மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வைத்தியநாதனுக்கு நெருக்கம். இப்போது அவர் முன்னாள் அமைச்சராக இருக்கிறார். அவர் மூலம் பால் வண்டி கான்ட்ராக்ட்டை கைப்பற்றினார் வைத்தியநாதன். அதன் பிறகு வைத்தியநாதனின் வளர்ச்சி கிடுகிடு என உயர்ந்தது. அடுத்து 1996-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நந்தனம் ஏரியா பூத் ஒன்றில் ஸ்டாலின் அப்போது ரெய்டு செய்தபோது வைத்தியநாதனின் தகிடுதத்தம் வெளிச்சத்துக்கு வந்தது. உடனே ஆந்திராவுக்குத் தப்பிப் போனார் வைத்தியநாதன். ஆவினை கைவிட்டுவிட்டு தீபிகா என்ற பெயரில் தனியாக பால் பண்ணை நடத்தி 'பூஜா’ என்ற பெயரில் பால் விற்றார். இதில் அந்த விழுப்புரம் பிரமுகரும் பார்ட்னராக இருந்தார்.
2001-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் ஆவினுக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்தார். அவருக்கு அனைத்து ஆசிகளும் கிடைத்தன. விழுப்புரம் பிரமுகரும் அவருடைய சகோதரரும் வைத்தியநாதனுக்கு வேண்டிய உதவிகளை செய்துகொடுத்தனர். அப்போதுதான் டேங்கர் லாரிகள்மூலம் பால் சப்ளை நடைபெறத் தொடங்கியது. அதில் கால் பதிக்க ஆரம்பித்தார் வைத்தியநாதன். டேங்கர் லாரி ஒதுக்கீடு தொடர்பான டெண்டர் கமிட்டியில் உட்கார்ந்து யாருக்கு டெண்டர் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்தார். 2006-ல் தி.மு.க ஆட்சி வந்ததும் மதிவாணன் பால்வளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது கருணாநிதி அருகில் இருந்த ஒரு முக்கியப் பிரமுகரை பிடித்து படிப்படியாக ஆவின் நிறுவனத்தின் உச்சாணியில் ஏறத் தொடங்கினார்.
2011-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்தபோது டேங்கர் லாரிகள்மூலம் பால் கொண்டு வரும் கான்ட்ராக்ட்டில் கொடிகட்டிப் பறந்தார். இதன்மூலம் பல கோடிகளை சம்பாதித்தார். டெண்டர் கமிட்டி, தரக் கட்டுப்பாட்டு பிரிவு என ஆவினில் எல்லா இடங்களிலும் வைத்தியநாதனின் ஆட்கள்தான் இருப்பார்கள். வைத்தியால் உண்டுகொழுத்த அதிகாரிகள் நிறைய பேர் ஆவினில் இருக்கிறார்கள். பிளாட்டுகள், கடைகள், ஆடம்பரப் பொருட்கள் என வாங்கித் தந்து ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் குளிர்வித்துவிடுவார் வைத்தியநாதன்'' என்று பழைய வரலாறுகளை புரட்டிப் போட்டனர்.
பால் கடத்தல் பற்றி விவரித்தார்கள் விவரம் அறிந்தவர்கள். ''ஆவின் பால் பண்ணைகளுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் பால் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இப்படி பால் கொண்டு வரும் டேங்கர் லாரிகளில் சீல் வைக்கப்பட்டிருக்கும். டேங்கர் லாரிகளை வழியில் எங்காவது நிறுத்தி அந்த சீலை லாகவமாகப் பிரித்துப் பாலைத் திருடுவார்கள். அதற்குப் பதிலாக வேதிப்பொருள் சேர்க்கப்பட்ட தண்ணீரையோ அல்லது பவுடரையோ கலப்பார்கள். பால் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சிலரும் வைத்தியநாதனுக்கு உடந்தையாக இருந்ததால் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வராமல் இருந்தது.
100-க்கும் மேற்பட்ட லாரிகளை வைத்தியநாதன் இயக்கி வந்தார். இதில் பல லாரிகள் ஒரே பதிவு எண் கொண்டவை. ஒவ்வொரு லாரியிலும் தினமும் 2 ஆயிரம் லிட்டர் வீதம் ஒவ்வொரு நாளும் 2 லட்சம் லிட்டர் வரை பால் திருடப்பட்டு வந்தது. பாலில் கலப்படம் செய்வதைக் கண்டுபிடிப்பதற்காகவே ஆவினில் விஜிலன்ஸ் பிரிவு உண்டு. ஆனால், இந்த முறைகேடுகள் பற்றி விஜிலன்ஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல் பால் திருட்டைக் கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி உதவியை நாடினார் ஆவின் எம்.டி சுனில் பாலிவால். பால் திருட்டு தொடர்பாக ரிப்போர்ட் ஒன்றை முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் அனுப்பி வைத்தார். முதல்வரின் ஒப்புதலுடன் அவர் எடுத்த நடவடிக்கையில்தான் இவ்வளவு விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இப்படி நடைபெறும் முறைகேடுகளால் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லமுடியாமல் ஆவின் முடங்கிப் போயிருக்கிறது'' என்றார்கள்.
வைத்தியநாதனை கைதுசெய்து சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியிருக்கிறார்கள். யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் கொடுத்தார் என்கிற விவரங்களை எல்லாம் வைத்தியநாதன் வீட்டில் நடந்த சோதனையில் கண்டுபிடித்திருக்கிறார்களாம். திருடப்பட்ட பால் தனியார் பால் நிறுவனத்துக்கு விற்கப்பட்டிருக்கிறது. இந்த மோசடியில் 10 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டிருக்கிறது. ஆவின் பொது மேலாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
''வைத்தியநாதனை கைது செய்துவிட்டு, ஆவின் ஊழியர்கள் சிலரை சஸ்பெண்ட் செய்துவிட்டால் மட்டும் போதாது. இந்த மெகா மோசடிக்கு துணை போன ஆவின் அதிகாரிகள் சிலரையும் கைதுசெய்ய வேண்டும். அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தியையும் விசாரிக்க வேண்டும்'' என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
சுனில் பாலிவாலிடம் பேசினோம். ''உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணையில் தவறு இழைத்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள்மீதும் ஆக்ஷன் இருக்கும். தவறுகள் நடக்காமல் இருக்கப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பழைய சீல் முறையை மாற்றி நவீன சீல் முறைக்குத் திட்டமிட்டிருக்கிறோம். இப்படி புதிய யுக்திகளை பின்பற்றி தவறுகளையும் மோசடிகளையும் தடுத்து நிறுத்துவோம்'' என்றார்.
வெளுத்தது எல்லாம் பாலாகிவிடுமா என்ன?
- எம்.பரக்கத் அலி
அஷ்ரப்

செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் : வரலாற்று சாதனை படைத்தது இந்தியா

பெங்களூர்: செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரகமாக நிலைநிறுத்தப்பட்டது. விண்கலத்தில் உள்ள 8 இஞ்சின்களையும் இயக்கி சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. முதல் சோதனையிலேயே இந்தியா வெற்றி பெற்றுள்ளது.  இந்திய விஞ்ஞானிகள் மங்கள்யான் விண்கலத்தை இன்று காலை 8 மணயளவில் செவ்வாய் கிரக சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர். முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரக சுற்றுவட்டபாதையில் விண்கலத்தை நிலைநிறுத்திய முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை தான் இஸ்ரோ நிகழ்த்தியுள்ளது. 


பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். முதல் முயற்சியிலேயே இந்தியா வெற்றி பெற்றுள்ளது பெருமைக்குரியது என்றார். மேலும் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா சாதனை படைத்துள்ளதாக மோடி பெருமிதம் கொண்டார். முதல் முயற்சிலேயே வெற்றி பெறும் வகையில் பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார். இந்தியா அடுத்த சவால்களுக்கு தயாராக வேண்டும் என்று மோடி தெரிவித்தார்.

மங்கள்யானின் பயணம்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் விண்கலம் தயாரிக்கப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2013 நவம்பர் 5-ம் தேதி மங்கள் ஏவப்பட்டது. 323 நாள் முடிவில் 2014 செப்டம்பர் 22-ல் செவ்வாய் ஈர்ப்பு விசை பகுதியை அடைந்தது. 325 நாள் பயணித்து செவ்வாய் கிரக சுற்று வட்டபாதையை மங்கள்யான் அடைந்தது. 21கோடி கிலோ மீட்டர் பயணம் செய்து சுற்றுவட்ட பாதையை அடைந்துள்ளது.

சாதனை படைத்த மங்கள்யான்

முதல் முயற்சியிலேயே செவ்வாய் சுற்றுப் பாதையில் விண்கலத்தை இந்தியா நிலை நிறுத்தியது. செவ்வாய் சுற்றுப்பாதையில் விண்கலத்தை முதல் முயற்சியில் நிலைநிறுத்திய முதல் நாடு இந்தியா என்ற சாதனையை நிகழ்த்தியது.

மங்கள்யான் உருவான விதம்

செவ்வாய் கிரகத்தை ஆராய செயற்கைக்கோளை அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்திற்கு மத்திய அரசு 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி ஒப்புதல் வழங்கியது. ரூ.454 கோடி மதிப்பீட்டில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே செயற்கைக்கோள் தயாரிக்கும் பணி துவங்கியது. மொத்த மதிப்பீட்டில், ரூ.125 கோடி செலவில் மங்கள்யானுக்கு விண்ணில் செலுத்த தேவையான கருவிகள், ரூ.153 கோடி செலவில் செயற்கைக்கோள் மற்றும் இதர தொகை ஏவுதளம் மற்றும் இதர டிராக்கிங் சிஸ்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது.

மங்கள்யான் பணி என்ன?

செவ்வாயில் உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் பற்றி மங்கள்யான் ஆராய்ச்சி மேற்கொள்ளும். மேலும் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர், கனிம வளம் உள்ளதா எனவும் மங்கள்யான் ஆராய்ச்சி செய்யும். செவ்வாயில் மீத்தேன் வாயு உள்ளதா என்பதையும் மங்கள்யான் கண்டறியும்.

-
அஷ்ரப்

23 September 2014

ஐ.எஸ். அமைப்பை வீழ்த்துவது எப்படி?

அமெரிக்காவின் இராக் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவரின் பார்வையில்…
அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகளின் இராக்கிய ஆக்கிரமிப்பின் விளைவாகத் தோன்றியதுதான் ஐ.எஸ். என்கிற பயங்கரவாத அமைப்பு என்பதில் சந்தேகம் இல்லை. இராக்கின் மேற்கிலும் வடக்கிலும் மோசுல் உள்ளிட்ட சில நகரங்களைத் துப்பாக்கி முனையில் கைப்பற்றியதன் மூலம் உலகின் கவனத்தை அது ஈர்த்துவிட்டது.
இராக்கிலும் சிரியாவிலும் ராணுவ வீரர்களைச் சிறைப்பிடித்து, அவர்களைப் பொது இடங்களில் கை, கால்களைக் கட்டிவைத்துச் சுட்டுக்கொன்றது. மாற்று மதத்தவர்களை மதம் மாறுமாறு மிரட்டியது, மறுத்தோரைச் சுட்டுக்கொன்றது அல்லது வீடு - வாசலை விட்டு ஓடுமாறு அச்சுறுத்தியது.
அந்த அமைப்பு தோன்றிய நாள் முதல் அதைப் பார்த்துவருகிறவள் என்கிற வகையில் சொல்கிறேன், விமானத்திலிருந்து துப்பாக்கியால் சுடுவதாலோ, குண்டுகளை வீசுவதாலோ அதை அழித்துவிட முடியாது. மேற்கத்திய நாடுகள் அல்லாத வேறு நாடுகளைச் சேர்ந்த படைகளே திரண்டாலும், சிரியாவுக்கே சென்று போரிட்டாலும் அதை இப்போதைக்கு ஒடுக்க முடியாது. ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் கடைப்பிடிக்கும் ராணுவ உத்திகளையே அது பின்பற்று கிறது. அத்துடன் மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் குறைகளும் பலவீனங்களும் அதற்கு அத்துப்படி. அந்த அமைப்பின் மைய இலக்கே அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவற்றுடன் சேர்ந்த நாடுகள்தான்.
பதில் தாக்குதலின் பாதகங்கள்
உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்த ஐ.எஸ். தலைவர்கள் ஆழ்ந்து சிந்திக்கிறார்கள். அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எந்தெந்த சந்தர்ப்பங்களில் ராணுவரீதியாகத் தலையிடுவார்கள், எங்கே நுழைவார்கள், எப்படித் தாக்குவார்கள் என்பதையெல்லாம் அருகிலிருந்து பார்த்தவர்கள்தான் ஐ.எஸ். தலைவர்கள். ஆகையால்தான், தங்களுடைய தாக்குதல்களுக்கான ஆட்களை அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், டென்மார்க் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளிலிருந்தே தேர்வுசெய்திருக்கிறார்கள்.
விமானங்களில் சென்று குண்டுவீசியோ, விமானங்களில் சென்று திடீர்த் தாக்குதல் நடத்தியோ ஐ.எஸ். அமைப்பினரை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்பதே மேற்கத்திய ஆட்சியாளர்களின் துடிப்பாக இருக்கும். இதனால் உடனடியாகச் சில வெற்றிகள் கிடைத்தாலும் அவை பயனுள்ளதாக, நீண்ட காலத்துக்கு உதவுவதாக நிச்சயம் இருக்காது.
அவர்களுடைய தாக்குதலுக்குப் பதில் தாக்குதல், அடிக்குப் பதிலடி என்று இறங்கினால் அவற்றையே சுட்டிக்காட்டித் தங்களுக்குத் தேவைப்படும் ஆட்கள், பணம், ஆயுதங்கள் ஆகியவற்றை அவர்கள் திரட்டிக் கொள்வதுடன், உள்ளூர் மக்களுடைய ஆதரவையும் பெற்றுவிடுகின்றனர். 2006, 2007 ஆகிய ஆண்டுகளில் இராக்கில் உள்நாட்டுப் போர் நடந்தபோது இதுதான் நடந்தது. ஐ.எஸ். அமைப்புடன் நேரடியாக மோதுவதைத் தவிர்ப்பதே வெற்றியைத் தரும். 2009, 2010 ஆண்டுகளில் இதுதான் நடந்தது.
பாக்தாதிலும் பிற நகரங்களிலும் கார்களில் வெடிகுண்டுகளை ஏற்றிவந்து கூட்டம் நிரம்பிய இடங்களில் அவற்றை மோதவைத்து வெடிக்க வைத்தனர். இதனால் அப்பாவிகள் கொத்துக்கொத்தாக மடிந்தனர். ஆனால், இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க ராணுவமோ, இராக்கிய ராணுவமோ எதிர்த் தாக்குதல் எதிலும் ஈடுபடவில்லை. எதிரி யார் என்று தெரியாத நிலையில், மக்கள் மீது தாக்குதல் நடத்துவது சரியில்லை என்ற முடிவும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
இதனால் நாளாவட்டத்தில் அந்த பயங்கரவாதிகள் மீது மக்களுக்கு வெறுப்புதான் வளர்ந்தது. நம்முடைய மக்களையே இப்படிப் பலிவாங்குகிறார்களே என்று அவர்கள் மீது கோபம் அடைந்தார்கள். நூரி அல் மாலிகி தலைமையிலான ஷியா அரசுக்கு அமெரிக்கர்கள் ஆதரவு தெரிவிப்பதால், இப்படித் தாக்குகிறோம் என்று சன்னி பிரிவு முஸ்லிம்களிடம் கூறினார்கள் ஐ.எஸ்.அமைப்பினர்.
மக்களின் வெறுப்பே ஆயுதம்
ஐ.எஸ். அமைப்பினரின் செயல்களைத் தொடர்ந்து கண்காணித்து, அவர்களுக்கு மக்களிடையே ஆதரவும் செல்வாக்கும் சேராதபடிக்குத் தடுப்பதே இப்போதைக்கு மிகச் சிறந்த ராணுவ உத்தியாக எனக்குத் தெரிகிறது. அப்பாவி மக்களை ஐ.எஸ். அமைப்பினர் கூட்டம் கூட்டமாகக் கொல்வதன் மூலமாகவும், நாட்டை விட்டே ஓடுமாறு மிரட்டுவதன் மூலமாகவும் மக்கள் மத்தியில் அவர்கள் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
சன்னி பிரிவினரே ஐ.எஸ். அமைப்பின் செயல்களை எதிர்க்கத் தொடங்கி விட்டனர். இது இப்படியே தொடரட்டும் என்றே மேற்கத்திய நாடுகளின் அரசுகளும் நினைப்பது போலத் தெரிகிறது. வடக்கு இராக்கில் மவுண்ட் சிஞ்சார், இர்பில் ஆகிய இடங்களில் நடந்த படுகொலைகளையும், அமெரிக்காவின் இரண்டு பத்திரிகை யாளர்களைக் கத்தியால் அறுத்துக் கொன்றதையும் எல்லோருமே கண்டித்துவருகின்றனர்.
என்ன செய்யலாம்?
ஐ.எஸ். அமைப்பின் வளர்ச்சியை நான்கு தளங்களில் தடுக்கலாம் என்று நினைக்கிறேன். தங்களுடைய அமைப்பில் சேர்ந்து பணியாற்றி, மதத்துக்குத் தொண்டு செய்யுங்கள் என்று இணையம் மூலம் வேண்டுகோள் விடுத்து அப்பாவி இளைஞர்களை ஈர்க்கின்றனர். அப்படிச் சேர்ந்த சிலரைச் சீருடை, ஆயுதத்துடன் செல்ஃபி எடுக்கவைத்து வீடியோ மூலம் காட்டி, மற்றவர்களை ஈர்க்கப் பயன்படுத்துகின்றனர். அந்தச் சமூக வலைதளங்களுக்குச் சென்று, அந்த இயக்கத்தில் சேரக் கூடாது என்பதை எடுத்துக்கூறி, அவற்றின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்துங்கள்.
இந்த அமைப்பினர் செயல்படும் இடத்தைச் சுற்றி, தற்காலிகமாக எல்லைக்கோடுகளைப் பகிரங்கமாக வரையுங்கள். பிற பகுதிகளில் நுழைந்து மக்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்த முடியாத நெருக்கடி அவர்களுக்கு ஏற்படும். அல்லது அவர்களால் கைப்பற்றப்பட்டு உதவிக்காக ஏங்கும் அப்பாவிகள் இருக்கும் பகுதிகளைச் சுற்றி எல்லைக்கோடு வரைந்து, அவர்களுக்கு உதவுங்கள்.
பயங்கரவாதிகள் எவரையாவது கடத்திவைத்துப் பிணைத்தொகை கேட்டால், அதைக் கொடுக்கக் கூடாது என்று சர்வதேச அளவில் நியதியை ஏற்படுத்துங்கள். ஐ.எஸ். அமைப்பினர் தங்கள் பகுதிகளில் உள்ள அரிய கலைப்பொருட்களையும் மற்றவற்றையும் திருடி விற்கவோ, மக்களிடம் வரி வசூலிக்கவோ அனுமதிக்காதீர்கள். எண்ணெய் வளம் போன்றவை அவர்கள் கைகளில் சிக்கிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வருமானம் வரும் வழியை அடைத்தாலே இந்த பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் வேகமாக முடக்கப்படும்.
இப்படி ஓரிடத்தில் சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகை யிடப்பட்டுவிட்டால், ஐ.எஸ். அமைப்புக்கு மக்களிடையே ஆதரவும் மதிப்பும் குறைந்துவிடும். இவர்களால்தான் நமக்கு இந்த வேதனைகள் என்று உணர்ந்து, அவர்களை ஆதரிக்காமல் இருப்பார்கள். அந்தத் தலைமையையும் அவர்களுடைய சித்தாந்தங்களையும் மக்களே எதிர்க்கத் தொடங்குவார்கள்.
இப்படி அவர்களைத் தனிமைப்படுத்தி எல்லைக்குள் அடக்குவதால் அவர்களுடைய செல்வாக்கு பரவாமல் தடுக்கப்படும். அத்துடன் அந்த அமைப்பே சிறுசிறு குழுக்களாக உடையும். அவர்களுக்குள் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் இல்லாமல் வெகு விரைவில் வலுவிழந்துவிடுவார்கள்.
ஐ.எஸ். என்ற அமைப்பின் நெருப்பு தானாக அழியுமாறு விடுவதற்குச் சர்வதேசச் சமூகத்துக்குச் சுயகட்டுப்பாடு மிகமிக அவசியம். நாம் அடித்து அவர்களை அழிக்க முற்பட்டால், அதையே காரணமாகக் காட்டி மேலும்மேலும் மக்களிடம் ஆதரவு தேடுவார்கள். அனுதாபத்தில் மக்களும் அவர்களை ஆதரிப்பார்கள். அதற்கு இடமே தரக் கூடாது. ஐ.எஸ். அமைப்பு கையில் ஏந்தியிருப்பது இருபுறமும் கூர்மையுள்ள கத்தி. அந்தக் கத்தி அவர்கள் மீதே விழுந்து நாசமாக்கும்படி நாம் செயல்பட வேண்டும்.
- செல்ஸி மேனிங்,
இராக்கில் அமெரிக்கா நடத்திய போர்குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்காக 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, தற்போது சிறையில் இருக்கிறார்.
© தி கார்டியன், தமிழில்: சாரி
-
-அஷ்ரப்

இந்தியர்கள் நன்றி மரபவர்கல் அல்ல


உலகமே உற்றி நோக்கி கொண்டு இருக்கும் சர்வ சாம்ராஜ்யமான இஸ்லாமிய ஆட்சியை இன்று வரை நிலை நாட்டி கொண்டு இருக்கும்
சவூதி யின் 84 வது தேசிய நாள் இன்று
120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா நாட்டு மக்கள்
வேலை இல்லாமல் திண்டாடி கொண்டு இருக்கும் படித்தும் வேலை இல்லாமல் திண்டாடும் பட்டதாரிகளுக்கும்
கூலி தொழிலாளிகளுக்கும்
ஹிந்து முஸ்லிம் என்ற பாகுபாடு இல்லாமல் சிறந்த சம்பளத்தில் வேலை வாய்புகள் இன்று வரை வழங்கி கொண்டு இருக்கிறது
இந்தியா நாட்டுக்கு இன்று வரை சிறந்த நண்பனாக கை கோர்த்து வரும் சவூதி அரசாங்கத்திற்கு இந்நேரத்தில் வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்
இந்தியர்கள் நன்றி மரபவர்கல் அல்ல ..
அஷ்ரப்

நபிவழியில் நாம் நடப்போம்.



'நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) 'குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸ
'மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?' என்று நபி(ஸல்) கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம்தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்' என தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'பேரீச்சை மரம்' என்றார்கள்."
அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புஹாரி.
-அஷ்ரப்

டெல்லி தேசிய பூங்காவில் இளைஞரை வெள்ளைப் புலி அடித்துக் கொன்ற பயங்கரம்



दिल्ली के चिड़ियाघर में बाघ का शिकार बना नवयुवक

************************************************************************
देश की राजधानी दिल्ली के चिड़ियाघर में हुई एक अनोखी वारदात में एक सफेद बाघ ने एक शख्स को मार डाला जो बाघ के बाड़े में पहुंच गया था। पुलिस से मिली जानकारी के मुताबिक घटना मंगलवार दोपहर लगभग 1:30 बजे हुई।

 (डिसक्लेमर: विचलित करने वाली छवियां, बच्चों के लिए उपयुक्त नहीं)
********************************************************************
டெல்லி தேசிய பூங்காவில் இளைஞரை வெள்ளைப் புலி அடித்துக் கொன்ற பயங்கரம்

******************************************************************
டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் சுற்றி பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை வெள்ளை புலி அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இங்கு உலக அளவில் அழிந்து வரும் விலங்கினமான வெள்ளை புலியும் உள்ளது. இதனால் இங்கு இருக்கும் 'விஜய்' என பெயரிடப்பட்ட வெள்ளை புலியை ஆர்வமாக பார்க்க வருபவர்கள் அதிகம்.
இந்த நிலையில், வழக்கும்போல் சுற்றுலாவுக்காக வந்த ஓர் இளைஞருக்கு இந்த கொடூரம் நேர்ந்துள்ளது. இதனை நேரில் பார்த்த சக சுற்றுலா பயணி கூறும்போது, "உயிரியல் பூங்காவில் சுற்றுலாவுக்காக வந்த இளைஞர் ஒருவர், 12.30 மணி அளவில் அங்கு உள்ள அரிய வகை வெள்ளைப் புலி இருக்கும் பகுதிக்கு தனது நண்பருடன் வந்திருந்தார். தடுப்புகளுக்குள் உள்ள புலியை பார்க்கும் ஆர்வத்தில் தடுப்பை மீறி உள்ளே நுழைந்தார்.
அவர் உள்ளே விழுந்ததும், புலி அவரை நோக்கி அருகே வர பார்த்தது. இதனை கண்டு அச்சம் அடைந்த அவர், கையை கட்டி அமைதியாக நடுக்கத்துடன் சில நிமிடங்கள் இருந்தார். அவரால் வெளியே வரவும் முயற்சி செய்ய முடியவில்லை.
திடீரென புலி, அவர் மீது பாய்ந்து கழுத்தை கவ்வி, அவரை இழுத்து சென்று கடித்து குதறியது. அவருடன் வந்தவர் கம்பை நீட்டி அவரை வெளியே இழுக்க முயற்சித்தார். ஆனால் பயனில்லை" என்றார் அவர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து பல மணி நேரம் ஆன பின்னரும் இறந்தவரின் உடலை வெளியே கொண்டு வர முடியாமல் பூங்காவின் அதிகாரிகளும் போலீஸாரும் தவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் அதிர்ந்து போயினர். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக கூறிய டெல்லி தேசிய உயிரியல் பூங்காவின் மேற்பார்வையாளர் ஆர்.ஏ.கான், இறந்தவரின் பெயர் மக்சூத் (20) என்று தெரியவந்துள்ளதாக கூறினார்.
மேலும், அந்த இளைஞர் தானே சென்று தடுப்புக்குள் குதித்ததாகவும், கற்களை வீசியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியதாகவும் பூங்கா அதிகாரிகள் கூறுகின்றனர்.
*********************************
#SHOCKING
Video- ‪#WhiteTiger Kills Man At ‪#Delhi Zoo: "The man tried to run away but the tiger swiped at him, wounding his neck. Then it carried him away by the head," said Bittu, a witness who filmed the horrific incident on his mobile phone. http://bit.ly/1B36C0f
Please note: The video has disturbing images not suitable for children

 


-அஷ்ரப்

22 September 2014

குர்பானி


குர்பானியை ,,நம் வீட்டுநபர் ஒவ்வொருவருக்கும் கொடுங்கள் !
அவ்வளவு காசு என்னிடம் இல்லையே....கடனாக வாங்கணுமே ...
எங்களால் ...இந்த மாதிரி வேலையெல்லாம் பார்ப்பதற்கு ஆள் இல்லையே !
இந்த நொண்டி சாக்கு ,,உங்க மனதில் தோன்றலாம் !
வீட்டில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ..உடனே டாகடரிடம் போவீர்கள் ..அவர் எடுக்க சொல்லும் எல்லா டெஸ்டும்..எடுப்பீர்கள் !
ஆயிரக்கணக்கில் செலவிடுவீர்கள் ...தானே..?
கூட்டுகுர்பானி க்கு ஒரு இரண்டாயிரம் ரூபாய் கூட இல்லையா ..உங்களிடம் என யோசியுங்கள் !
ரப்பு ,,உங்களின் ,,குர்பானி ,,இறைச்சியை யா...சாப்பிட விரும்புகிறான் !
மற்ற நபிமார்கள் காலத்தில்,,,,நேர்ச்சை வைக்கும் ,குர்பானி பிராணியை ஒரு தனியிடத்தில் வைப்பார்கள் ..பெரும் நெருப்பு வந்து அழித்து செல்லும்...!
நம் உத்தம திருநபிக்கு த்தானே ,,,குர்பானி பிராணியை ...அறுத்து சாப்பிடலாம் ..என்ற மாபெரும் நிஹ்மத்தை வழங்கினான் !
அதற்க்கு நன்றி யுள்ள உம்மத்தாக நாமும் இருக்க வேண்டாமா >.?
ஒரே ஒரு நிமிடம் கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்கள் !
ஆசை ஆசையாய்..பெற்று வளர்த்த உங்கள் பிள்ளையை ...நீங்களே அறுத்து,,,உங்கள் கைகளினால்..அறுத்து,,அல்லாஹ்வுக்கு பலியிடுங்கள் ..என்று உங்களுக்கு கனவில் ரப்பு கட்டளை யே..இட்டாலும்....மனம் துணிந்து செய்வீர்களா ..?
அந்த ஈமான் ..வந்து விடுமா ..?
உற்று உணர்ந்து ,,உங்கள் மனதிடம் கேளுங்கள் !
முடியவே முடியாது அல்லவா...?
பிள்ளையின் தாய்தான் சம்மதிப்பாளா ..?
நீயே..வேண்டாம்...என்று கணவனை தூக்கி எறிந்துவிட்டு..பிள்ளையை தூக்கி கொண்டு ,,மறைந்து வாழ தான் ..முடிவு செய்வாள் ..!
கனவாம்..கனவு ...!அந்த ஆளுக்கு லூஸு..என்று பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ,சேர்த்து ,,சாகும்வரை ,,கிறுக்காக்கி,,வைத்து விடுவாள் ..அந்த தாய் !
இதுதானே நடக்கும் ..?
இந்த தியாகத்தை ,,நினைவு கூறுங்கள் ..என்று கியாம நாள்வரை உள்ள ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் கட்டளை இட்டான் ரப்பு !
இதற்க்கு கூலியும் தருவதாக சொல்கிறானே...!
நமக்கு நன்மையை செய்யும்போது கூட ..அதற்க்கு கூலியும் வழங்கும் ரப்பின் கருணையை நினைத்து பார்த்தீர்களா ..?
இந்த தியாகத்தை ,,மனதில் நிறுத்தி,,,குர்பானி கொடுப்பவர்கள்,,,ஹஜ் பிறை பிறக்கு முன்பே ,,நகம் ,முடி எல்லாம் களைந்து ,,மனதில் நிய்யத் வைத்து கொண்டு..(அதாவது ,,தொழுகை,,,,நோன்புக்கு நிய்யத் வைப்பதுபோல் வைக்கணும் ..என்பதும் முக்கியம் !)
பிராணியை நம் உயிருக்கு பகரமாக வாங்குவதால் ..அழகும்,,கம்பீரமும்,,,குறை இல்லாத ...தாயும் பார்த்து ..வாங்கணும் என்பதும் முக்கியம் !
ஏனென்றால் ...நாம் அழகாய் இருக்கணும்,,,குறை இல்லாதவர்களாக இருக்கணும்..என ,,விரும்புவோம் தானே..நம்மை நாமே ..?
அதனால்தான் !
காசு குறைவாக பார்த்தெல்லாம் வத்தல்,,தொத்தலை ,,வாங்காதீர்கள் !
வீட்டில் குறைந்தது மூன்றுநாள் ...வளர்த்து,,தினமும்,,அதை ஆசையுன் நம் பிள்ளைபோல்,,தடவி கொடுத்து,,,நம் கையால் ,,உணவு ஊட்டி ,,,அறுப்பது மிக மிக சிறப்பு !
அதாவது,,ரப்பு எதிர்பார்த்த ,,அந்த மகனையே...தனக்காக,,பலியிடும் ,,நோக்கம் ...கொஞ்சமாவது நிறைவேறும் ...நாம் அன்புடன் ஆசையாக ஒரு பிராணியை வளர்த்து அறுக்கும்போதும்..நம் மனம் ,,அந்த தவிப்பை ,,இப்ராஹீம் நபி ,,ரப்பின் தோழர் ...அனுபவித்த அந்த வலியை ...ஒரே ஒரு சதவீதமாவது ..அனுபவிக்கும் அல்லவா ..?
அதுதான் உண்மையான குர்பானி !



நன்றி:

Shafiyath Qadiriyahஅஷ்ரப்

இரண்டு கொடுத்தால் பத்து கிடைக்கும்!



‘‘பிரசவ வலி, மகிழ்வின் முகவரி. பிறந்து, வளரும் காலத்தில் அது சிறப்புக் குழந்தை என்று அறிந்தால் ஆரம்பிக்கும் வலியை தாய் உயிர் இருக்கும்  வரை சுமக்கிறாள். பெற்ற குழந்தையை தாயன்புக்கு வெறுக்கத் தெரியாது. அதுவே ஆழமான அன்பாக மாறும் போது தாயின் போராட்டம் சிறப்புக்  குழந்தையையும் சாதனையாளராக்குகிறது. அன்பைவிட பெரிய மந்திரமோ, மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையே. சிறப்புக் குழந்தைகளின்  முதல் தேவை அன்பு... கூடுதல் அன்பு. மற்றதெல்லாம் இரண்டாம்பட்சமே’’ என்கிறார் குழந்தைகள் மருத்துவர் மற்றும் குழந்தைகள் உளவியல் நிபுணர்  வினோதினி.

‘‘காலத்தின் கைகளில் எல்லாவற்றையும் மாற்றி எழுதும் எழுதுகோல் இருக்கிறது என்று சொல்வார்கள். சிறப்புக் குழந்தைகளைப் பற்றிய பார்வையும்  பெற்றோரின் அறியாமையுமே இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. குழந்தையின் குறைபாட்டை வெளியில் சொல்வதையே அவமானமாகக்  கருதுகிறார்கள் பலர். குழந்தையின் இயல்பான வளர்ச்சிக்கு எதிரி அந்த மனநிலையே.   சிறப்புக் குழந்தைகளை லூசு’, ‘மென்டல்என தன்னம்பிக்கையை சிதைக்கும் விதமாக அழைப்பது, ஒதுக்கி வைப்பது, குடும்பத்தின் அவமானச்  சின்னமாக கருதுவது - இவைதான் பல இடங்களில் நடக்கின்றன. குடும்பத்தின் அன்பை இழக்கும் இக்குழந்தைகள் அதற்கான இல்லங்களுக்கோசிறப்புப் பள்ளிகளுக்கோ தள்ளப்படுகிறார்கள். இப்படியான சமூகப் பார்வையை மாற்ற வேண்டிய பொறுப்பும் பெற்றோருக்கு உண்டு.

அழுகையும் பார்வைப் பரிமாற்றமும் கூட குழந்தையின் செல்ல சமிக்ஞைதான். 3 மாதங்களில் தலை நிற்க வேண்டும்... 6 மாதத்தில் குப்புற விழ  வேண்டும்... ஒரு வயதில் ஒரு வார்த்தை, 2 வயதில் 2 வார்த்தைகள் அடங்கிய வாக்கியம் பேச வேண்டும்... வயதுக்கு ஏற்ற வளர்ச்சி  குழந்தைகளிடம் இருக்கிறதா என்பதை அவ்வப்போது கவனிக்க வேண்டும். சளி, வைரஸ் காய்ச்சலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட  பெற்றோர் குழந்தைகளின் குறைபாடுகளுக்கு அளிப்பதில்லை. அவை கண்டு கொள்ளப்படாமல் விடுவதால், வாழ்வை எதிர்கொள்ள முடியாதவர்களாக  மாற்றப்படுகிறார்கள்.  

தசையில் குறைபாடுள்ள குழந்தைக்கு பென்சில் பிடித்து எழுதுவதில் சிக்கல் உண்டாகும். பேச்சுக் குறைபாடுள்ள குழந்தை, தான் எதிர்கொள்ளும்  சிக்கல்களால் மன அழுத்தத்துக்கு ஆளாகும். அதனால் இயற்கை உபாதைகளை முறைப்படுத்த முடிவதில்லை. படிப்பதைப் புரிந்து கொள்வதில்  சிக்கல், மற்ற குழந்தைகளுடன் பழகுவதில் முரண்பாடு என சுற்றம் நரகமாக மாற்றப்படும். பேச்சுக் குறைபாடு சரி செய்யப்படாத நிலையில் அனைத்து  வளர்ச்சிகளுமே பின்தங்கும் சூழல் உருவாகிறது.

வளர்ச்சிப் படிநிலைகளில், காணப்படும் குறைபாட்டின் அடிப்படையில் குழந்தைகள் உளவியல் நிபுணரிடம் நுண்நரம்பியல் அறிகுறிகள் குறித்து  சோதனை மேற்கொள்ளலாம்... பிரச்னையின் தாக்கத்தை உணரலாம். ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், மூளை தூண்டுதலுக்கான பயிற்சிகள்  மூலம் சரி செய்ய முடியும். மூளையில் ஏற்படும் சில தடைகளின் காரணமாக எழுதுவது, படிப்பது, கணக்கிடுவது என கற்றல் சார்ந்த பிரச்னைகள்  உருவாகும். அவற்றையும் தடுக்கலாம்.

உடலில் உள்ள நரம்பு, தசை ஆகியவற்றுக்கு பயிற்சி அளித்து மூளைத்திறன் தூண்டப்படுகிறது. உடல் சார்ந்த செயல்பாடுகள் இதன் மூலமே  துரிதப்படுத்தப்படுகின்றன. பிரசவத்தின் போது போதிய அளவு பிராண வாயு கிடைக்காததால், குறை மாதத்தில் பிறந்ததால், நெருங்கிய உறவில்  திருமணம் செய்வதால் உண்டாகும் மரபணு கோளாறால், எடை குறைவால் குழந்தைகளுக்கு மூளைத்திறன் பாதிப்பு ஏற்படுகிறது. வளர்ச்சிப்  படிநிலைகளில் பின்தங்கவும் இவையே காரணம். குறைபாட்டை உணர்வதுதான் முதல்படி. குழந்தைகள் மருத்துவர் மற்றும் குழந்தைகள் உளவியல்  நிபுணரின் துணையுடன் குறைபாட்டை மதிப்பீடு செய்வது அடுத்த கட்டம். குறைபாடு என்ன என்பதை மிகச் சரியாக கண்டறிந்த பிறகே அதற்கான தீர்வுகளை நோக்கிச் செல்ல வேண்டும்.

இப்படி ஆய்வு செய்து தனது குழந்தைக்கு குறை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் காலம் காலமாக பெற்றோரிடம் மிகக்  குறைவாகவே இருக்கிறது. பிரச்னையை ஏற்றுக் கொள்ளும் போதே குழந்தைக்கு 10 வயதுக்கு மேல் ஆகிவிடுகிறது. பிறகு மருத்துவரிடம் செல்லும்  போதும் என் குழந்தைக்கு எதுவும் இல்லை என டாக்டர் சொல்ல வேண்டும்என்று தாயின் மனம் பரிதவித்தபடிதான் இருக்கும். மதிப்பீட்டுக்குப் பிறகுமருத்துவர்கள் குறிப்பிடும் குறைபாடுகள் குழந்தைக்கு இருப்பதை பெற்றோர் ஏற்றுக் கொள்ள வேண்டும். முழுமையாக ஏற்றுக்கொள்ளும் போதுதான்  குழந்தையை புரிந்து கொள்ளும் சகிப்புத்தன்மையும் அதற்கான மாற்று வழிகளைத் தேடும் ஆர்வமும் உண்டாகும்.

இந்த உலகில் தீர்க்க முடியாத பிரச்னை என்று எதுவும் இல்லை. குறைபாடுகள் உறுதி செய்யப்பட்ட பல குழந்தைகள் தொடர் முயற்சி, பெற்றோரின்  ஊக்கம், சமூகத்தின் பாராட்டுகளைச் சுமந்து சாதனைச் சிகரங்களை எட்டியிருக்கிறார்கள். இப்படியான ஒரு குழந்தை சாதனை படைத்தால்பெற்றோருக்கு அதைவிடப் பேரானந்தம் வேறு என்ன வேண்டும்? குழந்தையிடம் காணப்படும் அதீத அறிவை பாராட்டுவது போல, சிறுசிறு  குறைபாடுகளையும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். புரிந்ததை ஏற்றுக் கொள்ளும் தெளிவு அவசியம். அடுத்த கட்டமாக குழந்தையுடன்  இணைந்து பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும்.

பெற்றோர் செய்யும் மிகப்பெரிய தவறு குறைந்த அவகாசத்தில் குழந்தைகளிடம் பெரிய அளவில் மாற்றத்தை எதிர்பார்ப்பதே. திருப்திப்படாத சூழலில்  குழந்தைகளுக்கு அளிக்கும் பயிற்சியை நிறுத்தி விடுவார்கள்... பயிற்சியாளரை மாற்றி விடுவார்கள்.  பேச்சில், கற்றலில், மூளையில், உடலில் என எந்தக் குறைபாடாக இருந்தாலும் மாய மந்திரங்கள் போல உடனே சரி செய்ய முடியாது. மெல்ல  மெல்லதான் மாற்றத்தை உருவாக்க முடியும். இது மாத்திரைகளால் குணமாக்கும் பிரச்னையும் அல்ல.

பெற்றோரின் அன்பு, சுற்றத்தாரின் ஆதரவு, ஆசிரியரின் புரிதல், சக நண்பனின் தோழமை, பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, அட்டென்ஷன் தெரபி  என பல உதவிகள் இது போன்ற குழந்தைகளுக்குத் தேவை. உடலையும் மூளை செயல்பாட்டையும் இணைத்து முன்னேற்றத்தை நோக்கி மெல்ல  நகர்வதற்கான பயிற்சிகள் ஒரே இடத்தில் கிடைத்தால் அலைச்சல் மிச்சம் ஆகும். இந்தக் குழந்தைகளை பார்த்து யாரும் பரிதாபப்படத்  தேவையில்லை. சாதாரண வாழ்க்கை வாழ, பயிற்சிகள் மூலம் தன்னம்பிக்கையை வலிமை பெறச் செய்ய உதவியாக இருப்பதைத்தான் இந்தக்  குழந்தைகள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள்.

விருப்பத்தையும் தனித்திறனையும் கண்டறிந்து ஊக்கப்படுத்தும் போது இந்தக் குழந்தைகளின் மனம் மகிழ்ச்சியால் நிரம்புகிறது. அந்த மகிழ்ச்சி  அவர்களது உடலில், மனதில் மிகப்பெரிய மாயத்தை உருவாக்குகிறது. சத்தான உணவும், ஆரோக்கியமான சூழலும், அன்புடன் கூடிய அரவணைப்பும்மனதுக்கு பிடித்த விஷயத்தில் ஈடுபடுத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். சாதாரணக் குழந்தையிடம் காட்டும்  அன்பைவிட, இவர்கள் கூடுதல் அன்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அன்பை இரண்டு மடங்காகத் தந்தால், பத்து மடங்காக திரும்பக் கிடைக்கும்  என்றால் யாராவது முடியாது என்று சொல்வோமா?’’

 

நன்றி குங்குமம்தோழி
_அஷ்ரப்